Logo

கோழி அடை காப்பது போல் காக்கிறாய் பாபா..!

கர்மாக்களால் கஷ்டப்படும்போது பாபாவின் மீது நம்பிக்கை குறைவது இயல்புதான். ஆனால் மூச்சுவிடுவது இயல்பு போன்று சகலநேரமும் சாயி என்று சொல்லிகொண்டே இருந்தால் நெருப்பு பாதையில் கூட நடந்து விட லாம். பாபா என்னும் சொல்லுக்கு அவ்வளவு சக்தி உண்டு.
 | 

கோழி அடை காப்பது போல் காக்கிறாய் பாபா..!

பாபா… நீ என்னோடுதான் இருக்கிறாய். என்னை மகிழ்ச்சியாக வைத் திருக்கிறாய். நான் அறியாமல் செய்யும் தவறுகளினால்  துன்பம் அடையும் போதும் என்னை கோழி அடைகாப்பது போல் பொறுமையாக அன்னையாக காக்கிறாய் என்று சொல்லும் பாபாவின் பக்தர்களை அதிகம் காணலாம். சாதா ரண மனிதனாக ஷீரடிக்குள் நுழைந்து சத்குருவாக சகலத்தையும் ஆளும் வல் லமை மிக்கவனாக உருவானார் சாயி. மகான் என்று நிரூபித்த தருணத்திலும் பாபா பக்கிரியாகத்தான் வாழ்ந்தார். 

பாபாவின் மேல் அளவுக்கொள்ளாத அன்பும் பக்தியும் கொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு சோதனை மேல் சோதனை. ஆனாலும் பாபாவை நினைத் துக் கொள்வார். சில நேரங்களில் வாழ்க்கையில் சலிப்பும் உண்டாகும்.  ”என்ன பாபா காற்றடித்தால் கலைவது போல் துன்பம் வரும் போது பக்தியும் ஆட்டம் கொள்கிறதே..  நான் உனக்கு முக்கியம் இல்லையா? நான் என்ன பெரிய பணக்காரனாக வேண்டும். எனக்கு  விலை மதிப்புள்ள பொருள் வேண் டும் என்றா கேட்டேன். துன்பத்திலிருந்து விடுதலை கொடுத்தால் போதாதா.. உன் பின்னாடியே இருப்பேனே”  என்று மனதிற்குள் கோவமாக பாபாவிடம் கேள்வி எழுப்பினார்.. 

அன்று இரவு அவர் உறங்கும்போது யாரோ தட்டி எழுப்பியது போல் இருந்தது. அரைத் தூக்கத்தில் விழித்து பார்த்தார். பக்கத்தில் கலங்கிய தோற் றத்தில் உருவம் ஒன்று இருந்தது. மெதுவாக அந்த உருவம் பேச தொடங்கி யது. ”நான் என்ன பெரிய கடவுள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாயா? அப் படியே இருந்தாலும் மனிதன் விரும்புவது அனைத்தையும் கொடுத்து விட் டால் அவன் செய்த பூர்வ ஜென்மகர்மாக்களை யார் அனுபவிப்பது? உன்னு டைய ஆசைகளை நிறைவேற்றி உனக்கும் இறைவனுக்குமான இடைவெளி யைக் குறைத்து கொள்ள சொல்கிறாயா? என்னுடைய பக்தன் துன்பத்திலும் துவளாமல் சோதனைகளைக் கடக்க வேண்டும்.  எத்தகைய சூழ்நிலையிலும் அவனது முன் ஜென்ம கர்மாக்களை அனுபவித்தே தீர வேண்டும். அடுத்த பிறவியிலும் நீ துன்பப்பட நேரிடுமே என்று இப்பிறவியிலேயே உன்னுடைய  கர்மாவை கடக்க நான் உனக்கு உறுதுணையாக இருக்கிறேன். 
 
இன்னும் சில காலத்தில் உன்னுடைய கர்மாக்களின் கணக்கு தீர்ந்துவிடும். அப்போது  நீ செய்த புண்ணிய பலன்கள் உன்னைக் காத்தருளும்” என்று சொல்லியபடி உருவம் மறைந்தது. பக்தரும் படுத்து தூங்கிவிட்டார். மறுநாள் காலை விழிப்பு வரும்போது இரவு நடந்த விஷயம்  நினைவுக்கு வந்தது. பாபாதான் வந்திருந்தார் என்பதை உணர்ந்துகொண்டார் பக்தர்.  பாபாவை பற்றியபடி கஷ்டங்களைத் தாண்டினார். 

நீண்ட காலத்துக்குப் பிறகு ஷீரடியில் பாபாவைத் தரிசனம் செய்யும் போது பாபா இவரை  பார்த்தார். ஆனால் எதுவும் பேசவில்லை. இவருக்கு கண்ணீர் பெருகிற்று. ”நான் என்ன தவறு செய்தேன் பாபா” என்றார்.  கோபத்தோடு நீ என் குழந்தை.. நீ துன்பப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? தீப்புண்ணை கிளறி மருந்து போட்டால் தான் காயம் ஆறும். எரிகிறது என்று யாராவது புண்ணை மேலும் காயமாக்கி கொள்வார்களா? துன்பத்தை தாங்கும் பக்குவத்தை உடனிருந்து  நான் தருவதை உணராமல் என் மீது நம்பிக்கை யற்று  நடந்துகொண்டாயே” என்றார்.

பக்தர் பாபாவின் கால்களில் வீழ்ந்தார். பக்தியில் கண்களில் கண்ணீர் பெருகியது… ”இப்போது என்ன கஷ்டம்” என்றார் பாபா.. ”எந்த கஷ்டமும் இல் லையே பாபா.. நீதான் உடனிருக்கிறாயே” என்றார் பக்தர் நம்பிக்கையும் அன்பு மாக…கர்மாக்களால் கஷ்டப்படும்போது  பாபாவின் மீது நம்பிக்கை குறைவது இயல்புதான். ஆனால் மூச்சுவிடுவது இயல்பு போன்று  சகலநேரமும் சாயி என்று சொல்லிகொண்டே இருந்தால் நெருப்பு பாதையில் கூட நடந்து விட லாம். பாபா என்னும் சொல்லுக்கு அவ்வளவு சக்தி உண்டு. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP