Logo

யாருக்குத்தான் பொறாமை இல்லை...

ருக்மணி ஆடை அலங்காரங்களோடு பட்டத்து இளவரசி சீதையாக தயாரானாள். பாமா தன்னி டமிருந்த ஆபரணங்களை துறந்து எளிமையாக மாறினாள். கண்ணன் சீதையாக பாமாவையே தேர்வு செய்தான். இதனால் ருக்மணிக்கு பாமா வின் மீது இருந்த...
 | 

யாருக்குத்தான் பொறாமை இல்லை...

இறைவனிடம் அதிக பக்தியைக் கொண்டிருப்பவர் யார் என்று கேட்டால் எல்லோருமே நான் தான் இறைவன் மீது அதிக பாசம் வைத்திருக்கி றேன் என்று சொல்வார்கள்.மனிதர்களுக்குள் மட்டும் இந்த எண்ணம் இல்லை. இறைவனின் துணைவியார்களுக்குள்ளும் உண்டு.

ஒருமுறை கண்ணனிடம் சத்யபாமா பாரிஜாத மலரை வேண்டினாள். கண்ணனும் தேவலோகத்தில் தேடி சென்று அதைக் கொண்டு வந்துகொடுத் தான். அதைக்  கண்டதும் ருக்மணிக்கு பொறாமை ஏற்பட்டது.  என்னை விடவா கண்ணனின் மீது பாமா அன்பு  வைத்திருக்கிறாள் என்று கர்வம் கொண்டாள். 

ஒருமுறை கருடனுடன் பேசிக்கொண்டிருந்த கண்ணன் அனுமனின் பெருமையைப் பற்றியும், அவன் பக்தியைப் பற்றியும் பெருமையாகப் பேசி கொண்டிருந்தான். கருடனுக்கு அனுமன் என்ன என்னை விட பெரியவனா என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் கண்ணனிடம் காண்பிக்க முடிய வில்லை. கண்ணனுக்கு பிறரது மனம் புரியாதா என்ன? மனத்தில் நினைப்பதை நொடியில் கண்டுகொள்வானே. அவனுக்கு கருடனின் கர்வம் புரிந்துவிட்டது.

கருடனிடம் அனுமனின் அன்பை புரிய வைக்க எண்ணினார் கண்ணன். நீ போய்  அனுமனிடம் இராமன் சீதாவை தரிசிக்க வருமாறு  சொல்லி அழைத்துவா என்றான். அரை குறை மனதோடு கருடனும் அனுமனை  அழைத்து வர சென்றான். கண்ணன், பாமா, ருக்மணி இருவரையும் அழைத்து அனுமனை வரசொல்லியிருக்கிறேன். இருவரில் ஒருவர் சீதையாக தயாராகுங்கள் என்றான்.

ருக்மணி ஆடை அலங்காரங்களோடு பட்டத்து இளவரசி சீதையாக தயாரானாள். பாமா  தன்னிடமிருந்த ஆபரணங்களை துறந்து எளிமையாக மாறினாள். கண்ணன் சீதையாக  பாமாவையே தேர்வு செய்தான்.  இதனால் ருக்மணிக்கு பாமாவின் மீது இருந்த பொறாமை மேலும் அதிகமாகி யது. கண்ணனுக்கு ருக்மணியின் பொறாமை புரியாமல் இல்லை.

யாருக்குத்தான் பொறாமை இல்லை...

அவளது எண்ணத்தைப் போக்கவே கண்ணன் தராசு தட்டில் அமர்ந்து எனக்கு ஈடாக யார் பொருள்  வைக்கிறார்களோ அவர்களே என் மீது அதீத அன்பை வைத்தவர்கள் என்றான். ருக்மணி ஆபரணங்களை வைத்தும் சமமாகாத தராசு பாமா ஒரு துளசியைக் கிள்ளி கண்ணா கண்ணா என்று வைத்ததும் சமமாகிற்று. அதைக் கண்டு பாமாவின் மேல் பொறாமைக் கொண்டிருந்த ருக்மிணிக்கு அன்பு பெருகியது. இது குறித்து முன்னரே நாம் படித்திருக்கிறோம். பொறாமைக் குணத்தை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்த கண்ணன் கருடனுக்கும் அதைப் புரிய வைக்க வேண்டியிருந்தது.

கண்ணன் இராமனாகவும், பாமா சீதையாகவும் அனுமனுக்கு காட்சி தர அனுமன் சந்தோஷத்தில் ஆனந்த கூத்தாடினான். பிறகு பிரியா விடை பெற்ற அனுமனை அழைத்து சென்று  விடுமாறு கருடனிடம் கூறினான் கண்ணபிரான். சாதாரண வானர இனத்தை சார்ந்த குரங்கை நான் சுமந்து செல்ல வேண்டுமா. என் பலம் என்ன என்று கண்ணனுக்கு தெரியாதா எனக்கு இந்த பணியை இடலாமா என்று நினைத்தான்.

கருடனின் தோள் மீது ஏறி அமர்ந்த அனுமனை  உயரப்பறந்தவாறு கருடன் தூக்கி சென்றான். போக போக அனுமனின் பலத்தை தாங்க முடியா மல் திணறினான் கருடன். அனுமனுக்கு சிரிப்பு வந்தது. உன்னை விட பலத்தில் குறைந்த நானே சஞ்சீவி மலையை ஒற்றை விரலில் தூக்கி விட்டேன். உன்னால் என்னை தூக்க முடியவில்லையா என்றான்.கருடனுக்கு கோபம் வந்துவிட்டது.

பலம் கொண்ட மட்டும் அனுமனை தூக்கி செல்ல முயன்றான். ஆனால் முடியவில்லை. உடனே அனுமன் கருடனை நீ என் மீது அமர்ந்துகொள் என்றான். கருடன் தன் பலத்தை எல்லாம் அழுத்தி அனுமன் மீது உட்கார்ந்தான். அடுத்த நொடியில் அனுமன் கருடனை வேகமாக அழைத்துக் கொண்டு சேருமிடம் வந்தான். எப்படி வலிமையான என்னை தூக்கி வர உன்னால் முடிந்தது என்றான் கருடன்.  

பதிலுக்கு அனுமன் இது என்ன பிரமாதம் இராமா இராமா என்றேன். சிரமமில்லாமல் வந்துவிட்டேன் என்றான் அனுமன். கருடனுக்கு புரிந்தது. அனுமனின் பக்தி .உண்மையில் சிறந்த பக்திதான் என்று...

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP