சக்தி பீடம் -17 சம்புநாதேஸ்வரி

சக்தி பீடங்களில் இவை ஒன்பதாவது தலமாக குறிப்பிடப்படுகிறது. அன்னை பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் குடிகொண்டிருக்கிறாள். ஒவ்வொரு ரூபத்திலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் அன்னையானவள், இங்கு தீச்சுடராக காட்சிதருகிறாள்.
 | 

சக்தி பீடம் -17 சம்புநாதேஸ்வரி

அம்மனின் சக்திபீடங்களில் இது ஜ்வாலாமுகி  தலம் என்றழைக்கப்படுகிறது. இமாச்சல பிரதேசத்தில் அமைந்திருக்கும் இத்தலம், அன்னையின் உடல் பாகங்களில் நாக்கு விழுந்த பகுதி ஆகும். இங்கு அன்னை தீப்பிழம்பாக காட்சிதருவதால் இவள் ஜ்வலாமுகி என்றழைக்கப்படுகிறாள். 
சக்தி பீடங்களில் இவை ஒன்பதாவது தலமாக குறிப்பிடப்படுகிறது. அன்னை பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் குடிகொண்டிருக்கிறாள். ஒவ்வொரு ரூபத்திலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் அன்னையானவள், இங்கு தீச்சுடராக காட்சிதருகிறாள்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவர் இருந்தார். யாகம் வளர்த்து கிடைத்த பொருள்களை நெருப்பில் போட்டுவிடுவாராம். மன்னன் இந்த முனிவருக்கு விலை மதிப்புள்ள பொருள்களைப் பரிசாக கொடுத்தார். முனிவருக்கு எல்லா பொருள்களுமே ஒன்று என்பதால் மன்னன் கொடுத்த பொருள்களையும் தீக்கு இரையாக்கினான்.
விலை மதிக்கத்தக்க பொருள்களை முனிவர் தீக்கிரையாக் கியதை கேள்வியுற்ற மன்னன் வருந்தி முனிவரின் மீது கோபமுற்றான். நான் கொடுத்த பொருள்களைத் திருப்பி கொடுங்கள் என்று முனிவரிடம் கட்டளை யிட்டான்.

தீக்கிரையாகின பொருள்களை எப்படி மீட்டு கொடுப்பது என்று அஞ்சிய முனிவர் அன்னைதேவியை மனம் உருகி வழிபட்டார். அன்னையின் அருளால் அந்த பொருள்கள் மீண்டு வர முனிவர் மகிழ்ந்து அதை அரசனிடம் கொடுத் தார். 
அதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த மன்னன் தீக்கிரையான பொருள் எப்படி வந்தது என்று கேட்க அன்னையின் அருளை விளக்கினார் முனிவர். மன்னன் அன்னையின் அருளை நினைத்து மகிழ்ந்து அன்னை ஆலயம் எழுப்பினான் என்கிறது புராணக்கதை.

தல சிறப்பு:
 இங்கிருக்கும் காலதரம் என்னும் பர்வதத்தில் தேவியின் நாக்கு விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. இங்கிருக்கும் குகை கோயிலில் மூன்றடி உயரத்தில்  இருக்கும் கூண்டில் ஆறு அங்குல உயரத்தில் தீஜ்வாலையாக காட்சி தரு கிறாள்  அம்மன். இந்த அன்னையிடம் ராதேஷ்யாம் என்று உரக்க கூறினால் தீப்பிழம்பு பெரிதாக ஒளிர்கிறது.

இதில் சிறப்பம்சமே இந்த தீபமானது எண்ணெய் ஊற்றி திரி சேர்த்து எரிய வைக்கப்பட்ட தீபமல்ல. பல்லாண்டு காலமாகவே பாறையிலிருந்து தானாக சுடர் விட்டு எரியும் தீபம். தீபத்தைத் தரிசிக்கும் பக்தர்கள் தேவியின் மரகத நிறத்தை நினைவு செய்யும் வகையில் ஜோதியானது பச்சையும் நீலமும் கலந்து இருப்பதாக  மெய் சிலிர்க்கிறார்கள். 
அன்னையின் கருவறையில் எப் போதும் ஒன்பது ஜுவாலைகள் எரிந்துகொண்டிருக்கிறது. இந்த ஒன்பது ஜூவா லைகளும் நவசக்தியாக, நவ துர்க்கையாக, நவநாயகியாக பாவிக்கிறார்கள் பக்தர்கள். இங்கு இரவு நடக்கும் பள்ளியறை சேவை மிகவும் விசேஷமானது.

முகலாய பேரரசர் அக்பர் கருவறையில் எரிந்து கொண்டிருக்கும் ஜுவா லையை அணைக்க உத்தரவிட்டாராம். அவரது கட்டளைக்கேற்ப வீரர்கள் ஜூவாலையின் மீது நீரைப் பாய்ச்சினார்கள்.எனினும் ஜூவாலை அணைய வில்லை. 
இதை கேள்வியுற்ற அக்பருக்கு அன்னையின் ஆற்றல் புரிந்தது. அதனால் அம்மனுக்கு தங்கத்தில் குடை செய்து காணிக்கை செலுத்தி அதற்கு பிரதி உபகாரமாக தனக்கான வேண்டுதலை நிவர்த்தி செய்ய அக்பர் வேண் டினாராம். 

ஆனால் அன்னை அக்பரின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை. மாறாக தங்க குடத்தையும் சாதாரண உலோகமாக மாற்றிவிட்டதாகவும் வர லாறு உண்டு. இன்றும் உலோகமாக மாறிய குடையைக் காணலாம்.

ஸ்ரீ சக்ரவடிவில் ஆதிசங்கரர் இந்நகரை அமைத்ததால் தேவி குடிகொண்டிருக்கும் இந்நகர் ஸ்ரீ நகர் என்றழைக்கப்படுகிறது. இங்கிருக்கும் பீடத் தின் நாயகி கம்ஸனை வதம் செய்த போது மாயா சக்தியாக வந்தவள் என்பதால் கம்ஸவர்த்தினி என்று அழைக்கப்படுகிறாள். 
இவள் சம்புகேஸ்வரி என்ற பெயரிலும் விளங்குகிறாள்.  இங்கு அம்பாளின் தீநாக்கு களுக்கே பூஜை கள் நடத்தப்படுகிறது.

அம்பிகையின் சன்னிதியிலிருந்து 20 கிமீ தூரத்தில் உஷ்ணமான சுனை ஒன்று உள்ளது. மகா தேவி தீயவர்களை அழிக்க தீயின் வடிவாக  தோன்றுவார்கள் என்ற  உண்மை இங்கு  குறிப்பூட்டப்படுகிறது. இல்லாத உருவத்துக்கு செய் யப்படும் அந்த அலங்காரத்தால் தேவியின் உருவை நாம் மனதார தரிசிக்க லாம்.

பக்தர்கள் வாழ்வில் படும் இன்னல்களிலிருந்து மீண்டு வரவும், ஏவல், பில்லி, சூனியம் போன்ற கெட்ட சக்திகளிலிருந்தும் காப்பாற்ற தீவடிவில் இருக்கும் அன்னையை சரணடைந்தால் தீப்போல் கெட்ட சக்திகளிலிருந்து நம்மை காத் துக்கொள்ளலாம். வாழ்வில் அனைத்து பிரச்னைகளும் தீப்பிழம்பில் எரிவது போல் ஒழிய சம்புகேஸ்வரியை சரணடைவோம். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP