இது தெரியுமா ? சுரைக்காய் சாப்பிட்டால் உடலில் கெட்ட உப்புக்கள் இருக்காது ..!

சுரக்காய் சாப்பிட்டால் உடலிலுள்ள கெட்ட உப்புக்களை சிறுநீரகம் வழியாக வெளியே கொண்டு வந்து விடும்.எனவே சுரக்காய் சாப்பிட்டால் உடலில் கெட்ட உப்புக்கள் இருக்காது .
எனவே சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் , யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படும் சிறுநீரக கிருமித் தொற்று உள்ளவர்கள், அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள், கிரியேட்டினின் எனப்படும் உப்பு அதிகமாக வெளியேறுபவர்கள், சிறுநீர் வழியாக புரோட்டின் வெளியேறுபவர்கள், மொத்தத்தில் சிறு நீரக சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் சுரக்காய் ஒரு அருமையான மருந்து.
எனவே சுரைக்காயைப் பச்சையாகவோ, வேக வைத்து ,பொரியல் செய்தோ, அவியல் செய்தோ சாம்பாரில் பயன்படுத்தியோ அல்லது சூப் வடிவத்திலோ தொடர்ந்து சாப்பிட்டு வருவது சிறுநீரகக் கோளாறு உள்ள அனைவருக்கும் மிகவும் நல்லது.
சுரைக்காயில் சுமார் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், போதுமான நீர்ச்சத்து வழங்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கிறது. வைட்டமின் சத்துக்கள், நீர்ச்சத்து, நார்ச்சத்து போன்றவை சுரைக்காயில் உள்ளன.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் : உப்புச் சத்து, பொட்டாசியம், முக்கியமான தாத்துக்கள் நிரம்பிய சுரைக்காய், நமக்கு இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும். குறிப்பாக, ஹைப்பர் டென்ஷன் பிரச்சினைக்கு நல்ல தீர்வை கொடுக்கும். உடலில் கொழுப்பை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். இதயத்திற்கும், அங்கிருந்து பிற உடல் உறுப்புகளுக்கும் சீரான ரத்த ஓட்டம் நடைபெறுவதை உறுதி செய்யும்.
மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு தரும் : நிறைந்த நார்ச்சத்து, நீர்ச்சத்து ஆகியவை இருப்பதால் இது உணவை எளிமையாக செரிமாணம் செய்ய வைக்க உதவிகரமாக இருக்கும். இது மட்டுமல்லாமல் மலச்சிக்கல், அசிடிட்டி, வாயு போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவும்.மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு தரும் : நிறைந்த நார்ச்சத்து, நீர்ச்சத்து ஆகியவை இருப்பதால் இது உணவை எளிமையாக செரிமாணம் செய்ய வைக்க உதவிகரமாக இருக்கும். இது மட்டுமல்லாமல் மலச்சிக்கல், அசிடிட்டி, வாயு போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவும்.
மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் : சுரைக்காயை சாம்பார், கூட்டு போன்ற உணவாக எடுத்துக் கொள்ளலாம். சில சமயம், ஜூஸ், சூப் போலவும் எடுத்துக் கொள்ளலாம். இது மனதில் உள்ள பாரங்களை குறைத்து மன நலன் காக்கவும், உடலுக்கு புத்துணர்ச்சி தரவும் உதவிகரமாக இருக்கிறது.
எலும்புகள் வலுவாக இருக்கும்
சுரைக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைகின்றன, ஏனெனில் அதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, இது உங்கள் எலும்புகளை பலப்படுத்துகிறது.
வெள்ளை முடிக்கும் நன்மை
இது தவிர, சிறு வயதிலரிர முடி நரைக்கும் பிரச்சனையிலும் இது பலன் தரும். கூந்தலுக்கு தினமும் ஒரு டம்ளர் சுரைக்காய் சாறு குடித்து வந்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதால் வெள்ளை முடி நிறம் வராது என்று நம்பப்படுகிறது.