மெய்ப்பொருள் நாயனார் -1

மெய்ப்பொருள் நாயனார் -1
 | 

மெய்ப்பொருள் நாயனார் -1

சேதி நாடு என்றழைக்கப்படும் திருக்கோவிலூர் நகரம் சோழவள நாட்டுக்கும், தொண்டை நாட்டுக்கும் இடையில் அமைந்துள்ள நகரம். இவை இரண்டுக்கும் இடையில் அமைந்திருப்பதால் இவை நடுநாடு என்றும் அழைக்கப்படுகிறது. 
இந்நகரத்தில் சேதியர் என்னும் மரபினர் அதிகமாக வாழ்ந்துவந்தார்கள்.

தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் சிறப்புடன் விளங்கிய இந்நகரில் மலாடர் என்னும் மரபு வழி வந்தவர்கள் ஆட்சி புரிந்தனர். சிவபெருமானிடத் தும், அடியார்களிடத்தும் அன்பு கொண்ட இம்மரபில் தோன்றியவர் மெய்ப் பொருள் நாயனார். அறநெறி தவறாமல் ஆட்சி புரிந்து மக்களின் அன்பை பெற்று வாழ்ந்துவந்தார். வீரத்தில் சிறந்துவிளங்கிய இவர் சிவனடியார்களைப் போற்றி  வணங்கும் சிவநேசராகவும் இருந்தார்.

சிவனடியார்களின் திருவெண்ணீறு தரித்த தோற்றத்தை  மனக் கண்ணில் கொண்டிருப்பார். மன்னரிடம் இருந்த  பொருளும் செல்வமும் சிவாலயங் களின் திருத்தொண்டு புரிய உதவியது. வீரத்தில் சிறந்துவிளங்கிய மெய்ப் பொருள் நாயனாரின் மீது போர் தொடுத்து பலமுறை  தோற்று புறமுதுகு காட்டி ஓடியவன் எதிரி நாட்டு மன்னன் முத்தநாதன். வீரத்தில் நேரிடிடையாக மோத இயலாமல் சூழ்ச்சியால் வென்றிட திட்டமிட்டான். 

மெய்ப்பொருள் நாயனாருக்கு  அடியார்களிடம் கொண்ட பக்தியை நன்கு உணர்ந்த முத்தநாதன் சைவ வேடம் பூண்டான். அடியார்களை போல் வேட மிட்டவனுக்கு திருநீறு பூசும் முறை தெரியாததால் மேனி முழுக்க அப் பிக் கொண்டான். கையில் ஓலைக்கட்டில் கத்தியைச் செருகி யாரும் அறியா மல் மறைத்துக்கொண்டான். தைரியமாக திருக்கோவிலூருக்கு சென்றான். வழி நெடுக்க காணும் மக்கள் மன்னனை போலவே சிவனடியாராக இவனை நினைத்து வழிநெடுகிலும் அவனை வரவேற்று வணங்கினார்கள். 

அரண்மனையை நோக்கி சென்ற முத்தநாதன் வாயிலில் நின்றிருந்த காவ லாளியிடம் அரசனை பார்க்க வேண்டும் என்று  கூறினான். அடியாரை வர வேற்ற காவலாளி அரசன் உறங்கும் நேரம் இது. காலம் அறிந்து உள்ளே வர வேண்டும் என்றான். முத்தநாதன் அவன் வார்த்தைகளை செவிமடுக்காமல் அவனை தவிர்த்து அரசனுக்கு தருமத்தை அருளவே இங்கு வந்திருக்கிறோம் என்று மன்னன் துயிலுறங்கிய இடத்துக்கு சென்றான்.

மெய்ப்பொருள் நாய னாரின் அருகில் அரசியார் அமர்ந்திருந்தார். சிவனடியாரின் அரவம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அரசியார் அஞ்சியபடி அரசனை எழுப்பினாள்.
சிவாயநம என்று குரல் கொடுத்த முத்தநாதனின் குரலை கேட்டு அரசர் மனம் மகிழ்ந்தார். அருகில் நின்றிருந்த சிவனடியாரைக் கண்டு மகிழ்ந்த அரசர் திருநீறு அணிந்து வந்த முத்தநாதனை அடியார் என்று நினைத்து அவரது பாதம் பணிந்து வணங்கினார். அடியேனிடம் என்ன வேண்டுகிறீர்களோ அதை செய்ய காத்திருக்கிறேன் என்று கூறினார்.
பண்டையகாலத்தில் எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளிய ஆகம நூல் ஒன்று எம்மிடம் உள்ளது.

அதை  உன்னிடம் தந்து அருளவே யாம் இங்கு வந்துநின்றோம் என்று கையிலிருந்த ஏட்டுச்சாவடியை  காண்பித்தான். அதை உண்மை என்று நம்பிய மெய்ப்பொருள் நாயனார் பகைவனை வென்ற வீரன் போல் முகத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அரசியாரும் மனம் மகிழ்ந் தாள். இம்மையில் எனக்கு இதை விட பேறு வேறெதுவுமில்லை என்ற மெய்ப் பொருள் நாயனார் அந்த ஆகம நூலின் பொருளையும் தாங்களது திருவாயால் கேட்க விரும்புகிறேன் என்று உயர்ந்த ஆசனத்தில் அவனை அமரவைத்து அரசியாருடன் தரையில் அமர்ந்தான்.

அடியாரின் வேடத்தில் இருந்த முத்தநாதன்  மன்னனையும் அரசியாரையும் பார்த்து யோசிப்பது போல் பாவனை செய்தான். மெய்ப்பொருள் நாயனார் தாங்களின் தயக்கத்துக்கு காரணம் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்றார். இல்லை இந்த ஆகம நூலைப் பற்றிய பொருளை எடுத்துரைக்கும் போது  தங்களுடைய இல்லத்தரசியார் அருகில் இருக்க கூடாது என்று இந்நூல் சொல்கிறது என்றார். அரசியாரும் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

அதன் பிறகு முத்தநாதன் தனது திட்டத்தை தொடங்கினான். சிவனடியாராக பொய் வேடம் பூண்டு சிவபக்தி மிகுந்த அடியாரை மாய்க்க முடியுமா? நாளை பார்க்கலாம்… 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP