Logo

இல்லத்தில் மகிழ்ச்சி தங்க பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

அதிகாலை பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும் நேரமான 4.30 மணி முதல் 6 மணி வரைக்குள்ளான காலத்தில் தேவர்கள் இல்லம் தேடி வருவார்கள். அவர்களது வரு கைக்குப் பிறகு மகாலஷ்மிக்கு வாசம் செய் வாள். அதனால் தான் ...
 | 

இல்லத்தில் மகிழ்ச்சி தங்க  பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

கிழமைகளில் வெள்ளிக்கிழமை மங்களகரமானது. வீட்டிலும் தொழில் செய்யும் இடங்களிலும் மனநிம்மதியும்,செல்வமும் நிலைத்திருக்க அம் பாளை மனமுவந்து வேண்டும் நாள் இது. வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து பூஜையறையை மலர்களால் அலங்கரித்து விளக்கேற்றி மந்திரம் சொல்லி வழிபடுவது நமது முன்னோர்களின் பழக்கமாக இருந்து வந்தது. 

தினமும் இறைவனை வணங்குவதற்கும், பூஜை செய்வதற்கும் காலமும் நேரமும் நிர்ணயித்து இந்து சாஸ்திரப்படி இறைவனை வழிபட்டு வந் தார்கள் முன்னோர்கள். தினமும் பூஜை, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு, வாரம் ஒருமுறை கட்டாய ஆலய தரிசனம் என்று ஆன்மி கத்தை  வாழ்வியலில் முக்கியமாக கொண்டு வாழ்ந்தார்கள்.

காலப்போக்கில் அப்பழக்கம் மெள்ள மெள்ள குறைந்து, இன்று முக்கிய விரத தினங்கள் பண்டிகைகளின் போது மட்டுமே வீட்டில் வழிபாடு என் பது கட்டாயமாக்கப்பட்ட பழக்கங்களாக கடைப்பிடிக்கப்படுகிறது.  இல்லத்தரசிகள் மகாலஷ்மிக்கு நிகரானவர்கள். வீட்டின் செல்வநிலையையும், தரித்திர நிலையையும் உண்டாக்குவதற்கான மூல காரணம் இவர்கள் கையில் தான் உண்டு.

அதிகாலையில் எழுந்ததும் கொல்லைப்புற கதவை திறந்து மூதேவியை வெளியே அனுப்பிவிட்டு முன்வாசக்கதவு வழியாக ஸ்ரீதேவியை அழைக்கும் பங்கு சுமங்கலிக்குரியது. அதிகாலை பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும் நேரமான 4.30 மணி முதல் 6 மணி வரைக்குள்ளான காலத்தில் தேவர்கள் இல்லம் தேடி வருவார்கள். அவர்களது வருகைக்குப் பிறகு மகாலஷ்மிக்கு வாசம் செய்வாள். அதனால் தான் அதிகாலை எழுந்து வாசலில் சாணம் தெளித்து, அரிசி மாவு கோலம் போட்டு அகல்விளக்கேற்றி லஷ்மியை வரவேற்க வேண்டும் என்றார்கள் முன்னோர் கள்.

அன்றாடம் சூரிய உதயத்துக்கு முன்பும், சூரிய அஸ்தமனத்துக்குப் பின்பும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் விலகி வீட்டில் நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தும். மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும்.செல்வத்தை தங்க வைக்கும். ஒருவனுக்கு ஜாதக ரீதியாக பிரச்னைகள் இருந்து அவற்றால் குடும்பம் முழுவதுமே துன்பங்களை அனுபவிக்கும் சூழ்நிலை வந்தாலும் அதை சங்கடமின்றி கடந்து வருவதற்கு இறைவழிபாடே சிறந்தது என்பது ஆன்மிகபெரியோர்களின் வாக்கு. 

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முக்கிய சம்பிரதாயங்களும் கூட வகுத்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.சுமங்கலிகள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். உப்பு பாத்திரத்தைக் கழுவக் கூடாது. கவிழ்க்கவும் கூடாது. உப்பு வாங்கி  வருவது மகாலஷ்மி யை அழைப்பதற்கு சமம்.

தினந்தோறும் விளக்கு வைத்த பிறகு தலை வாருவது, பேன் பார்ப்பது, உரக்க சத்தமிடுவது, சச்சரவு செய்வது அறவே இருக்க கூடாது. குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இதைக் கடைப்பிடித்தால் வீட்டில் இருக்கும் லஷ்மியை வெளியேற செய்வதற்கு சமம்.சுமங்கலிகள் நெற்றி யில் குங்குமமின்றி இருப்பது கூடாது.வீடு தேடிவரும் சுமங்கலிகளுக்கு குங்குமம், தாம்புலம் கொடுப்பதற்கு முன்பு தங்களது நெற்றியில் அதை இட்ட பிறகு கொடுக்க வேண்டும்.  

ஆடை தானம் கொடுப்பதாக இருந்தால் ஆடையோடு ஒற்றை எண்ணிக்கையில் 1, 11, 101 என்று பணம் வைத்து கொடுக்க வேண்டும். விளக்கு வைத்த பிறகு மங்களப் பொருள்களான எண்ணெய்,  பால் பொருள்கள், உப்பு போன்றவற்றைத் தானமாக கொடுப்பதோ பெறுவதோ கூடாது.

வீட்டில் நிம்மதி நிலைக்கவும் செல்வம் பெருகவும்  சுமங்கலிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அதனால் தான் மலர்ந்த முகத்துடன் அமைதியும் அன்பும் தவழும் பெண்களை மகராசி. மகாலஷ்மி போல் இருக்கே என்று வாழ்த்துகிறார்கள். எல்லா பெண்களும் மகராசியாக மகாலஷ்மியின் அருளைப் பெற்றவர்களாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் இல்லத்தில் மகிழ்ச்சி தங்கும். 


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP