மூர்க்க நாயனார்

மூர்க்க நாயனார்
 | 

மூர்க்க நாயனார்

தொண்டை நாட்டில் பாலாற்றுக்கு  வடகரையில் அமைந்திருக்கும்  ஊர் திருவேற்காடு. இந்த ஊரில் வேளாண் மரபில், சிவன் மீது சிவனடியார்கள் மீது, அதீத பற்றுடன் ஒருவர் வாழ்ந்துவந்தார். மூர்க்க நாயனார் என்று அழைக்கப்படும் இவரது பெயர் காரண பெயராலேயே அறியப்படுகிறது. 
இன்னதென்று இவரது இயற்பெயரை அறியமுடியவில்லை. நினைவு அறிந்த நாள் முதலே எம்பெருமான் மீது பற்றுக்கொண்டு வாழ்ந்ததோடு திருவெண்ணீறு தரித்து வாழ்வதையே பெரும் பேறாக எண்ணினார். தன்னை நாடிவரும் எம்பெருமானின் மீது பற்றுக்கொண்ட அடியார்களை வணங்கி அவர்களுக்கு அமுதளித்த பிறகே அவர் உண்பதை வழக்கமாகிக் கொண்டிருந்தார்.

மூர்க்கநாயனாரின் அன்பும் பக்தியும் பரவ பரவ அடியார்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது. அடியார்களுக்கு அமுதளித்துவந்த மூர்க்கநாயனாரிட மிருந்த செல்வமும், பொருள்களும் சிறிது சிறிதாக குறையத் தொடங்கியது.
 வறுமைகள் சூழ ஆரம்பித்தது. வறுமை அண்டியதை உணர்ந்த போதும் அடியார்களுக்கு உணவிடுவதை மூர்க்கநாயனார் நிறுத்தவில்லை.செல்வம் குறைந்தால் என்ன பொருள்கள் இருக்கிறதே அதை விற்று அடியார்களுக்கு திருப்பணி செய்துவந்தார்.

பொருள்களும் குறைய தொடங்கியது.  இறுதியில் பணமாக்கவும் பொருள்கள் இல்லாத நிலையை அடைந்தார்.அடியார்களுக்கு அமுதளிக்க என் செய்வது என்று யோசித்தார். இளமைப்பருவத்தில் தாம் ஆடிய சூதாட்டம் நினைவுக்கு வந்தது. அதையே பற்றிகொண்டு பொருள் சம்பாதிக்கலாம் என்று யோசித்து கையோடு அதை செயல்படுத்தவும் தொடங்கிவிட்டார்.
சூதாட்டத்தில் தன்னோடு ஆடியவரை தோற்கடித்து பொருள்களை ஈட்டினார். வழக்கம் போல் அந்த பொருளை வைத்து சிவனடியார்களுக்கு தொண்டு புரிந்துவந்தார். அதிக பொருள் ஈட்டுவதற்கு மூர்க்க நாயனார் தந்திரத்தைக் கடைப்பிடித்தார். யாருடன் ஆடினாலும் முதல் ஆட்டத்தில் தோற்றுவிடுவார். அடுத்த ஆட்டங்களில் விட்டதைப் பிடித்து அதிக பொருளையும் ஈட்டிவிடுவார்.
சூதாட்டம் என்பதால் கள்ளமான ஆட்டமெல்லாம் விரும்பமாட்டார். அதே நேரம் அவரையும் யாரும் ஏமாற்றிவிடமுடியாது. மீறி அவரை ஏமாற்றுவதாக அறிந்தால் அவர்களை  இடுப்பில் செருகி தயாராக வைத்திருக்கும் கத்தியால் குதறிவிடுவார். அதனாலேயே அவரிடம் சூதாட்டம் ஆட அனைவரும் தயங்கினார்கள். அஞ்சினார்கள். நாளடைவில் ஊர் மக்கள் யாரும் இவருடன் விளையாட வரவில்லை.
பொருள் ஈட்ட வேண்டுமே என்று நினைத்த மூர்க்க நாயனார் அதன்பிறகு வெளியூர் சென்று சூதாட்டம் ஆடி பொருள்களைச் சம்பாதிக்க தொடங்கினார்.
 இவ்வாறு சம்பாதித்த பொருள்களை அடியார்களுக்கு செலவிட்டு மகிழ்ந்தார். இவ்வாறு இருந்த மூர்க்க நாயனார் இறுதியில் எம்பெருமானின் திருவடி நிழலை பணிந்தார்.
 கார்த்திகை மாதம் மூலம் நட்சத்திரத்தன்று மூர்க்கநாயனாரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது. 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP