1. Home
  2. ஆரோக்கியம்

மீன் சாப்பிடணும்னா இந்த மீனை சாப்பிடுங்க..!!


கடல் உணவு வகைகளில் மிக அதிக சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் சத்தான ஒரு மீன் சூரை மீன்.சூரை மீனில் வைட்டமின் பி12 அதிக அளவில் காணப்படுகிறது. இது டிஎன்ஏவை உருவாக்க தேவையான ஒரு ஊட்டச்சத்து. மேலும் இந்த வைட்டமின் பி12 புதிய இரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும், இரத்தசோகையை தடுக்கவும் உதவுகிறது.

சூரை மீனில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இது இதயத் தமனிகளில் சேரக்கூடிய ஒமேகா6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் எல்டிஎல் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. அதிகளவு ஒமேகா3 எடுத்துக்கொள்வது மாரடைப்பு உட்பட இதய நோய்களின் அபாயங்களை குறைக்கிறது என்று ஆய்வுகள் சொல்கிறது. சூரை மீனில் காணப்படக்கூடிய இந்த ஒமேகா-3 கண்கள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தொடர்ந்து சூரை மீன் சாப்பிட்டு வரும் பொழுது கண் வறட்சி ஏற்படுவதற்கான ஆபத்துகள் மிக அதிக அளவு குறைகிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய ஒமேகா-3 விழித்திரையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் கட்டிகளை ஏற்படுத்தக்கூடிய உயிரணுக்களின் வளர்ச்சியை குறைக்கும் தன்மை கொண்டது.


மீன் சாப்பிடணும்னா இந்த மீனை சாப்பிடுங்க..!!



மேலும் இது உடலில் ஏற்படக்கூடிய வீக்கங்களை குறைக்கும் எனவும் சொல்லப்படுகிறது. புற்று நோய்கள் ஏற்பட நாள்பட்ட வீக்கங்களும் மிக முக்கிய காரணம். சூரை மீனில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மார்பகம் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கிறது. உடல் எடை குறைப்பதற்கும் சூரை மீன் உதவுகிறது. சூரை மீனில் புரதம் அதிக அளவில் காணப்படுகிறது.

ஆனால் கலோரிகள் குறைவாக உள்ளது. இதனால் சூரை மீனை நீங்கள் சாப்பிட்டால் அது நீண்ட நேரம் உங்களுக்கு பசியில்லாமல் சாப்பிட்ட உணர்வை கொடுக்கிறது. சூரை மீனில் வைட்டமின் டி அளவு அதிகமாக உள்ளது. நம்முடைய எலும்பு ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கும் வைட்டமின் டி அவசியம்.

மேலும் சூரை மீனில் இரும்புச்சத்து, வைட்டமின் பி6, பொட்டாசியம், செலினியம், அயோடின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. சூரை மீன் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. இதில் இருக்கக்கூடிய மாங்கனீஸ், துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் செலினியம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடென்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதன் மூலமாக புற்றுநோய் போன்ற நோய் பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது.

சூரை மீன் உங்களுடைய எலும்புகளை பலப்படுத்துகிறது. சூரை மீனில் வைட்டமின் பி காணப்படுகிறது. இது எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் எலும்புகளை வலிமையாக்கும் மேலும் எலும்பு முறிவு போன்ற காயங்களில் இருந்து பாதுகாக்கிறது. சூரை மீன் உங்களுடைய சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சூரை மீனில் இருக்கக்கூடிய வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நம்முடைய சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இதில் எலாஸ்டின் என்ற புரதம் உள்ளது. இது சருமத்திற்கு மென்மையை கொடுக்கிறது. சூரை மீன் நம்முடைய வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நம்முடைய உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும், நம்முடைய உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்படவும் உதவுகிறது.

Trending News

Latest News

You May Like