Logo

சாய்பாபா என்ற பெயர் எப்படி வந்தது?

சாய்பாபாவின் இயற்பெயர் இதுவரை எவருக்கும் என்ன என்பது யாரும் தெரியவில்லை. இது புரியாத புதிராகவே உள்ளது. ஆனால், சாய்பாபா என்னும் மகான் சீரடி என்ற கிராமத்தில் அறுபதாண்டுகள் வாழ்ந்து பக்தர்களுக்கு பேரருள வழங்கியுள்ளார் என்பதற்கான வரலாறு மட்டும் அழியாதாக உள்ளது.
 | 

சாய்பாபா என்ற பெயர் எப்படி வந்தது?

சாய்பாபாவின் இயற்பெயர்  இதுவரை எவருக்கும் என்ன என்பது யாரும் தெரியவில்லை. இது புரியாத புதிராகவே உள்ளது. ஆனால், சாய்பாபா என்னும் மகான் சீரடி என்ற கிராமத்தில் அறுபதாண்டுகள் வாழ்ந்து பக்தர்களுக்கு பேரருள வழங்கியுள்ளார் என்பதற்கான வரலாறு மட்டும் அழியாதாக உள்ளது.

சாய்பாபா சீரடிக்கு அருகிலுள்ள எஹாதா, நிம்கான் என்கிற கிராமத்தை தவிர வேறு எங்கும் சென்றதில்லை. ஆனால், அவருடைய பேரருள் வழங்கிய மகிமை மட்டும் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. ஏனைய மேலை நாடுகளிலும் இம்மகானுடைய  நாமத்தை உச்சரிக்கப்படுகிறது. சீரடி மக்கள் சாய்பாபாவை பதினெட்டு வயதிலிருந்தே மிக நெருங்கி பழகி அந்திம காலம் வரையில் அறிந்துள்ளனர்.

இவ்வளவு  நாள் ஊர் மக்களின் ஒன்றியிருந்தும் சாய்பாபாவின் உண்மையான பெயர் என்னவென்று யாரும் அறிந்ததில்லை.
பற்றற்று இருந்தமையால் 'தான்' என்பதை குறிக்கும் பெயர் வேண்டியதில்லை. மக்களால் குறிக்கப்படும் பெயரே என்றும் அழியாதிருக்கும் என்பதை உணர்ந்து பெயரை வெளியே சொல்லவில்லை என்றும் கருத வாய்ப்புண்டு.

சிறு வயதிலேயே ஸ்தல யாத்திரையை மேற்கொண்டு, தனது பதினெட்டாவது வயதில் சீரடிக்கு வந்தவர். எவரது இல்லத்திற்கும் செல்லாது வேப்ப மரத்தடியிலேயே யோகசனமிட்டு அமர்ந்து தியானத்தில் அமர்ந்திருப்பதை அவ்வூர் மக்களும், நானாசோப்தார் என்பவரின் தாயாரும் பார்த்திருக்கின்றனர்.

இப்படி பல நாட்கள் கடந்த பிறகு, ஒரு நாள் அவ்வூர் சிவன் கோயில் பூசாரியான மஹல் சபதி என்பவர் முதன் முதலில் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசி இருக்கின்றார். இருவரும் தெய்வத்தின் பால் ஆழமான ஈடுபாடுடையவர். ஆதலால், இவர்களுடைய நட்பு முற்றி கடைசியில் சாய்பாபாவின் பேரருளினை கண்டு அவரின் ஆத்ம சீடராக மாறி அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து வந்துள்ளார்.

சாய்பாபா சீரடி வந்த போது அவருக்கு தினமும் ஆமன்பாய் என்கிற முஸ்லிம் பெண்மணியும், அவருடைய சுற்றத்தாரும் அவர் அமர்ந்துள்ள வேப்ப மரடித்தடியிலேயே உணவளித்துள்ளனர் .

இப்படி இந்துக்களும், முஸ்லிம்கள் அவருடைய வாழ்வில் இரண்டற கலந்து தொண்டாற்றியதால் தான் இரு மதத்திற்கும் உரியவரானார்.
இப்படி நாட்கள் நகன்று கொண்டிருக்கும் போது திடீரென்று மறைந்து போனார்.  நாட்கள் மாதமாகியது ஒரு நாள் விடியற்காலையில் சீரடியில் உள்ள இந்து கோவிலில் கல்யாணம் கூட்டம் மாட்டு வண்டிகளில் வந்து இறங்கியது .

அந்த கூட்டத்தோடு கூட்டமாக இறங்கிய சாய்பாபாவை கண்ட ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் "யா சாயி" என்றனர் .( சாதுவே உமக்கு நல்வரவு ) அன்று முதல் அவருக்கு சாயிபாபா என்னும் திருபெயர் ஏற்பட்டது.
                                                                                                ஓம் ஸ்ரீசாய்ராம்!!!

சாய்பாபா என்ற பெயர் எப்படி வந்தது?

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP