1. Home
  2. ஆரோக்கியம்

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா ?

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா ?

. தண்ணீர் இல்லாமல் நாம் வாழ முடியாது. ஒவ்வொரு நாளும் தவறாமல் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். ஆனால் காலையில் தூங்கி எழுந்த பின் வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

இந்த நடைமுறையை நீங்கள் தினமும் கடைப்பிடிக்க முடிந்தால் உங்கள் உடல் பல நோய்கள் மற்றும் ஆரோக்கிய சீர்கேடுகளிலிருந்து விடுபடும். நீங்களும் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருப்பீர்கள். அப்படி காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மலச்சிக்கலை அகற்றுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சாதாரணமான தண்ணீரை குடிக்க வேண்டும். அதாவது தண்ணீர் குளிராகவும் சூடாகவும் இல்லாமல் வெது வெதுப்பாக இருக்க வேண்டும். நாம் இரவில் நீண்ட நேரம் தண்ணீர் குடிப்பதில்லை.

அப்போது உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. காலையில் நீங்கள் ஒரு கப் தண்ணீர் குடிப்பது நீர்ச்சத்தை அதிகரிக்க உதவுவதோடு உங்கள் சிறுநீரும் சுத்திகரிக்கப்படும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர் குடிப்பது குறைந்தது நான்கு நன்மைகளை நமக்கு தருகிறது.

1. தண்ணீர் பற்றாக்குறை நீங்கும்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். இரவில் தூக்கத்தின் போது, மனித உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் நாம் காலையில் எழும் பொழுது தண்ணீர் சத்து குறைவாக இருக்கும். எனவே, காலையில் எழுந்த பிறகு ஒரு கப் தண்ணீர் குடிப்பதால் விரைவில் அந்த குறைபாடு பூர்த்தி செய்யப்படுகிறது.

2. மலச்சிக்கலை நீக்குகிறது

பலர் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். காலையில் இவர்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனைக்கு இது தீர்வாக அமையலாம். மேலும் இந்த பிரச்சினை இல்லாதவர்கள், காலையில் தண்ணீர் குடிப்பது அவர்களை மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தொடர்ந்து விலக்கி வைக்கும்.


காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா ?



3. வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பொழுது இது வயிற்றின் செயல்திறனை அதிகரிக்கிறது. இரவில் நடைபெறும் வளர்சிதை மாற்றம் தொடர்ந்து நடைபெற்று அதிகாலை வரை இந்த வேலை உடலில் நடக்கிறது. காலையில் நீங்கள் குடிக்கும் நீரானது உங்கள் வயிற்றில் எந்த அழுத்தமும் இல்லாமல் பார்த்து கொள்கிறது.

4. மூளையின் செயல்திறன்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மூளை நன்றாக செயல்பட உதவியாக இருக்கிறது. எப்படி என்றால் நம்முடைய இரத்தத்தின் பெரும்பகுதி நீர் என்பதை நாம் அறிவோம். நமது இரத்த ஓட்டத்தை இயல்பாக வைத்திருப்பதில் குடிநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இரத்த ஓட்டம் சரியாக இருந்தால், மூளையில் இரத்த ஓட்டம் இயல்பாகிறது. இதனால் மூளை அதிக சுறுசுறுப்பாக இருக்கும்.

அதுபோல காலையில் மட்டுமல்ல, நாள் முழுவதும், தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். இரவில் தூங்குவதற்கு முன் 50 முதல் 200 மில்லிலிட்டர் வரை தண்ணீரைக் குடிக்க வேண்டும். இரவு படுப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லது.



ஆனால் உங்கள் தூக்கம் கெடாமல் பார்த்து கொள்ள வேண்டும். இரவில் படுப்பதற்கு முன் அதிகம் தண்ணீர் குடித்தால் தூக்கத்தின் இடையே சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டி வரும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். காலையில் மட்டுமல்ல நாள் முழுவதும் தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும் ஒரு நாளில் குறைந்தது சுமார் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இது நீங்கள் எடுத்து கொள்ளும் ஜூஸ், டீ, காபி போன்ற எல்லா நீராகாரங்களும் அடங்கும். தண்ணீரை நாள் முழுவதும், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ‘கொஞ்சம்’ என்று சொல்வதன் அர்த்தம் 100 மில்லி முதல் 200 மில்லி லிட்டர்கள் வரை என்று அர்த்தம்.

பருவகாலங்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு ஏற்ப குடிநீரின் அளவு அதிகரிக்கக்கூடும். உதாரணமாக, கோடையில் அதிக வியர்வை ஏற்பட்டால் உங்கள் உடலின் நீர் தேவை 2 முதல் 3 லிட்டர் வரை தேவைப்படும்.

Trending News

Latest News

You May Like