Logo

செளபாக்கியம் தரும் ராகுகால வழிபாடு….

ராகுகாலத்தில் எத்தனை பூஜைகள் செய்யப்பட்டாலும் துர்க்கைக்கு செய்யப்படும் பூஜைதான் சிறந்தது. ராகு காலமென்பது மூன்றே முக்கால் நாழிகை கொண்டது. இதை ஒரு முகூர்த்த காலம் என்று சொல்வார்கள். ஒரு நாழிகைக்கு 24 நான்கு நிமிடங்கள் என்பது சர்வதேச கால அலகு, எனவே மூன்றே முக்கால் நாழிகை என்பது ஒன்றரை மணிநேரம். செவ்வாய்க்கிழமையில் துர்க்கைக்கு விரதமிருந்து ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்ப பிரச்னைகள் காணாமல் போய்விடும்.
 | 

செளபாக்கியம் தரும்  ராகுகால வழிபாடு….

நல்ல செயல்களை ராகு காலத்திலும், எம கண்டத்திலும் செய்யக்கூடாது என்று சொல்கிறோம். ஆனால் வாழ்வில்  நல்ல விஷயங்கள் நடக்க பிரார்த்தனை செய்ய  வேண்டிய  காலமே ராகுகாலம் தான். துர்க்கை வெற்றிக்கு உரிய தெய்வம். பார்வதி தேவியின் ஆங்கார வடிவங்களில் ஒரு வடிவமாக திகழ்பவள். ராகுவின் அதிதேவதையாக விளங்குபவள் துர்க்கை என்பதால்  ஞாயிறு, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகுகாலத்தில் இவளை வேண்டினால் வேண்டியதை மனமுவந்து அளிப்பாள் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.இவள் கண்ணனுக்கு மூத்தவள் என்பதால் விஷ்ணுவின் அவதாரங்களின் பிறந்த திதிகளான அஷ்டமி, நவமி ஆகியவையும் இவளுக்கு உகந்தவைதான். 

ராகுகாலத்தில் எத்தனை பூஜைகள் செய்யப்பட்டாலும் துர்க்கைக்கு செய்யப்படும் பூஜைதான் சிறந்தது. ராகு காலமென்பது  மூன்றே முக்கால் நாழிகை கொண்டது. இதை ஒரு முகூர்த்த காலம் என்று சொல்வார்கள். ஒரு நாழிகைக்கு 24 நான்கு நிமிடங்கள் என்பது சர்வதேச கால அலகு, எனவே மூன்றே முக்கால் நாழிகை என்பது ஒன்றரை மணிநேரம்.  செவ்வாய்க்கிழமையில் துர்க்கைக்கு விரதமிருந்து ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்ப பிரச்னைகள் காணாமல் போய்விடும். 

செவ்வாய்க்கும், ராகுவுக்கும் கிரகப் பதவி கிடைப்பதற்காக அவர்கள் சண்டிகையை வழிபட்டார்கள் என்பது ஐதிகம். அவர்களுக்குரிய இந்நாளில், உரிய நேரத்தில் இந்தப் பூஜையைச் செய்தால்  எண்ணிய காரியம் ஈடேறும். குடும்பத்தில் பிரச்னைகள் இல்லாமலிருந்தாலே வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும். அதனால் தான்  பெண்கள் குடும்ப நலனுக்காக செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்க்கைக்கு மிகவும் பிடித்தமான எலுமிச்சைப்பழ தீபமேற்றி வழிபடுகிறார்கள்.

எலுமிச்சைப் பழத்தில் விளக்கேற்றுவதற்கு முன்  இந்த மந்திரத்தைச் சொல்லலாம். பழத்தை நறுக்கும் போது ஐம் (சரஸ்வதியைக் குறிக்கும்) என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். சாறைப்பிழிந்து விளக்காக தோலை திருப்பும் போது க்ரீம்  (லஷ்மியைக் குறிக்கும்) என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பஞ்சு திரியை இட்டு எண்ணெய் ஊற்றும்போது க்லீம்  (காளியைக் குறிக்கும்) என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். விளக்கை துர்க்கையின் முன் கொண்டுவந்து விளக்கேற்றும் போது சாமுண்டாய விச்சே ( லஷ்மி,சரஸ்வதி, காளி கடாட்சம் என அனைத்தையும் வழங்கும் தெய்வமே )என்று சொல்லியபடி தீபமேற்ற வேண்டும். அதன் பிறகே கோயில் பிரகாரத்தைச் சுற்றி வரவேண்டும்..குழந்தைப் பேறு, திருமணத்தடை, மாங்கல்ய பலன், குடும்ப ஆரோக்யம், குடும்பத்தில் நிம்மதி, வியாபார விருத்தி என சகலத்துக்கும் துர்க்கையை வேண்டி  செவ்வாய்க்கிழமை விரதமிருந்து  வழிபட்டால்  செளபாக்கியத்தோடு நம்மை வைத்திருப்பாள் அன்னை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP