சக்தி பீடம் - 4: மதுரை மீனாட்சி

மீனாட்சி அம்மன், நின்ற கோலத்தில் இடைநெளிந்து திருக்கரங்களில் கிளியை ஏந்தி அருள்பாலிக்கிறாள். இவளுக்கு இடப்பக்கத்தில், சுந்தரேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் அம்மனின் இடப்பாகத்தில் இறைவன் அருள்புரிகிறார்.
 | 

சக்தி பீடம் - 4: மதுரை மீனாட்சி

சக்தி பீடங்கள் 51-ல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது மதுரை மீனாட்சி திருத்தலம். போகத்தையும், முக்தியையும் வேண்டுபவர்களுக்கு, சித்திதரும் தலம் என்று இத்திருத்தலத்தை திருவிளையாடல் புராணம் போற்றியிருக்கிறது. 18 ச சித்தர்  பீடத்தில் இதுவும் ஒன்று. அம்மனின் சக்தி பீடங்களில் இது, ராஜமாதங்கி சக்தி பீடம் ஆகும். சக்தி பீடத்தில் இவை மந்த்ரிணீ பீடம் என்று அழைக்கப்படுகிறது.

தலவரலாறு:
கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாஸு என்பவன், சிறந்த சிவபக்தனாக வாழ்ந்தான். எம்பெருமான் அருளால் அவனுக்கு மகள் பிறந்தாள். வித்யாவதி என்று பெயர் சூட்டப்பட்ட அவள், சிறு வயது முதலேயே அம்மன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். பூலோகத்தில் இருக்கும் அன்னையை வழிபட வேண்டும் என்னும் ஆசை அவளுக்கு தோன்றவே தந்தையிடம் தெரிவித்தாள். 

அவன் கடம்பவனம் எனப்படும் தற்போதைய மதுரையைச் சுட்டிகாட்டி, இங்கிருக்கும் அம்பிகை சியாமளையை வழிபட கூறினான். அம்பாளை மனம் உருகி தரிசித்த வித்யாவதி முன்பு, உமாதேவி 3 வயது குழந்தையாக காட்சி அளித்தாள். என்ன வரம் வேண்டும் என்று கேட்க, எப்போதும் தன்னுடம் அம்பாள் இருக்க வேண்டும் என்று நினைத்த வித்யாவதி  குழந்தையாக காட்சி தந்த நீ எனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்றாள். 

அடுத்த பிறவியில் உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்று மறைந்தாள் உமா தேவி. அடுத்த பிறவியில் சூரசேனனின் மகள்  காஞ்சன மாலையாக பிறந்து, மலையத்துவ மன்னனை மணந்தாள். இருவரும் குழந்தைப்பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார்கள். அப்போது அம்பிகை, வித்யாவதிக்கு முற்பிறவியில் வாக்கு கொடுத்ததற்கேற்ப, மூன்று வயது குழந்தையாக  கையில் மூன்று தனங்களோடு தோன்றினாள். 

சக்தி பீடம் - 4: மதுரை மீனாட்சி

கூடவே உரியபருவம் வந்து மணாளனைக் காணும் போது கையில் இருக்கும் ஒருதனம் மறையும் என்ற அசரீரி கேட்டது. காஞ்சனமாலைக்கு முற்பிறவி நினைவு வந்தது. இருவரும் மகிழ்ந்து குழந்தைக்கு தடாதகை எனப்பெயரிட்டு சீராட்டி வளர்த்து வளர் பருவம் வந்ததும் ஆட்சி பொறுப்பையும் தந்தார்கள். கன்னி  ஆண்டதால் இது கன்னிநாடு என்ற பெயரைப் பெற்றது. 

சிறப்பாக ஆண்ட தடாதகை சிவகணங்களுடன் சென்று சிவபெருமானை சந்திக்க சென்றாள். அப்போது கையிலிருந்த ஒரு கணம் மறைந்தது. அசரீரி வாக்குப்படி எம்பெருமானே மணாளன் என்று அறிந்தாள். உடனே, திருமணத்துக்கு ஏற் பாடு செய்யப்பட்டது. தேவர்கள், முனிவர்கள் ரிஷிகள் கலந்துகொள்ள திருமங்கல நாணை சூட்டினார் எம்பெருமான். தடாதகையே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார்.

தல சிறப்பு:
மீனாட்சி அம்மன் திருத்தலத்தில் முதல் பூஜை அம்மனுக்கே. பெண்கள், கணவர் எழும் முன்பே எழுந்து நீராடி பிறகு கணவரை எழுப்ப வேண்டும் என்று உணர்த்துவது போல், இங்குள்ள மீனாட்சி, சொக்கநாதருக்கு முன்பாகவே அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்படுகிறாள். மீனாட்சிக்குப் பிறகே சொக்கநாதருக்கு என்பதால் தான் வீட்டில் மதுரை ஆட்சி என்ற பெயரும் கூட.

ஒவ்வொருநாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பதாக ஐதிகம். தினமும் எட்டு கால பூஜை நடக்கிறது. இங்கிருக்கும் முதன்மை விக்ரகம், தூய மரகதத்தினால் உருவாக்கப்பட்டது. மீனாட்சி மரகதத்தின் பச்சை நிறத்தில் கருணையே வடிவாய் அருள்பாலிக்கிறாள். இவள் மரகத வல்லி என்றும் அழைக்கப்படுகிறாள். 

சக்தி பீடம் - 4: மதுரை மீனாட்சி

பக்தர்களின்  அழைப்பை ஏற்று, விரைந்து செல்லும் வகையில் வலது காலை சற்று முன் வைத்து காட்சிதருகிறாள் அன்னை மீனாட்சி. தசமகாவித்யை மீனாட்சியை மனோன்மணி என்ற பெயரிலும் அழைக்கலாம். இவள் அங்கையற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறாள்.

கையில் கிளியைத் தாங்கியிருக்கும் மீனாட்சியிடம் பக்தர்கள் கோரிக்கை வைக்கும் போது, அதைக் கவனமாக கேட்கும் கிளி மீண்டும் மீனாட்சியிடம் அந்த கோரிக்கையை சொல்லி நினைவூட்டுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
சிவபெருமான் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள், இத்தலம் ரஜத சபை. நடராஜர் இடது காலை தூக்கி ஆடிய நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் மட் டும் வலது காலை தூக்கி ஆடிய நிலையில் இருக்கிறார். 

இந்தப் பாதத்தை சிவனுடைய பாதமாக தரிசிக்கிறார்கள். இங்கிருக்கும் பொற்றாமரைக் குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் கிடையாது. விநாயகரின் ஆறுபடை வீடுகளில் இத்தலம் நான்காவது படைவீடாகும்.

தல பெருமை:
மதுரை ஸ்ரீ சக்கர வடிவத்திலும், அதன் நடு பிந்துவில் மீனாட்சியும் அமர்ந்திருக்கிறாள். நண்பகல் வேளையில் மீனாட்சி சியாமளா சக்தியாக விளங்குகிறாள். மீன்கள் தன் கண்களாலேயே குட்டிகளை காப்பது போல், கண்ணுக்கு ஓய்வளிக்காமல் தன் பக்தர்களைக் காப்பவள் என்ற பொருள்படவே மீனாட்சி என்று அழைக்கப்படுகிறாள்.

மீனாட்சி அம்மன், நின்ற கோலத்தில் இடைநெளிந்து திருக்கரங்களில் கிளியை ஏந்தி அருள்பாலிக்கிறாள். இவளுக்கு இடப்பக்கத்தில், சுந்தரேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் அம்மனின் இடப்பாகத்தில் இறைவன்  அருள்புரிகிறார்.

இங்கிருக்கும் பொற்றாமரைக்குளம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பேறையும் தருவதாக அமைகிறது. இரட்டை கோபுரங்களில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று  சுந்தரேஸ்வரருக்கும் ஆனது.

தல பிரார்த்தனை:
திருமணப்பேறு, குழந்தைப்பேறு  உடன் வாழ்வில் சகல செளபாக்கியங்களும் தரும்  ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தருவாள் அங்கையற்கண்ணி எனப்படும் மீனாட்சி. மீனாட்சியைத் தரிசித்து வேண்டியதை பெறுவோமா?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP