Logo

இறைவனை வழிபட என்ன தேவை?

செய்யும் செயல்களில் கவனம் சிதறாமல் இருந்தால் செய்யும் வேலை சிறப்பாக இருக்கும். மனதில் இறைவனை நினைத்து வழிபடும் போது கவ னச்சிதறல்கள் உண் டானால் வேண்டுதல்கள் என்னவாக இருந்தா லும் அதில் பலன் கிடைக்குமா என்பது சந்தே கமே...
 | 

இறைவனை வழிபட என்ன தேவை?

செய்யும் செயல்களில் கவனம் சிதறாமல் இருந்தால் செய்யும் வேலை சிறப்பாக இருக்கும். மனதில் இறைவனை நினைத்து வழிபடும் போது கவ னச்சிதறல்கள் உண்டானால் வேண்டுதல்கள் என்னவாக இருந்தாலும் அதில் பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே...

ஊருக்கு ஒதுக்குபுறத்தில் ஆசிரமம் ஒன்று இருந்தது. ஆசிரமத்தின் தலைவருக்கு எந்த வேலையும் படு நேர்த்தியாக இருக்க வேண்டும். வேலை யில் குறை இருக்க கூடாது. ஆசிரமத்தைச் சுத்தமாக பராமரிக்க வேண்டும். அவரிடம் இருந்த சீடர்கள் இதனாலேயே மிகுந்த கவனத்தோடு இருப் பார்கள். கவனமின்மையால் நடக்கும் தவறுகளை அனுமதிக்காத தலைவர் மீது பயமும், பக்தியும் மிகுந்திருந்தது.

அந்த ஆசிரமத்தில் எல்லா சீடர்களும் திறமையிலும் பக்தியிலும் கல்வியிலும் சிறந்து விளங்கினார்கள். அவர்களில் ஒருவன் மட்டும் எப்போதும் எதையாவது செய்தபடி தலைவரின் கோபத்துக்கு ஆளாகி கொண்டிருந்தான். எப்போதும் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று அவர்கள் பக் கம் கவனத்தைத் திருப்பி வேலை செய்வதால் அவ்வப்போது ஆசிரம தலைவரின் கோபத்துக்கு ஆளானான். ஆனால் அப்போதும் அவனுடைய நடவடிக்கையில் எவ்வித மாற்றமுமில்லை. தகுந்த நேரத்தில் இவனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார் தலைவர்.

ஆசிரமத்தைச் சுத்தம் செய்யும் பணியை சீடர்கள் தினம் ஒருவராக பொறுப்பேற்று செய்துவந்தார்கள். ஒரு நாள் இவனுடைய முறை வந்தது. இவ னும் வழக்கம் போல பிறரின் மீது கவனத்தை வைத்து தலைவர் என்ன சொல்வாரோ என்ற எண்ணத்தோடு ஏனோ தானோவென்று சுத்தம் செய்து கொண்டிருந்தான். அதற்கு முந்தைய நாள் மக்களுக்கான நேரம் என்பதால் கூட்டம் கூடியதில் ஆசிரமத்தில் குப்பைகள் கொஞ்சம் தாராளமாக சேர்ந்துவிட்டிருந்தது.

அதிகாலையில் எழுவதே சிரமம். இதில் குனிந்து நிமிர்ந்து பணி செய்வது அவனுக்கு சிரமமாக இருந்தது. என்ன செய்வது தலைவரது கட்டளை யாயிற்றே. அதனால் மறுப்பு சொல்லாமல் அன்று சுத்தம் செய்தான். தலைவர் அதிகாலை நடைபயிற்சியை முடித்து வந்தார். சுற்றிலும் ஆங் காங்கே குப்பைக்கூளங்கள் இருந்தது. அதைக் கண்டு இன்று யார் சுத்தம் செய்தது என்றார். இவன் ஓடி வந்து என்ன செய்வதென்று அறியாமல் நான் தான் ஐயா. ஆனால் இன்னும் என் வேலை முடியவில்லை என்றபடி மீண்டும் சுத்தப்படுத்த தொடங்கினான்.

தலைவர் ஆற்றில் குளித்து விட்டு திரும்பும் போது எதிர்பட்ட அவன், ஐயா இன்னும் ஏதேனும் தங்கள் கண்களுக்கு தெரிகிறதா என்று கேட்டான். இதுதான் சமயம் என்று நினைத்த தலைவர் மூலையில் எல்லாம் அழுக்குகள் அப்புறப்படுத்தப்படவில்லையே என்றார். ஓ அப்படியா என்றபடி அதைச் சுத்தம் செய்தான்.  இப்படியே அவன் சுத்தம் செய்வதும் அவரை அழைத்து காண்பிப்பதும் அவரும் ஏதாவது ஒரு குறை சொல்வதுமாய் நேரம் கழிந்தது.அவன் அதிக நேரம் வேலை செய்து களைத்தே விட்டான். 

ஐயா என்னுடைய வேலையில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது. அதைத் தெரிந்துகொண்டால் மீண்டும் அந்தத் தவறை செய்யமாட்டேன். என்ன வென்று சொல்லுங்களேன் என்றான். தலைவர் அவனை அழைத்தார். உன் வேலையில் எந்தக் குறையும் இல்லை. ஆனால் உன் மனதில் தான் அதிக குறையிருக்கிறது. எந்த வேலையையும் கவனத்துடன் செய்தாலே போதுமானது. நீ அதைத் தவிர்த்து சரியாக சுத்தம் செய்கிறோமா  அல் லது யாராவது வேடிக்கை பார்க்கிறார்களா என்று கவனத்தை வேறுபுறம் திருப்பவே உன் வேலையில் பயமும் பதற்றமும் குடி கொண்டு விட் டது. 

அதனால் நீ சரியாக சுத்தம் செய்த செயலை கூட மறந்து நான் குறை சொன்னாலும் என்னவென்று கவனிக்காமல் மீண்டும் மீண்டும் ஒரே வேலையை செய்து என்னுடைய கருத்தை கேட்க தொடங்கிவிட்டாய். போக போக நான் என்ன சொல்வேனோ என்ற பயமே உன்னை ஆட் கொண்டு விட்டது. அதனால் முதலில்  உன் மனதில் யார் என்ன சொல்வார்களோ என்ற எண்ணத்தைத் தூக்கி வெளியே போடு. கவனம் தானாக செய்யும் வேலையில் நிலைக்கும் என்றார்.

உண்மைதான் இறைவனை அடைய தூய்மையான மனம் போதும். இப்படி வழிபட்டால் தான் வேண்டியது கிடைக்கும் என்று ஒவ்வொருத்தர் சொல்வதையும் பிசகாமல் கடைபிடித்து பிறகு அதை சரியாக செய்கிறோமா இல்லையா என்ற சந்தேகத்தோடு இறைவனையும் கவனமாக வழி பட முடியாமல் போகும். அதனால் இறைவனை வழிபட ஒரு முக கவனம் இருந்தால் போதும்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP