1. Home
  2. ஆரோக்கியம்

பெண்கள் இவற்றை எல்லாம் மாதவிடாயின்போது கட்டாயம் தவிர்க்க வேண்டும்!!!


வயதுக்கு வந்த பின்பு பெண்கள் மாதவிடாய் நாட்களை சந்திக்க தொடங்குகிறார்கள்.இந்த நாட்களில் உங்கள் முழு உடலின் மீதும் அக்கறை காட்டி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படலாம்.

மாதவிடாய் நாட்களில் பெண்கள் செய்யக்கூடாத விஷயங்களை பார்க்கலாம்

மாதவிடாய் நாட்களில் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தினால், எவ்வளவு நேர இடைவெளியில் அதை மாற்ற வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளவும். இது மிகவும் பொதுவான கேள்வி என்றாலும், இன்றும் இது குறித்து நிறைய குழப்பங்கள் பல பெண்களுக்கு உள்ளன. நாப்கின்களை சரியான நேர இடைவெளியில் மாற்றவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

அதனால் தான் சரியான நேரத்தில் நாப்கின்களை மாற்ற வேண்டும். ஒரு நாப்கின்னை 4 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. நாப்கின் நீண்ட நேரம் ரத்தத்தை உறிஞ்சாது. அதனால் தான் சிறிது நேரம் கழித்து நாப்கின் கிழிய தொடங்குகிறது. எனவே நாப்கின்களை சீரான இடைவெளியில் மாற்ற வேண்டும். ரத்தம் வெளியேறுவதை பொறுத்து ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை நப்கின்களை மாற்றுவது நல்லது.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, சோர்வை தருகிறது. இதுப்போன்ற நேரங்களில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கிறீர்களா? கண்டிப்பாக அது தவறான விஷயம். உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். அதோடு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியையும் குறைக்கும். அதே சமயம் லேசான பயிற்சிகளை மட்டும் செய்தால் போதும். இந்த நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகள் உடலுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். பத்ராசனம், பாலாசனம் மற்றும் உத்தான சிஷோசாசனம் போன்ற ஆசனங்களை செய்யலாம். இந்த ஆசனம் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியை குறைக்க உதவும்.


பெண்கள் இவற்றை எல்லாம் மாதவிடாயின்போது கட்டாயம் தவிர்க்க வேண்டும்!!!



மாதவிடாய் காலங்களில் வயிறு உப்புசம் ஒரு பிரச்சனையாகவே மாறும். அதனால் தான் வயிறு உப்புசத்தை அதிகரிக்க கூடிய விஷயங்களை தவிர்க்க வேண்டும். அதிகமான உப்பு, உடலில் பல நோய்களை ஏற்படுத்துகிறது. மாதவிடாய் காலத்தில் உப்பை உட்கொண்டால் பிரச்சனை அதிகமாகலாம். எனவே இந்த நேரங்களில் அதிக உப்புள்ள உணவுகளை உண்ண வேண்டாம்.

மாதவிடாய் காலத்தில் நம் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறும். அதனால் இந்த நேரத்தில் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. நீங்கள் காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

Trending News

Latest News

You May Like