விசாக நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய தலம்...!

விசாக நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்கள் செல்லவேண்டிய தலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பண்பொழியில் வீற்றிருக்கும் அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில். திருக்குமாரசுவாமியை தரிசனம் செய்யுங்கள்
 | 

விசாக நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய தலம்...!

விசாக நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்கள் செல்லவேண்டிய தலம் திருநெல்வேலி மாவட்டத்தில்  உள்ள பண்பொழியில் வீற்றிருக்கும் அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில்.

திருமலைக்கோயிலில் ஆரம்பத்தில் ஒரு வேல் மட்டும் இருந்து வந்தது. பூவன் பட்டர் என்னும் அர்ச்சகர்  வேலுக்கு பூஜை செய்து வந்தார். பூஜை முடித்து ஒரு நாள் மரத்தடியில் படுத்து கிடக்கும் போது கனவில் வந்த முருகன்.. இந்த மலை எனக்குச் சொந்தமானது... நான் இங்கிருந்து சற்றுதொலைவில் அமைந்திருக்கும் கோட்டைத்திரடு என்னும் இடத்தில் சிலைவடிவில் இருக்கிறேன். எறும்புகள் சாரையாக ஊர்ந்துசெல்லும் குழியில் என்னை காணலாம். அந்த சிலையைக் கொண்டு வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்யுங்கள் என்றார்.

பந்தள மன்னருக்கு தகவல் தெரிவித்தார் பூவன் பட்டர். பிறகு முருகனது விருப்பப்படி அவரது சிலையைக்  கொண்டு வந்துஇந்தமலையில்பிரதிஷ்டை செய்தார்கள்.  அந்த சிலையில் மூக்கில் கடப்பாரை  பட்டு சிறுதுளி உடைந்து  விட்டது. அந்த உடைப்பட்ட இடம் பார்க்க அழகாக இருந்ததால் கிராம மக்கள் முருகன் என்பதற்குப் பதிலாக மூக்கன் என்று வைத்துவிட்டார்கள். மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் திருமலை முருகனின் பெயர்களையே குறிக்கும். குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து   இறந்துவிட்டால் குழந்தைக்கு இந்தப் பெயர்களையே வைப்பதாக நேர்ந்துக்கொள்வார்கள். அந்த குழந்தையும் பிழைத்துவிடும்.

இக்கோவிலை அடைய 623 படிக்கட்டுகளை ஏற வேண்டும். இந்தப் படிகட்டுகள் தேவபடிக்கட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் உறையும் இடமாக   இவை இருப்பதால் இங்கு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய் வது நல்லது.

மூலவர் முத்துக்குமாரசுவாமி. இவரை மூக்கன் என்று அன்போடு அழைக்கிறார் கள். மலைமீது திருமலைக்காளி அருள்பாலிக்கிறாள். இங்கு விநாயகர் சன்னி திக்கு 16 படிக்கட்டுகள் இருக்கின்றன. வாழ்வில் 16 செல்வங்களையும் அரு ளுவதற்காகவே 16 படிக்கட்டுகளும் இருப்பதாகநம்புகிறார்கள்.

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேரம் கிடைக்கும்போது அல்லது பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று  திருக்குமாரசுவாமியை வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களையும்பெறலாம். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுமே முருகப்பெருமானுக்கு உகந்தது. இதில் விசாகம் நட்சத்திரம் என்று பார்த்தால் வி என்றால் மேலான என்றும், சாகம் என்றால் ஜோதி என்றும்பொருள்படும். இந்த நட்சத்திரம் மூன்று வகை ஒளிக் கி ரகணங்களைக் கொண்டது. விமல சாகம், விபவசாகம்,விபுலசாகம் ஆகும். இந்த கிரகணங்கள் எப்போதும் இந்தத் திருமலையில்படுவதால் விசாக நட்சத்திரக்காரர்கள் அனுதினமும் இத்தலத்துக்குவந்து திருக்குமார சுவாமியை வணங்கலாம் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

வேண்டியதெல்லாம் அருளும் திருக்குமாரசுவாமியை தரிசனம் செய்யுங்கள். மன நிறைவோடு செல்லுங்கள்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP