குலதெய்வத்தை இந்த எண்ணெய்யால் தீபம் ஏற்றி வழிபடுங்கள்! அதன் பின் எப்போதும் அதிர்ஷ்டம் தான்!

குலதெய்வத்தை இந்த எண்ணெய்யால் தீபம் ஏற்றி வழிபடுங்கள்! அதன் பின் எப்போதும் அதிர்ஷ்டம் தான்!

குலதெய்வத்தை இந்த எண்ணெய்யால் தீபம் ஏற்றி வழிபடுங்கள்! அதன் பின் எப்போதும் அதிர்ஷ்டம் தான்!
X

எந்த தெய்வத்தை வழிபட்டாலும், குலதெய்வ வழிபாட்டை துவங்கிய பின்னரே செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இன்று உலகில் மக்கள் அனைவருக்கும் விதவிதமான பிரச்சனைகள் இருந்து வந்தாலும், பிரச்சனைகளின் அடிப்படையான காரணம் பணமாக தான் பலருக்கும் இருக்கிறது.

நம் குலதெய்வத்தின் ஆசீர்வாதம் முழுமையாக நமக்கு இருந்தால், இந்த பணப்பிரச்சனை பனித்துளி போல அதுவாகவே விலகி விடும். ஒரு சிலருக்கு வேலைக்கேற்ற வருமானம் கிடைக்காது.

இன்னொரு வகையினருக்கு வேலையே கிடைக்காது. இன்னும் சிலர் எவ்வளவு சம்பாதித்தாலும், வருகிற செல்வம், வந்த சுவடே தெரியாமல் சென்று கொண்டே இருக்கும். அவர்கள் எல்லாரும் குலதெய்வ வழிபாட்டை நிச்சயமாக வருடத்திற்கொரு முறையாவது மேற்கொள்ள வேண்டும்.

கடந்தவைகளை மறந்துவிடுங்கள். ஒரு நலல் நாளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, உங்கள் குலதெய்வத்தை மனதுள் இருத்தி, வீட்டிலேயே ஒரு தீபம் ஏற்றி, அதன்பின்னர் தினந்தோறும் காலையில் குலதெய்வத்தை கும்பிட்டு வந்தால், விரைவில் உங்கள் வாழ்வில் ஏற்றம் பெறும் நினைத்தவை கைகூடும்.

அப்படி, குலதெய்வத்தை மனதுள் இருத்தி தீபம் ஏற்றி வணங்கும் முன், ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைப் போட்டு, அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து திரித்து, கிழக்கு பக்கம் நோக்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.

தீபத்தை ஏற்றும்போது உங்கள் குலதெய்வத்தின் பெயரை உங்கள் மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே ஏற்றுவது இன்னும் பலன்களை அதிகரிக்க செய்யும்.
பொதுவாகவே பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு, நாம் மனதுள் எண்ணும் நல்ல விஷயங்களை ஆசிர்வதிக்கும் சக்தி உண்டு.

அதனல், பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.00 மணியிலிருந்து 5.30 மணிக்குள் இப்படி குலதெய்வத்தை நினைத்து, இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்றுவது சிறந்தது.

வெள்ளிக்கிழமையன்று பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினால் அஷ்டலட்சுமி அருள் கிடைக்கும். மஞ்சள் திரியிட்டு ஏற்றினால் குபேரனின் அருள் கிடைக்கும். சிகப்பு திரியிட்டு ஏற்றினல் கடன் தொல்லைகள் தீரும்.

Next Story
Share it