நன்மைகளை பெருக்கும் ஆடிபெருக்கு வழிபாடு...

தலைவாழை இலை பரப்பி பொரி கடலை வைத்து தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் வைத்து அகல் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். வாழைமட்டையில் விளக்கேற்றி ஓடும் நீரில் விட்டு நீரை ...

நன்மைகளை பெருக்கும் ஆடிபெருக்கு வழிபாடு...
X

பண்டிகைகளும் விசேஷங்களும் நமது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் என்று சொல்வார்கள். அதிலும் பொருளுணர்ந்து செய்யும் விரதங்களும் வழிபாடுகளும் இறையருளையும் குறையாமல் பெற்றுத்தரும். மனதில் அளவிடா மகிழ்ச்சியையும் உண்டாக்கும். அத்தகைய மகிழ்ச்சியை அள்ளித்தரும் ஆடிமாதத்தில் நாம் இருக்கிறோம்.

பூமித்தாய் அவதரித்ததாக சொல்லப்படும் ஆடிமாதத்தில் வரும் அனைத்து திதிகளும், தினங்களும், நட்சத்திரங்களும் சிறப்புக்குரியவையே. அந்தவகையில் நாளை தமிழகமெங்கும் மக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாட தயாராகிவருகிறார்கள்.

விவசாயம் செழித்து செல்வம் செழிக்க ஆடி பட்டம் தேடி விதை என்று சொல்வார்கள். ஆடி மாதங்களில் மழையால் பூமி குளிர்ந்திருக்கும். சூரியனின் கதிர்வீச்சில் ஆற்றல் அதிகரிக்கும். இத்தருணத்தில் செய்யும் விவசாயம் விவசாயிகளை கை விடாது என்பதால் முன்னோர்கள் ஆடிமாதங்களில் விவசாயத்தை செழிக்க வைக்கும் நீர் நிலைகளை வணங்க தொடங் கினார்கள். தொன்று தொட்டு இன்று வரை ஆடிப்பெருக்கை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.

நன்மைகளை பெருக்கும் ஆடிபெருக்கு வழிபாடு...

ஆடி மாதங்களில் நீர் நிலைகளில் அதிகரித்து வரும் நேரம் நீருக்கு நன்றி சொல்லும் விழாவாக ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு என்னும் விழா நீர் நிலைகள் இருக்கும் இடங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இராமயணத்தில் இராமன் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று வசிஷ்ட மகரிஷியிடம் கேட்டதற்கு அறு பத்தாறு கோடி தீர்த்தங்கள் கொண்ட காவிரியில் நீராடு என்று கூறினாராம். அப்படி இராமபிரான் காவிரியில் நீராடிய தினமே ஆடிப்பெருக்கு என்று புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் வாழ்த்தி வழிபட்டு தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதிகம்.

தமிழகத்தில் காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆறுகள், நீர் நிலை கள் இருக்கும் இடங்கள் அனைத்திலும் மக்கள் ஒன்று கூடுவார்கள். விவசாயிகள் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் ஆடிப் பேருக்கு முன்னதாக நவதானியங்களைத் தட்டில் முளைக்க வைப்பார்கள், இதற்கு முளைப்பாறி என்று பெயர். நீர் நிலைக ளுக்கு செல்லும் போது அதை கையில் ஏந்தி ஆற்றங்கரையின் ஓரத்தில் பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து, பசுஞ் சாணம் அல்லது மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். முளைப்பாரியை வரிசையாக வைத்து நிவேதனம் வைத்து வழிபடுவார்கள். பிறகு முளைப்பாரியை ஓடும் நீரில் விட்டு விவசாயம் தழைக்க வேண்டும் என்று வேண்டுவார்கள்.

நன்மைகளை பெருக்கும் ஆடிபெருக்கு வழிபாடு...

பெண்கள் ஆற்றங்கரையில் அமர்ந்து மாங்கல்ய சரடை மாற்றிக்கொள்வார்கள். புதிய மஞ்சள் சரடில் மூத்த சுமங்கலியைக் கொண்டு மாற்றிக்கொண்டு பழைய சரடை ஓடும் ஆற்றில் விடுவார்கள். குழந்தைகளும், பெரியவர்களும் மஞ்சள் நூல் தட விய கயிறை கைகளில் கட்டிக் கொள்வார்கள். தலைவாழை இலை பரப்பி பொரி கடலை வைத்து தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் வைத்து அகல் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். வாழைமட்டையில் விளக்கேற்றி ஓடும் நீரில் விட்டு நீரை வணங்குவார்கள்.

ஆடிப்பெருக்கன்று மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒருமித்த குரலில் வழிபடும் அழகை இறைவனுமே விரும்பி அருள் செய்கிறான். நீங்களும் நீர்நிலைகளை நாடிச்செல்லுங்கள். ஆடிப்பெருக்கை காண்பதோடு வழிபட்டும் வாருங்கள். வாழ்க்கை யின் இன்பம் பொங்கும்.

newstm.in

newstm.in

Next Story
Share it