இறுதிகாலத்துக்கு பிறகு வரும் நல்லதும் கெட்டதும் என்ன...?

இறுதிகாலத்துக்கு பிறகு வரும் நல்லதும் கெட்டதும் என்ன...?

இறுதிகாலத்துக்கு பிறகு வரும் நல்லதும் கெட்டதும் என்ன...?
X

“இன்று எது உன்னுடையதாக இருக்கிறதோ அது நாளை வேறொரு வருடையதாகிறது.. எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு.” என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதை மூளை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே.. இந்த உலகில் நம்மிடம் இருக்கும் பொருள்களை வேறு உலகம் போகும் போதும் எடுத்து செல்வோமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லவேண்டும். அதை உணர்த்தும் கதை இது...

ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். என்னிடம் இருக்கும் செல்வத்தை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று பெருமைபட கூறுவார். இவரது பெருமை செவிவழியாக காற்றில் பறந்து அந்த ஊரில் இருந்த துறவி யையும் அடைந்தது. செல்வந்தருக்கு தகுந்த பாடம் கற்பிக்க எண்ணினார். அதற் கான நேரம் வரும் வரை காத்திருந்தார்..

ஒருநாள் செல்வந்தர் வீட்டு வழியாக துறவி போகும் போது செல்வந்தர், துற வியை வீட்டிற்கு அழைத்தார். துறவியும் புன்னகைத்தப்படி வீட்டினுள் சென்றார். “வாருங்கள் துறவியாரே. நீங்கள் இங்கு வந்தது நான் செய்த பாக்கியம். தங்க ளுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள். நான் செய்வதற்கு கடமைப் பட்டிருக்கி றேன்” என்றான்.

“என்ன கேட்டாலும் செய்வாயா மகனே.. அவ்வளவு செல்வாக்கு பெற்றவனா நீ. இறைவனது திருநாமத்தால் மட்டுமே பெறுவதற்கரிய பொருளை பெறமுடியும் என்று நினைத்தேன். ஆனால் நீ சொல்வதைக் கேட்டதும் மகிழ்ச்சியில் மனம் குதூகலிக்கிறது” என்றார். செல்வந்தருக்கு பெருமை தாங்கவில்லை. “இருக்காதா பின்னே.. இறைவன் அளவுக்கு பாராட்டிவிட்டாரே. மகிழ்ச்சி துறவியாரே நீங்கள் ஒருவர் தான் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். சரி சொல்லுங்கள் தங்களுக்கு என்ன செய்யவேண்டும்? எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய காத்திருக்கிறேன்” என்றார்.

“எனக்கு எதன் மீதும் ஆசையில்லை மகனே எனக்கு தேவையெல்லாம் ஒன்றே ஒன்றுதான் என்று செல்வந்தரைப் பார்த்தார். என்னவேண்டுமானாலும் சொல்லுங் கள்” செய்கிறேன் என்றார். துறவி தன் மடியின் முடிச்சை அவிழ்த்து ஒரு ஊசியை எடுத்தார். “என்ன சொல்லுங்கள் இது போல் தங்க ஊசி வேண்டுமா அல்லது வைர ஊசியா?” என்று கேட்டார் செல்வந்தர்.

“இரண்டுமே வேண்டாம் மகனே இதே ஊசி போதும். ஆனால் இங்கு அல்ல. நாம் இருவரும் இறுதிக்காலம் முடிவடைந்ததும் வேறு ஒரு ஊரில் நிச்சயம் சந்திப் போம் அப்போது கொடு நான் வாங்கிக்கொள்கிறேன்” என்றார் துறவி. திடுக்கிட்டு நிமிர்ந்தார் செல்வந்தர் “என்ன சொல்கிறீர்கள்? நான் எப்படி இந்த ஊசியை என்னு டன் எடுத்துக்கொண்டுவரமுடியும். நம் உடலையே இந்த உலகில் விட்டு வரும் போது இந்த பொருளைகொண்டுவரவா முடியும்? இது கூட தெரியாமல் இருக்கிறீர் களே” என்றார் செல்வந்தர்.

“என்ன இப்படி சொல்கிறாய் மகனே நீதானே என்னால் எல்லாமே முடியும் என் றாய். நாம் செய்யும் நல்லதும் கெட்டதும் மட்டும்தான் இறுதிக்காலத்துக்கு பிற கும் நம்முடன் வரும் அதைப் புரியவைக்கத்தான் இந்த ஊசி நாடகம்” என்றார் துறவி மர்மப்புன்னகையுடன். நன்றாகவே புரிய வைத்துவிட்டீர்கள் என்ற செல் வந்தர் செருக்கை தொலைத்து தர்மம் செய்வதில் ஈடுபட்டார்.

newstm.in

Next Story
Share it