40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் தரிசனம் தரும் பேறு என்ன...

பெருமாள் சிறப்பு மிக்க புண்ணிய தலங்கள் பற்றி சொல்லுங்கள் என்றால் ஸ்ரீ ரங்கமும், திருப்பதியும் என்று உடனடியாக சொல்வார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் முந்தைய புராண சிறப்பை கொண்ட தலம்...

40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் தரிசனம் தரும் பேறு என்ன...
X

பெருமாள் சிறப்பு மிக்க புண்ணிய தலங்கள் பற்றி சொல்லுங்கள் என்றால் ஸ்ரீ ரங்கமும், திருப்பதியும் என்று உடனடியாக சொல்வார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் முந்தைய புராண சிறப்பை கொண்ட தலம் காஞ்சியில் இருக்கிறது. காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில்.

மூலவரான வரதராஜர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தாயார் பெருந்தேவியார் கிழக்கு நோக்கி அருள் புரிகிறார்.ஐராவதம் யானை மலைவடிவம் கொண்டு நாராயணனை தாங்கி நின்றதால் இத்தலம் அத்திகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் தங்கபல்லி, வெள்ளி பல்லி தரிசனமும் விசேஷமானது.

இக்கோவிலின் நூற்றுங்கால் மண்டபத்துக்கு வடக்கே இரண்டு குளங்கள் இருக்கின்றன. இதற்கு தென்திசையில் அமைந்திருக்கும் நீராழி மண்ட பத்தில் கீழ் நீருக்கு அடியில் ஒரு மண்டபத்தில் மறைந்துக்கொண்டிருக்கிறார் அத்தி வரத பெருமாள். அத்திவரதரை வெள்ளித்தகடு பதித்த பெட்டி யில் சயனக் கோலத்தில் வைத்து அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளார்கள்.

கோயில்களில் உள்ள குளங்கள் வற்றிப்போவதுண்டு.ஆனால் இத்தலத்தில் பெருமாள் மறைந்திருக்கும் குளம் வற்றுவதில்லை. அதனால்அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீருக்குடியில் இருக்கும் பெருமாள் பக்தர்களின் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அத்திவரத பெருமாள் மிகப் பெரிய அத்தி மரத்தால் பிரம்மனால் செய்யப்பட்டது.

40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் தரிசனம் தரும் பேறு என்ன...

குளத்தில் இருக்கும் அத்திவரதரை வெளியே கொண்டுவரும் பொருட்டு குளத்து நீர் முழுவதும் வாரி இறைக்கப்பட்டு, கடந்த 28.6.2019 அன்று அதி காலை 2.45 மணிக்கு அத்திவரதர் குளத்தில் இருந்து எழுந்தருளச்செய்து வசந்த மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்குரிய பூஜைக ளும், சடங்குகளும் செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.1979 ஆம் ஆண்டு அவரது திருமேனியில் பூசப்பட்டிருந்த பச்சையம் அனை வருக்கும் தரப்பட்டது.

வரதனின் திருமேனியில் இருந்த காரணத்தால் பச்சையம் நறுமணத்துடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் தொடர்ந்து 48 நாட்கள் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி வரை அத்திவரதர் தரிசனம் தரவிருக்கிறார். முதலில் சயனக்கோலத்திலும், பிறகு நின்றகோலத்திலும் தரிசனம் தரும் அத்திவரதரை இலட்சக்கணக்கான மக்கள் தரிசிக்க காத்திருக்கிறார்கள்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தரும் இவரது தரிசனம் 1939, 1979 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடங்கு கிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறையே தரிசனம் என்பதால் இவரை ஒருமுறை தரிசித்தாலே மோட்சம் உண்டாகும். இரண்டாவது முறை தரி சித்தால் வைகுந்த பதவி பெறுவார்கள் என்பதும் ஐதிகம்.

அத்தி வரதரை காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரையும் தரிசிக்கலாம். குடும்பத்துடன் அத்தி வரதரை தரிசனம் செய்து மகிழுங்கள்.மோட்சம் கிடைக்கும்.

அத்திவரதர் குளத்தில் மூழ்கியிருக்க என்ன காரணம்.. சுவாரஸ்யமான வரலாறை நாளை பார்க்கலாம்.

newstm.in

newstm.in

Next Story
Share it