அதிசயம் !! ஆச்சரியம் !! புதைந்து போன கோவில் !! சிறப்புகள் என்னென்ன ?

அதிசயம் !! ஆச்சரியம் !! புதைந்து போன கோவில் !! சிறப்புகள் என்னென்ன ?

அதிசயம் !! ஆச்சரியம் !! புதைந்து போன கோவில் !! சிறப்புகள் என்னென்ன ?
X

கேடுலன் கோவில் இந்தோனேஷியாவின் திர்த்தோமர்த்தானி கிராமத்தில், கலாசன் எனும் துணை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதனுடைய கட்டிட வடிவமைப்பு சம்பிசாரி கோவிலின் வடிவமைப்பை ஒத்ததாக இருக்கிறது.

மேலும் மெராபி மலையில் இருந்து பெருகும் எரிமலை லாவாவின் விளைவாக சம்பிசாரி கோவில் அதன் மேற்பரப்பில் இருந்து 6 மீட்டர் அளவில் பூமியில் புதைந்துள்ளது. அதை போலவே கேடுலன் கோவிலும் புதைந்துள்ளது.

இந்த கோவில் வளாகத்தினுள் நான்கு கோவில்கள் உள்ளன. அதில் முக்கிய கோவிலானது கிழக்கு நோக்கியும் அடுத்து மூன்று சிறிய கோவில்களும் உள்ளன. இதனுடைய வடிவமைப்பு சம்பிசாரி கோவிலை போலவே இருக்கிறது என்ற போதும், சம்பிசாரி கோவில் வடக்கு நோக்கி உள்ளது.

இதன் முக்கிய கோவிலானது நவம்பர் 1993 ஆம் ஆண்டு 24 ஆம் தேதியில் ஒரு விபத்தை போலவே கண்டறியப்பட்டது. இந்த நிலம் இந்த கிராமத்தினருக்கு சேர்ந்தது. அதன் நிலப்பரப்பிலிருந்து 6 முதல் 7 மீட்டர் வரை தோண்டிய போது இந்த ஸ்தலத்தின் பிரதான கோவிலை கண்டறிய முடிந்தது.

இந்த கோவிலின் முழுமையான வடிவமைப்பை வெளிகொணரும் பணி நடந்து வருகிறது. காரணம் இக்கோவிலின் சில பகுதிகள் பூமியுள் புதைந்து போயுள்ளன. இந்த கோவிலின் சில முக்கிய கற்கள் கண்டறியப்பட வேண்டியுள்ளது.

தொல்லியல் ரீதியிலான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கோவில் புணரமைப்பிற்கு பின் தற்போது பழமையான கோபுரங்களை ஒத்த சில வேலைபாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளன. சில இடைவெளியை நிரப்பும் கட்டிட வேலைபாடுகளும் தற்சமயம் செய்யப்பட்டுள்ளன.

இந்த பகுதியிலிருக்கும் பணியாளர் ஒருவரிடம் இந்த கோவில் குறித்து வினவிய போது, அவர் சொன்ன வார்த்தைகள் இங்கு ஒரு கல்லை மறு உருவாக்கம் செய்வதென்பது பிரமாண்ட பணியாக இருக்கிறது. காரணம், பழமையான கோவிலின் கற்களுக்கு ஒத்த ஒரு கல்லை கண்டறியவே ஒரு வாரம் ஆகிவிடுகிறது.

காரணம் அந்த கற்களை கண்டறிவது அத்தனை எளிமையானது அல்ல. அது மிகவும் கடுமையான சிக்கலான பணி. இந்த மொத்த கோவிலையும் மீட்டுருவாக்குவதென்பது பிராமண்ட புதிரை அவிழ்பதை போன்றதாகும் " என கருத்து தெரிவித்துள்ளார். அதிசயம் ஆச்சர்யமும் நிறைந்த இது போன்ற கோவில்கள் நமக்கு ஆன்மீக தேடலின் தீவிரத்தை அதிகப்படுத்த தான் செய்கின்றது.

Newstm.in

Next Story
Share it