Logo

ஷீரடியில் ஸ்ரீ இராம நவமியும் உருஸ் திருவிழாவும்

பாபா இந்துவா முஸ்லீமா... இன்றும் பக்தர்கள் இந்தக் கேள்வியை கேட்காமல் இருப்பதில்லை. பாபா மசூதியில் இருந்ததால் அவர் முஸ்லீம் என்றும்.... உதி என்னும் பிரசாதம் அளித்து சங்கடங்களைத் தீர்த்த தீர்க்கதரிசி என்பதால் அவர் இந்து என்றும் மக்கள் கொண்டாடினார்கள்.
 | 

ஷீரடியில் ஸ்ரீ இராம நவமியும் உருஸ் திருவிழாவும்

பாபா இந்துவா முஸ்லீமா... இன்றும் பக்தர்கள் இந்தக் கேள்வியை கேட்காமல் இருப்பதில்லை. பாபா மசூதியில் இருந்ததால் அவர் முஸ்லீம் என்றும்.... உதி என்னும் பிரசாதம் அளித்து சங்கடங்களைத் தீர்த்த தீர்க்கதரிசி என்பதால் அவர் இந்து என்றும் மக்கள் கொண்டாடினார்கள்.

ஒருமுறை பாபாவின் பக்தர் மகல் சபதிக்கு ஒரு விநோதமான ஆசை ஏற்பட்டது. பாபாவுக்கு சந்தனம் பூச வேண்டும் என்பதுதான் அது.. அதனால் சந்தனத்தை அரைத்து பாபாவின் மேல் பூச முயன்றார். மசூதியில் சந்தன அபிஷேகமா என்று முஸ்லீம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மீறி நடந்தால் பல்வேறு கலவரங்கள் உண்டாகும் என்றும் எச்சரித்தார்கள்.

மகல் சபாபதி பயந்து பாபாவிடம் முறையிட்டார். ”உன் ஆசையை நீ நிறைவேற்று நான் இருக்கிறேன்” என்றார் பாபா... பாபாவின் மேனி முழுவதும் சந்தனத்தால் பூசப்பட்டது. இதைக் கண்ட முஸ்லீம் மக்களால் பாபாவை மீறி எதுவும் செய்ய முடியவில்லை... இரு பெரும் மதங்களின் வாக்குவாதங்கள் பாபாவுக்குள் வேடிக்கையை உண்டுபண்ணியது.. எனினும் சர்ச்சைகள் வலுக்கவே கோபம் உற்ற பாபா தன் ஆடைகளை களைந்தார். அவர் அருகில் நிற்கும் முஸ்லீம் இந்து மக்களிடம் கேட்டார் ”இப்போது சொல்லுங்கள் நான் இந்துவா? முஸ்லீமா” என்றார்.

பாபாவின் பக்தர் சந்தோர்க்கர் ”பாபாவின் உயிர் உறுப்பு வெட்டப்படவில்லை அதனால் அவர் இந்துதான்” என்றார்.. முஸ்லீம் பக்கீரால் வளர்க்கப்பட்டதால் இவர் முஸ்லீம் தான் என்று வாதிட்டார்கள்.. அப்படியானால் பாபாவின் காது குத்தப்பட்டிருக்கிறதே அவர் இந்து தானே என்றார்கள் விடாப்பிடியாக... அமைதி யாக நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த பாபா.... அனைவரையும் அமைதியாக இருக்க சொன்னார்.

பாபா அமைதியாக சொன்னார்” நானே அல்லா! நானே லட்சுமி நாராயணன். நீங்கள் எப்படி என்னை பார்க்கிறீர்களோ அப்படியே நான் இருப்பேன்” என்றார். ஒருமுறை  ஸ்ரீமந்நாராயண பக்தர் ஒருவர் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு ஷீரடிக்கு வந்தார். மசூதிக்குள் இருக்கும் பாபாவை எப்படி போய் பார்ப்பது என்று குழப்பத்தில் வாயிலிலேயே நின்றார்.  

மசூதியினுள் ஸ்ரீமந்நாராயணின் உருவம் தெரிந்தது. ஓடிச் சென்று பாபாவை வணங்கினார். இப்படித்தான் நாம் வேண்டும் தெய்வங்களின் உருவிலே நமக்கும் பாபா காட்சிஅளித்தார். 

பாபவின் பக்தர் ஒருவர்  பாபாவிடம் வேண்டி ஆண்குழந்தை பிறந்ததால் உருஸ் கொண்டாட விரும்பினார். ஸ்ரீ ராம நவமி அன்று உருஸ்விழா கொண்டாடப்பட் டது. 1912 ஆம் ஆண்டு முதல் உருஸ் விழாவும்.. ஸ்ரீ இராம நவமி விழாவும் கொண்டாட அனுமதித்தார். ஸ்ரீ இராம நவமி அன்று பகலில் இரண்டு கொடி களுடன் ஊர்வலம் நடைபெறும்.. இரவில் சந்தனக்கூடு  ஊர்வலம் நடைபெறும்... நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இன்றுவரை இரு மதத்தினரும் திரளாகக் கூடி கொண்டாடிவருகிறார்கள்... 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP