தடையின்றி காரியம் நடக்க என்ன செய்ய வேண்டும்

இந்த மந்திரத்தைச் சொல்லி பிள்ளையாரை வழி பட்டு காரியம் தொடங்கினால் தடங்கலின்றி முற்றுபெறும் என்கிறது விஷ்ணுசகஸ்ரநாமம்....

தடையின்றி காரியம் நடக்க என்ன செய்ய வேண்டும்
X

செய்யும் காரியங்கள் நன்மையாக நடக்க இறைவனின் அருளை நாடுவோம். அதில் முதல் இடம் பிள்ளையாருக்குத்தான். சுப விசேஷங்கள் எது வாக இருந்தாலும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்த பிறகுதான் மற்ற வழிபாடுகள் நடக்கும்.

பிள்ளையாரை மகிழ்விக்கவும் வினைகள் தீர்க்கவும் கீழ்க்கண்ட இந்த மந்திரங்களை சொல்லி வணங்க வேண்டும்.
தினமும் காலையில் பிள்ளையாரை நினைத்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்

பொருள்:

யானை முகத்தினை உடையவனே.பூத கணங்களால் வணங்கப்பட்டவனே ,விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவனே.. உமையின் புத்திரனே.. துக்கத்தை தீர்ப்பவனே விக்னேஸ்வரனே உனது பாதம் பணிந்து வணங்குகிறேன்.

தடையில்லாமல் காரியங்கள் முற்றுப் பெற முதல்வழிபாடு விநாயகருக்கே..கீழ்க்கண்ட இந்த மந்திரத்தைச் சொல்லி பிள்ளையாரை வழிபட்டு காரியம் தொடங்கினால் தடங்கலின்றி முற்றுபெறும் என்கிறது விஷ்ணுசகஸ்ரநாமம்.

சுக்லாம் பரதரம் விஷ்ணுவும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத்சர்வ விக்நோப சாந்தயெ...

விளக்கம்:

எல்லாவித தடைகளும் இடையூறுகளும் நீங்கி மறைந்து போக வெள்ளை நிற ஆடையணிந்து நான்கு திருக்கரங்களைக் கொண்டவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும்,சந்திரனைப் போன்ற தன்மை கொண்டவரும், எப்போதும் ஆனந்தமாக காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம்.


newstm.in

newstm.in

Next Story
Share it