கெட்டவனிலும் நல்லவன் உண்டு…!

கெட்டவனிலும் நல்லவன் இருக்கிறார்கள் என்பதை இறைவனே மகாபாரத தத்தில் உணர்த்தியிருக்கிறார்.
 | 

கெட்டவனிலும் நல்லவன் உண்டு…!

குருக்ஷேத்திர போர் 18 நாட்கள் நடைபெற்றது தெரியும். போர் தொடங்கி 13 நாட்கள் முடிந்த நிலையில் 14 வது நாள் பாண்டவர்கள் போருக்கு புறப்படும்போது  இன்று அதிக எண்ணிக்கையில் கெளரவர்களைக் கொன்று குவிப்போம் என்று சபதம் எடுத்தவர்களுக்கு வீரத்திலகமிட்டு பாஞ்சாலி வழியனுப்பி வைக்க வாயில் வரை  வந்தாள்.

அர்ஜூனது தேரில் சாரதியாக இருந்த கண்ணன்   தன்னுடைய பூப்பாதம் வைத்து தேர் மீது ஏறி அமர்ந்தான். அன்று ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள் பாஞ்சாலி.  ”காப்பவனும் நீதான்.. கரையேற்றுபவனும் நீதான்..அழிப்பவனும் நீதான்... கண்ணா.. இன்று யார் யாரால் கொல்லப்படுவார்கள் என்று சொல்லேன்..” என்று கேட்டாள். வழக்கத்தை விட தீவிர யோசனையில் இருந்த கண்ணன் பாஞ் சாலியின்  கேள்வியில்  நினைவு திரும்பினான்.

”என்ன கேட்டாய்? பாஞ்சாலி” என்றான் ஏதும் அறியாதது போல.. ”இல்லை  உல கத்தை இயக்குபவனும் நீயே.. இயங்குபவனும் நீயே..  உயிர்களை அழிப்பதும்  நீயே.. அழியப்படுவதும்  நீயே.. இன்று யார் யாரால் கொல்லப்படுவார்கள் என்று சொல்லேன் கண்ணா. மனம் நிலையின்றி தவிக்கிறது” என்றாள். பெரும் சத்தத்தோடு சிரித்த கண்ணன் ”முன்கூட்டியே தெரிந்துகொள்ள விரும்புகிறாயா பாஞ்சாலி... நல்லதுதான் உன்னால் முடிந்தால் யாரென்று சொல்லேன் .  உன் னால் கண்டறியப்படுகிறதா என்று பார்க்கலாம். இன்று போரில் கொல்லப் படுபவன் இருதரப்பினரைக் காட்டிலும் ஏன் இந்த உலகில் இவன் தான் மிக மிக நல்லவன். யாரென்று யூகித்துக்கொள்” என்று தேரை கிளப்பினார்.

பாஞ்சாலிக்கு தனது கணவன் தர்மன் நினைவு வந்தது. வாழ்ந்தால் தர்மரை போல் வாழவேண்டும் என்று மக்கள  அனைவரும் பேசுவார்களே.. தர்மநெறி தவறாத அவரது வாழ்வு இன்றோடு முடியப்போகிறதா? என்று பலவாறு குழம்பினாள். இன்று ஐவரும் திரும்புவார்களா.. அல்லது நால்வர் மட்டுமே திரும்புவார்களா? என்று கண்ணனை நினைத்து வேண்டினாள்.

போர்க்களத்தில் தன் முன் வந்து நின்ற விகர்ணனைக் கண்ட பீமன் அவனை எச் சரித்தான். ”விகர்ணா நான் உன் சகோதரர்கள் துரியோதனனையும், துச்சாதன னையும் வதம் செய்ய வந்திருக்கிறேன். 100 கெளரவர்களில் நீ மட்டும்தான் தர்மம் தவறாமல் நடந்துகொண்டாய். சபையில்  நாங்கள் ஒன்றும் அறியாமல் நிற்க. பாஞ்சாலி கதற. பீஷ்மர் கூட அமைதிகாத்தார். ஆனால் உன் அண்ணன் என்று தெரிந்தும் நீ தவறு என்று வாதாடினாய்... அதனால் உன்மீது எனக்கு எந்த  பகையுமில்லை. அதனால் எங்களுடன் வந்துவிடு. நாங்கள் உனக்கும் முடி சூட்டுகிறோம்” என்றான் அன்பு பொங்க...

சத்தம் போட்டு சிரித்தான் விகர்ணன். ”நான் தர்ம வழியை கடைப்பிடிப்பது உண்மை தான். பெண்ணுக்கு அநீதி நடக்கும் போது பொங்கியெழுந்தது நியாயம். ஆனால் அதே நேரம் போரில் என் சகோதரன் பக்கம் இருப்பதுதான் நியாயம். முடிந்தால் என்னை  கொன்று என் அண்னனை நெருங்கு” என்றான். பொறுமை யிழந்த பீமன் தன் கதாயுதத்தால் விக்ரணனை  பிளந்தான். வீரமரணத்திலும் புன்னகைத்தப்படி உயிர் துறந்தான்  விகர்ணன்.

மாலை ஐவரும் வீடு திரும்பியதைக் கண்ட பாஞ்சாலியை நெருங்கிய கண்ணன், ” பாஞ்சாலி, விகர்ணன் தான் அந்த நல்லவன். நல்லவர்கள் கூட்டத்தில் நல்ல வர்கள்  இருப்பதும், நல்லவர்களாக உருமாறுவதும்  ஆச்சரியமல்ல.. ஆனால் கெட்டவர் கூட்டத்தில் நல்லவனாக இருப்பது மிகவும் கடினம். உனக்கு அநியாயம் நேர்ந்த போது குரல் கொடுத்த விகர்ணன் போரில் தோற்போம் என்று தெரிந்தும்  தன் சகோதரனுடன் இருப்பது தான் நியாயம் என்று  போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தான். அவனது தர்ம கவசம்தான் கெளரவர்களை அழிக்க முடியாமல் காத்தது. அவன் இறந்து அதற்கு வழியை காண்பித்திருக்கிறான்” என்று விளக்கி னார். நல்லவனை அழித்துவிட்டோமே என்று பாண்டவர்கள்  கண்ணீர் சிந்தினார் கள்.

கெட்டவனிலும் நல்லவன் இருக்கிறார்கள்  என்பதை இறைவனே  மகாபாரத தத்தில் உணர்த்தியிருக்கிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP