பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள் சதயம் நட்சத்திரக்காரர்கள்… 

ராகு பகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மூன்றாவது நட்சத்திரம் சதயம் நட்சத்திரம். 27 நட்சத்திரங்களின் வரிசையில் 24 ஆவதாக வரும் நட்சத்திரம் இது.
 | 

பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள் சதயம்  நட்சத்திரக்காரர்கள்… 

ராகு பகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மூன்றாவது நட்சத்திரம் சதயம் நட்சத்திரம். 27 நட்சத்திரங்களின் வரிசையில் 24 ஆவதாக வரும் நட்சத்திரம் இது. 

சதயம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் பிறருக்கு உதவி செய்வதை விரும்புவீர்கள். உழைத்து முன்னேற வேண்டும் என்னும் கொள்கையைக் கொண்டிருப்பீர்கள். தெளிவான திட்டமிடுதலுடன் வாழ்க்கையை வாழ்வீர்கள். பிரச்னைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் முழு சுதந்திரம் கொடுத்தாலும் கண்டிக்க வேண்டிய தருணத்தில் கண்டிக்க தவறமாட்டீர்கள். படிப்படியாக வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சதயம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்னும் கொள்கையை கடைப்பிடிப்பீர்கள். துணிச்சலுடன் எதையும் செய்வீர்கள். சமயத்துக்கு ஏற்ப நடந்துகொள்ளும் சாமார்த்தியசாலிகள். பொறுமையாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை கடைப்பிடிப்பீர்கள்.

சதயம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் நேர்மையானவர்கள். இயன்ற காரியங்களை மட்டும் பொறுப்பேற்று கொள்வீர்கள். சுயநலமில்லாமல் பொதுநலன் கருதி உழைப்பவர்களாக இருப்பீர்கள். உதவி என்று யாரிடமும் கேட்க மாட்டீர்கள். யார் என்ன சொன்னாலும் அதை ஆராய்ந்து பார்த்து இறுதியில் முடிவெடுப்பீர்கள். பல போராட்டங்களை கடந்தே சாதனை படைப்பீர்கள். வெளியில் தைரியமிக்கவராக காட்டிக் கொண் டாலும் உள்ளுக்குள் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.

சதயம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் இறை பக்தியில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். பெரியோர்களிடம் அன்பு  செலுத்துவீர்கள். சட்டென்று கோபம் கொள்ளும் நீங்கள் கோபம் வந்தால் இருக்கும் சூழ்நிலையை மறந்துவிடுவீர்கள். சுய கெளரவத்துடன் வாழவே விரும்புவீர்கள். செல்வாக்கோடு வாழ்வீர்கள்.

சதயம் நட்சத்திரத்தைக் கொண்டவர்கள் பெரும்பாலும் சுய தொழில் புரிபவர்களாக இருப்பார்கள். சிறந்த தொழிலதிபர்களாக வருவதற்கும் வாய்ப்புண்டு. திறமையான தொழிலில் ஈடுபடுபவர்களாக இருப்பீர்கள். ஆரோக்கிய குறைபாட்டை கொண்டவர்களாக இருப்பீர்கள். எல்லோருக்கும் உதவும் குணத்தை இயல்பாக கொண்டிருப்பீர்கள். வாழ்வில் நடுகட்டத்தில் உயர் பதவிகள் தேடிவரும். பயணங்களில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். கடல் கடந்து செல்வதை விரும்புவீர்கள். அரசு பணியில் உயர்ந்த பதவியை பெறுவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவீர்கள்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP