சிவராத்திரி நாளில் இந்த அபிஷேகம் பார்ப்பது தான் அதிக பலன் தரும்!!

இன்றைய மஹாசிவராத்திரியன்று, மூன்றாம் ஜாம காலத்தில், தாழம்பூ மாலை சாற்றி வழிபடுவதைக் காண்பது மிகவும் விசேஷம். பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், அறிந்தே செய்யும் தவறுக்கான தண்டனையைப் பெற்ற தாழம்பூவின் கதை தான் நமக்கும் ஒரு பாடம்.

சிவராத்திரி நாளில் இந்த அபிஷேகம் பார்ப்பது தான் அதிக பலன் தரும்!!
X

மணமிக்க மலர்களில் முதன்மையானது தாழம்பூ. என்றாலும் அது பூஜைகளுக்குரிய சிறப்பை பெற்றிருக்கவில்லை. குறைந்த மணமுடைய மஞ்சள் சாமந்தி கூட, சிவனது தலையில் ஒய்யாரமாய் இருக்கும் போது, மணமுள்ள தாழம்பூ மட்டும் சிவனிடமிருந்து விலக்கி வைக்க காரணமுண்டு.

நான் தான் பெரியவன் என்ற மமதையில் மனிதர்களே இருக்கும் போது, தெய்வங்களுக்கும் அப்படி ஒரு பிரச்னை வந்தது. ஒருமுறை, பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் நான் தான் பெரியவன் என்ற மோதல் ஏற்பட்டது. பிரச்னை பெரிதாக சிவப்பெருமான் விஸ்வரூபமெடுத்தார். என் முடியையோ, அடியையோ யார் முதலில் காண்கிறார்களோ அவர்களே பெரியவர் என்று தீர்ப்பு கூறினார்.

சிவராத்திரி நாளில் இந்த அபிஷேகம் பார்ப்பது தான் அதிக பலன் தரும்!!

அன்னப் பறவையாக ரூபமெடுத்த பிரம்மா, மேல் நோக்கியும், வராக அவதாரமாக விஷ்ணு பாதாளத்தை நோக்கியும் பாய்ந்தார்கள். ஆனால் பயனில்லை. சிவனின் தலையில் இருந்த தாழம்பூ, மேலிருந்து கீழ் நோக்கி வரும் போது அன்னப்பறவையாக இருந்த பிரம்மா, சிவனிடம் தான் முடியைக் கண்டதாக சொல்லப்போகிறேன். நீ ஆமாம் என்று சாட்சி சொல் என்று துணைக்கு அழைத்தார். தாழம்பூவும் ஒப்பு கொண்டது.

சிவராத்திரி நாளில் இந்த அபிஷேகம் பார்ப்பது தான் அதிக பலன் தரும்!!

சர்வத்தையே கட்டி ஆளும் சர்வேஸ்வரன் அறியாத உண்மையா. கோபம் கொண்ட சிவன், உனக்கு பூலோகத்தில் கோயில் கிடையாது என்று பிரம்மாவையும், என் தலையில் சூடும் வாய்ப்பை நீ இழந்து விட்டாய். மேலோகத்திலும், பூலோகத்திலும் நீ இருக்கும் பூஜையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று தாழம்பூவையும் சபித்துவிட்டார்.

தன் தவறை உணர்ந்த தாழம்பூ, சிவப்பெருமானிடம் அழுதது. நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன். இதற்கு மோட்சம் இல்லையா இறைவா.. நான் மீண்டும் உங்கள் தலையில் அமர வேண்டும் என்று கதறியது. ஆனாலும் சிவப்பெருமான் கொடுத்த தண்டனையை திரும்ப பெற முடியாது என்று கூறிவிட்டார்.

எனினும் மனம் தளராத தாழம்பூ சிவனை நினைத்து தவம் செய்தது. நீண்ட கால தவத்துக்குப் பிறகு சிவபெருமான் தாழம்பூ முன்னிலையில் தோன்றினார். என்னை மீண்டும் உங்கள் பூஜைக்கு பயன்படுத்த அனுமதி அளியுங்கள் என்று வேண்டியது.

சிவராத்திரி நாளில் இந்த அபிஷேகம் பார்ப்பது தான் அதிக பலன் தரும்!!

என் பூஜையில் கலந்து கொள்ளும் வாய்ப்பை நீ இழந்து விட்டாய். உன் தவத்தால் உனக்கொரு வரம் தருகிறேன். மாசி சிவராத்திரி அன்று, நான்கு ஜாம பூஜையில் மூன்றாவது காலத்தில் மட்டும் உன்னை பூஜைக்கு ஏற்றுக் கொள்கிறேன் என்றார். இந்த பாக்கியமே எனக்கு போதும் என்று தாழம்பூவும் மகிழ்ந்தது.

இன்றைய மஹாசிவராத்திரியன்று, மூன்றாம் ஜாம காலத்தில், தாழம்பூ மாலை சாற்றி வழிபடுவதைக் காண்பது மிகவும் விசேஷம். பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், அறிந்தே செய்யும் தவறுக்கான தண்டனையைப் பெற்ற தாழம்பூவின் கதை தான் நமக்கும் ஒரு பாடம்.

பொய்யுரைத்து பெறும் எவையும் நீடித்து நிலைக்காது. இறைவனது உலகத்தில் நமக்கு அனுமதியும் கிடையாது. மாறாக தண்டனைக்கே வழிவகுக்கும். இதை உணர்ந்து, நாம் அனைவரும் உண்மையான பக்தியுடன், சத்திய வாழ்வை கடைபிடித்து இறைவனின் அருள் பெறுவோமாக.

newstm.in

Tags:
Next Story
Share it