Logo

இறைவனை நினைக்கும் மனம் எப்படி இருக்க வேண்டும்...

மனதாலும் பக்தியாலும் நம்பிக்கையா லும் இறைவனை மட்டுமே நினைத்து செயல்படு பவனால் இறையன்பை எளிதில் பெறமுடியும். மனமும்,அதில் உறுதியும் ஒத்துழைத்தால் கடவுளை கண்ணார தரிசிக்கலாம்.
 | 

இறைவனை நினைக்கும் மனம் எப்படி இருக்க வேண்டும்...

இறைவனை நேரில் கண்டால்தான் நம்புவோமா என்ன? மனதாலும் பக்தியாலும் நம்பிக்கையாலும் இறைவனை மட்டுமே நினைத்து செயல்படு பவனால் இறையன்பை எளிதில் பெறமுடியும். மனமும்,அதில் உறுதியும்  ஒத்துழைத்தால் கடவுளை கண்ணார தரிசிக்கலாம். அத்தகைய மனம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா மகாபாரதத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அனைவருக்கும் பிடித்த ஏகலைவன் போன்று இருக்க வேண் டும்.

ஏகலைவன் வேடுவர் குலத்தில் பிறந்தவன். இவனுக்கு வில் வித்தையின் மீது அபார நாட்டம் இருந்தது. வில் வித்தையை துரோணாச்சாரியாரி டம் கற்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவரிடம் இருக்கும் அனைத்து கலைகளையும் கற்று சிறந்த வீரனாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஏகலைவன், குருதட்சணை வைத்து துரோணாச்சாரியாரிடம் கற்றுக்கொடுக்கும்படி வேண்டினான்.

துரோணர் வேடுவனான உனக்கு போர்க்கலைகள் கற்றுத்தரமுடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்.ஆனால் மனம் தளராத ஏகலைவன் துரோணாச்சாரியாரைப் போன்று சிலை ஒன்றை வடித்தான். அந்த சிலையையே குருவாக மனதில் நிறுத்தினான். தினந்தோறும் குருவை வழி பாடு செய்து வித்தையைக் கற்றுக்கொள்ள தொடங்கினான்.

சிறந்த குருபக்தியும், கற்கும் அதீத ஆர்வமும் இவனை மிகவும் திறமையுள்ளவனாக மாற்றியது. போர்களத்தில் சிறந்த வீரனாக உருவாகும் அள வுக்கு சுயமாக பயிற்சி பெற்றான். இவனிடம் இருந்த வில் வித்தையின் நுணுக்கங்களும் இணைந்து இவனை வில் வித்தையிலும் பெரிய வீர னாக காட்டியது. 

ஒருமுறை துரோணரிடம் பயிற்சி பெற்ற பாண்டவர்களும், கெளரவர்களுக்கும் வேட்டைக்காக காட்டுக்கு வந்தார்கள். அவர்களுடன் வேட்டை நாய்களும் வந்தது. துரோணரைப் பொறுத்தவரை அவருடைய பயிற்சி மாணாக்கர்களில் வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜூனன் என்பதே. அவனைத் தவிர வில்வித்தையில் வேறு யாரும் இருக்கக் கூடாது என்பதாலேயே  வில் வித்தையின் நுணுக்கங்களை அர்ஜூனனுக்கு கற்றுத் தந்திருந்தார் துரோணாச்சாரியர்.

வேட்டையின் போது நாய் ஒன்று ஏகலைவன் இருந்த இடத்திற்கு வந்தது. ஏகலைவன் தன்னுடைய ஆற்றலினால் நாயை அடக்கினான். அது மீண் டும் பாண்டவர்களிடம் வந்து சேர்ந்தது. நாய் அமைதியாக அடங்கி வருவதைக் கண்டு அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. நாயை அடக்கும் அளவுக்கு ஆற்றல் மிக்க ஒருவன் இருக்கிறானா அவனை பார்க்க வேண்டுமே என்று  அனைவரும் தேடி அது ஏகலைவன் என்பதையும் கண்டார் கள். அதை துரோணரிடம் சென்று கூறினார்கள்.

அவருக்கு ஏகலைவனைச் சந்திக்க வேண்டும் என்னும் ஆவல் பிறந்தது. நேராக அவனிடம் சென்றார். நாயின் வாயை கட்டக்கூடிய வில் வித் தையை உனக்கு கற்றுத்தந்தது யார்? என்று கேட்டார்.

ஏகலைவன், என்னுடைய குருநாதாரான தாங்கள் தான் என்றான், துரோணருக்கு ஆச்சரியமாக இருந்தது. அர்ஜூனனைத் தவிர வேறு யாருக்கும் நான் கற்றுத்தரவில்லை. உனக்கு எப்படி எப்போது கற்றுத்தந்தேன் என்றார். ஏகலைவன், உங்கள் உருவத்தை செய்து குருவாக பூஜித்து நானா கவே கற்றுக்கொண்டேன். உங்கள் மீது இருந்த பக்தியால் எனக்கு இது சாத்தியமாயிற்று என்றான். 

துரோணருக்கு ஆச்சர்யம் அவ்வளவு குருபக்தியா உனக்கு என்றார். ஏகலைவன் அவரிடம் தட்சணையோடு வந்து கற்றுத்தரும்படி சொன்னதை நினைவுபடுத்தினான். சரி அப்படியானல் எனக்கு நீ குருதட்சணை கொடுக்க வேண்டுமே என்றார். நிச்சயமாக என்னை அங்கீகரித்தீர்களே அப் போதே நான் உங்கள் சீடன் தான், என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், நான் தருவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்றான்.

உனது வலது கை கட்டை விரலை எனக்கு தட்சணையாக தருவாயா என்றார். அப்படியே என்ற ஏகலைவன் தனது கட்டைவிரலை அவருக்கு அறுத்து கொடுத்தான். இதனால் ஏகலைவனிடம் இருந்த தனுர் வேத நுணுக்கங்கள்  மறைந்தது என்றாலும் வேடுவனுக்கு இது தேவையில்லை என்பதாலேயே துரோணர் இந்த தகாத செயலை செய்தார். எனினும் ஏகலைவன் மிகவும் புகழ் பெற்றவனாக குருபக்தி மிக்கவனாக இன்றும் போற் றப்படுகிறான். 

பக்தி என்பது குருவிடமே இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் போது  இறைவனிடம் இன்னும் உறுதியாக இருக்க வேண்டும். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP