எண்ணம் போலே வாழ்வும் அமையும்

பேராசைக்கொண்ட மனிதனிடம் ஒரு பொருளைக் காண்பித்து இது உன்னுடையதா என்று கேட்டால் இல்லை என்று மறுக்க மாட்டான். இதுவும் என்னுடையது என்று கூறுவான்... யார் வம்புக்கும் போகாமல் வாழ்பவன் இது என்னுடையது அது உன்னுடையது என்று சொல்வான்.
 | 

எண்ணம் போலே வாழ்வும் அமையும்

வைகுண்டத்தில் ஒருமுறை “எண்ணம் போல்தான் வாழ்க்கையும் என்று சொல்கிறார்களே.. அப்படியென்றால் என்னவென்று சொல்லுங்களேன்” என்று கேட்டாள் திருமாலின் மார்பில் குடியிருக்கும் மகாலஷ்மி. புன்னகை புரிந்த ஸ்ரீமந்நாராயணன் தேவிக்கு விளக்கம் கூறினார். 

பேராசைக்கொண்ட மனிதனிடம்  ஒரு பொருளைக் காண்பித்து இது உன்னுடையதா என்று கேட்டால் இல்லை என்று மறுக்க மாட்டான். இதுவும் என்னுடையது என்று கூறுவான்...  யார் வம்புக்கும் போகாமல் வாழ்பவன் இது என்னுடையது அது உன்னுடையது என்று சொல்வான். ஆன்மிக வழியில் திளைத்திருப்பவன் இல்லை அதுவும் உன்னுடையது.. என்னுடையதும் உன்னுடையதே என்று சொல்வான். ஆனால் ஆண்டவனை மட்டுமே நினைக்கும் தவசீலர்கள் எல்லாமே இறைவனுடையது என்று கூறுவார்கள்.

இப்படித்தான் அவர்கள் எண்ண அலைகளுக்கேற்பவே வாழ்க்கையும் வாழ்வார்கள் என்றார். ”இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்” என்றாள் லஷ்மி..”வாயேன் நேரில் காட்டுகிறேன்” என்று பூம்பொழில் என்னும் கிராமத்துக்கு வந்தார்.   

இருவரும் வயதான தோற்றத்தில் ஒரு வயலின் ஓரம் அமர்ந்திருந்தார்கள். அவ்வழியாக நால்வர் வந்தார்கள். அவர்களை மறித்த திருமால் ”தம்பி இந்த நிலங்களெல்லாம் என்னுடையது. எனக்கு குழந்தைகள் இல்லாததால் எனக்கு பிறகு இந்த நிலங்களை உழுவதற்கு யாரும் இல்லை நீங்கள் விரும்பினால் இதை உங்களுக்கு கொடுக்கவிருக்கிறேன். ஆனால் நீங்கள் பதிலுக்கு எங்களை காலம் முழுவதும் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார். நால்வரும் சுற்றி முற்றி பார்த்தார்கள்.

பசுமையும் செழிப்பும் பொங்கி வழிந்தது.. எல்லோரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்கள். ”சொல்ல மறந்துவிட்டேனே எங்களுடைய மூதாதையர்கள் இந்த நிலத்தில் புதையல்களை மறைத்து வைத்திருக்கிறார்கள். நிலத்தை உழும் போது கிடைக்கும் புதையல்களும் உங்களுக்கே சொந்தம் என்றார். 

முதலாமவன் ஓடி போய் ஒரு பகுதியில் நின்றான். ”இந்த துண்டுப்பகுதி எனக்கு” என்றான். இரண்டாமவன் மெதுவாக நடந்து போய் அவன் பக்கத்தில் நின்று ”இது எனக்கு” என்றான். மூன்றாமவனும், நான்காவது ஆளும் எஞ்சியிருக்கும் துண்டுப்பகுதியைத் தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டார்கள். ”என்ன செய்கிறீர்கள் சுவாமி” என்றாள் லஷ்மி.. ”வேடிக்கையை மட்டும் பார்” என்றார் ஸ்ரீமந்நாரயணன்.

அதிசயம் நால்வர் கண்ணிலும் புதையல் ஒரே நேரத்தில் தென்பட்டது….எல்லோரும் ஓடிபோய் கையில் எடுத்தார்கள். வயதான தோற்றத் தில் இருந்த திருமாலும் லஷ்மியும் ஓடிவந்தார்கள். 

”புதையல் கிடைத்துவிட்டதா எங்களுக்கும் சிறிதேனும் கொடுப்பீர்களா?” என்றார்கள். ”பேச்சை மாற்றாதீர்கள். எனக்கென்று கொடுத்த இடத்தில் கிடைத்த பொருள் எனக்கு மட்டுமே” என்று சொல்லி புதையல் பானையைத் திறந்தான் முதலாமவன் விஷப்பூச்சிகளும், பாம்புகளும் நிரம்பியிருந்தது.. ”எனக்கென்று கொடுத்த இடத்தில் கிடைத்த புதையல் எனக்கு மட்டுமே உங்கள் இடத்தில் இருந்தால் நான் பங்கு வரமாட்டேன்” என்று பிரித்தான் இரண்டாமவன் மண்கள் நிறைந்து நடுவில் ஒரு தங்கக்காசு மட்டுமே மின்னியது.. ”இடமே உங்களு டையது என்னும் போது புதையல் மட்டும் என்னுடையது என்று எப்படி சொல்ல முடியும்.

எதுவாக இருந்தாலும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்” என்று பிரித்தான் மூன்றாமவன் தங்கக்காசுகளும், வெள்ளிக்காசுகளும் மின்னி யது.. ”எண் சாண் உடம்புக்கு எதுவும் சொந்தம் கிடையாது எல்லாமே ஆண்டவனுக்குத்தான் சொந்தம்” என்று நான்காமவன் புதையலைப் பார்த்தான் வைரங்களும்,  நவரத்தினங்களும் பொங்கிவழிந்தது… 

இதுதான் எண்ணம் போல் வாழ்வு என்பது என்று பார்வையால் விளக்கிய ஸ்ரீமந்நாராயணனுக்கு புன்னகையால் பதிலுறுத்தாள் மஹாலஷ்மி. உங்களுக்கும் புரிந்திருக்குமே.. எண்ணம் போல் வாழ்வு என்பது எது என்று?  
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP