புண்ணியம் தரும் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்

உயிர்களை இயக்கும் சக்தி படைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் .எத்தனையோ பொருட்கள் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்விப்பது ஏன்? எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்படுகின்றது. அன்னமும் லிங்க வடிவில் உள்ளது. அன்னத்தால் இறைவனை அபிஷேகிப்பது மிகச் சிறப்பானது .
 | 

புண்ணியம் தரும் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்

உயிர்களை  இயக்கும் சக்தி படைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் .எத்தனையோ பொருட்கள் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்விப்பது ஏன்? எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்படுகின்றது. அன்னமும் லிங்க வடிவில் உள்ளது. அன்னத்தால் இறைவனை அபிஷேகிப்பது மிகச் சிறப்பானது .ஐப்பசியில் வரும்  பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும்பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் பிரகாசிக்கிறது.ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சிவாலயங்களில் சாயரட்சையின் போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

தானத்தில் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்னதானம் மட்டுமே. அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேகத்தின் போது,வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.

அன்னம்  சிவவடிவமே

அண்டம் முழுக்க சிவவடிவம் தான். சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.அன்ன அபிஷேகம் மட்டும்தான் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்த சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும்.நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள்.

பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும். லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும்.எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று நீர்வாழ் உயிர்களுக்கு உணவாக கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள்.எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.எனவே அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாழும் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.

நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.

பஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியம்.

அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது. அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது. அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது.ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது.

இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது. எனவே அன்னாபிஷேக தினத்தில் சிவனை வணங்கினால் பஞ்சபூதங்களை வழிபட்ட கிடைக்கும்.

நாளை ஐப்பசி பவுர்ணமி, அன்னம் நிறைந்த சிவபெருமான் தரிசனம் நமக்கு பாப விமோசனம் .

ஓம் நமச்சிவாய !

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP