Logo

மனம் அமைதியடைய என்ன செய்ய வேண்டும்?

மனதில் எண்ணற்ற குழப்பங்கள் இருக்கும் போது எடுக்கும் எந்த முடிவும் நன்மையையோ சரியான பாதை யையோ வழிகாட்டாது. அதனால் அதன் போக்கில் விட்டு விட்டு வேறு செயலில் கவனத்தை திசை திருப்பினால் மனம்
 | 

மனம் அமைதியடைய என்ன செய்ய வேண்டும்?

குழம்பிய குட்டையில் மீன் பிடித்த கதை என்று சொல்வார்கள். அது போன்று மனம் கலக்கத்தில் இருக்கும் போது செய்யும் செயல்கள் எடுக்கும் முடிவுகள் எதுவுமே சரியான பாதையை நோக்கி இருக்காது. மனத்தை அதன் போக்கில் விட்டால் சிறிது நேரத்தில் அமைதியடைய தொடங்கும். 

புத்தர் தன் சீடர்களோடு ஒரு ஊருக்கு பயணம் செய்தார். அந்த ஊரை அடைவதற்கு முன்பு வழியில் இருக்கும் ஆற்றை கடந்து வர வேண்டும். நெடுந்தொலைவிலிருந்து பயணப்பட்டதால் அனைவரும் களைப்பாக உணரவே சிறிது நேரம் ஓய்வெடுத்து பிறகு செல்லலாம் என்று மரத்தின் அடியில் இளைப்பாறினார்கள்.

புத்தருக்கு களைப்பின் மிகுதியால் தாகம் உண்டானது. உடனே சீடன் ஒருவனை அழைத்து எனக்கு சற்று தாகமாக இருக்கிறது.  குடிக்க நீர் வேண் டும். ஆற்றில் இருந்து குடிக்க தண்ணீர் கொண்டு வா என்று அனுப்பினார்.  அவனும் சரி என்று வேகமாக நடந்து ஆற்றை அடைந்தான். அவர்கள் வரும்போது தெளிந்த நீரோடையாக இருந்த ஆற்று நீர்  அப்போது கடந்த மாட்டுவண்டி ஒன்றால் சேறு போல் குழம்பியிருந்தது.

நாம் ஆற்றைக் கடக்கும் போது நீர் நன்றாக இருந்ததே ஒருவேளை நாம்தான் கவனிக்கவில்லையோ என்று  நினைத்தான்.  இந்த கலங்கிய நீரை எப்படி தாகத்துக்கு தணிக்க குடிக்க முடியும். அதிலும் குருவுக்கு அல்லவா எடுத்து செல்கிறோம் அதனால் இந்த தண்ணீரை எடுத்து செல்லாமல் இருப்பதே மேல் என்று திரும்பியவன் புத்தரைக் கண்டு அந்த நீரை குடிக்கும் அளவுக்கு சுத்தமானதாக இல்லை சுவாமி.. மிகவும் கலங்கிய நிலை யில் இருக்கிறது என்றான்.

இல்லை அந்த நீர் தெளிவான நீர்தான். நீ சற்று ஓய்வெடுத்துவிட்டு பிறகு சென்று எடுத்துவா நீர் தெளிவாக இருக்கும் என்றார். சீடனுக்கு வருத்த மாகிவிட்டது. குருவுக்கு அதிக தாகம் போல் இருக்கிறது அதனால் தான் மீண்டும் ஆற்றில் நீர் எடுத்து வர சொல்கிறார் என்று தாமதிக்காமல் மீண்டும் ஓடினான்.

ஆற்று நீர் கலங்கியபடி தான் இருந்தது. என்ன செய்வது நம்மை போல் குருவும் இதைக் கவனிக்கவில்லை போல. அதனால் தான் தாகத்தில் நீர் தெளிவாக இருக்கிறது என்று நினைக்கிறார் போலும் என்று மீண்டும் புத்தரை நாடி ஆற்று நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்றான். புத்தர் அவனைப் பார்த்தார். நான் தான் உன்னை ஓய்வு எடுத்து விட்டு போக சொன்னேனே நீ ஏன் உடனே போனாய். சற்று நேரம் எங்களோடு நீயும் ஓய்வெடு. பிறகு போய் எடுத்து வா என்றார்.

சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் இவ்வளவு உறுதியாக குரு சொல்லும் போது அதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவர் சொல்வது போல் செய்வோம் என்று சிறிது நேரம் கழித்து சென்றான். ஆற்று நீர் பளிங்கு போல் தூய்மையாக இருந்தது. அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. தண்ணீர் எடுத்துக்கொண்டு புத்தரிடம் கொடுத்தான். அவர் பருகும் வரை காத்திருந்து இப்போது மட்டும் எப்படி குருவே தண்ணீர் தெளிவாக இருக்கிறது என்று கேட்டான்.

நீ முதலில் ஆற்றுக்கு சென்ற போது அப்போதுதான் மாட்டுவண்டி ஒன்று ஆற்றை கடந்து சென்றது. அதனால் தான் ஆற்று நீர் கலங்கி குழம்பி இருந்தது. அதைக் கண்டு நீ குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று வந்துவிட்டாய். அதே போன்று இரண்டாவது முறை நீ செல்லும் போதும் போதிய இடைவெளி இல்லாததால் மீண்டும் கலங்கிய நிலையில் இருந்தது. இந்த இருமுறையும் உன் கவனம் தெளிந்த நீரில் மட்டுமே இருந்ததே தவிர கலங்கிய நிலைக்கான காரணத்தைக் கண்டறியும் நிலையில் இல்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்திருந்தால் நீர் தெளிந்திருக்கும். உனக்கு காரணமும் புரிந்திருக்கும். 

இதுபோல் தான் மனமும் கூட. மனதில் எண்ணற்ற குழப்பங்கள் இருக்கும் போது எடுக்கும் எந்த முடிவும் நன்மையையோ சரியான பாதை யையோ  வழிகாட்டாது. அதனால் அதன் போக்கில் விட்டு விட்டு வேறு செயலில் கவனத்தை திசை திருப்பினால் மனம் அமைதியடையும். தெளிவான முடிவும் தென்படும் என்றார்.

புத்தரைப் போன்று ஞானம் பெற வேண்டாம். ஆனால் புத்தர் காட்டிய வழியில் வாழ்ந்து பார்க்கலாம். வாழ்க்கையும் தெளிந்த நீரோடை போல் இருக்கும். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP