முனையடுவார் நாயனார்

முனையடுவார் நாயனார்,63 நாயன்மார்களில் இவரும் ஒருவர் ஆவார். சோழநாட்டில் திருநீடூர் என்னும் ஊரில் வேளாண் மரபில் தோன்றியவர் இவர். இவரைப் பற்றி திருத்தொண்டத் தொகையில் அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன் என்று குறிப்பிடுகிறது.
 | 

முனையடுவார் நாயனார்

முனையடுவார் நாயனார்,63 நாயன்மார்களில் இவரும் ஒருவர் ஆவார். 

சோழநாட்டில் திருநீடூர் என்னும் ஊரில் வேளாண் மரபில் தோன்றியவர் இவர். 

இவரைப் பற்றி திருத்தொண்டத் தொகையில் அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க்

 கடியேன் என்று குறிப்பிடுகிறது.

முனையடுவார் நாயனார் வீர வேளாளர் மரபில் தோன்றியவர். 

அதனால் தம்முடன் வேறு பல வீரர்களையும் அமைத்துக்கொண்டு வீர அணி

 அமைத்து வாழ்ந்தார். போர்க்காலத்தில் தங்களை நாடி வரும் மன்னர்களுக்கு உதவி புரியம் வகையில் அவர்களுடன் இணைந்து போர்புரிந்து எதிர் நாடுகளை வெற்றி பெற 

இவரது வீர அணி பெரிதும் உதவியாக இருந்தது. 

இது பழங்காலத்தில் மன்னர்களால் ஊக்குவிக்கப்பட்ட தொழிலும் கூட என்பது 

குறிப்பிடத்தக்கது. இதையே தம் தொழிலாக கொண்டிருந்த முனையடுவார் 

தமது வீரத்துக்கு கிட்டும் செல்வத்தையும் பொருளையும் சிவன் பால் அன்பு கொண்டு 

சிவனடியார்களுக்கு பணி செய்வது சிவனுக்கே தொண்டாற்றுவது என்னும் 

மனப்பான்மையை கொண்டு திருத்தொண்டு செய்துவந்தார்.

பெரும் செல்வங்களை சிவத்தலங்கள் திருப்பணிக்கும் அடியார்களுக்கும் எவ்வித 

குறை நேராமல் பயன்படுத்தி வந்தார்.  எதிரிகளிடம் அஞ்சாமல் போர்புரிந்து பெற்ற 

செல்வத்தை மாறாமல் சிவனடியார்களுக்கு அளித்து மகிழும் இவரது புகழை 

அடியார்களுக்கு பரப்பினார் திருநீடூர் பெருமான். பொன்னும் புகழும் மேன்மேலும் உயர

 அடியார்களுக்கு தொண்டு புரிந்து பல்லாண்டு காலம் பூமியில் வாழ்ந்து இறுதியில் 

எம்பெருமானின் திருவடியைச் சரணடைந்தர்

 பங்குனி மாதம் பூசம் நட்சத்திரத்தில் முனையடுவார் நாயனாரின்

 குருபூஜை கொண்டாடப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP