Logo

மனிதனுக்கு சொந்தமில்லாதது...

எவன் ஒருவன் அன்பும், இரக்கமும், ஒழுக்க மும் கடைப்பிடித்து தர்மத்தின் படி வாழ்கி றானோ அவனே மனிதன் என்னும் மாண்புக் குரியவன் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள். அதே நேரம் கோபம், குரோதம், ஆத்திரம், வஞ் சம்,பொறாமை,சூது,ஏமாற்றுதல் என்ற குணங்க ளைக் கொண்டிருப்பவர்கள் ...
 | 

மனிதனுக்கு சொந்தமில்லாதது...

மனிதனுக்கு சொந்தமானது எது என்று கேட்டால் ஆன்மிக வழியின்படி எதுவுமே இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். மனித உடலே மாயை என்னும் போது சொந்தமாக என்ன இருக்க முடியும். ஆனால் இப்போது பார்ப்பது பழகுவது எல்லாவற்றையும் சொந்தம் கொள்ள நினைக்கிறார் கள் மனிதர்கள். அவற்றில் நன்மையும் உண்டு. அளவில்லாத தீமையும் உண்டு.

மனிதனிடம் என்ன இருக்க வேண்டும் என்று விவரிக்கிறது இந்துதர்மம். எவன் ஒருவன் அன்பும், இரக்கமும், ஒழுக்கமும் கடைப்பிடித்து தர்மத் தின் படி வாழ்கிறானோ அவனே மனிதன் என்னும் மாண்புக்குரியவன் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள். அதே நேரம் கோபம், குரோதம், ஆத் திரம், வஞ்சம்,பொறாமை,சூது,ஏமாற்றுதல்என்ற குணங்களைக் கொண்டிருப்பவர்கள் விலங்குகளை விட கேவலமானவர்கள் என்றும் கூறுகிறார் கள்.

ஆனால் இந்த பழக்கங்கள் நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் எதுவுமே நமக்கு சொந்தமானது இல்லை. ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு விட முடியாமல் தவிக்கிறோம். இளம் துறவி ஒருவர் இருந்தார். எல்லா நற்குணங்களையும் கொண்டிருந்த அவருக்கும் ஒரு குறை இருந்தது. தமக்குள் இருக்கும் அதீத கோபத்தை அவ்வப்போது உணர்ந்தார்.அதை அடக்க தெரியாமல் தவித்துவந்தார்.

எந்த நேரமும் அவருக்கு கோபம் வந்துவிடுமோ என்ற பயம் இருந்தது. இதனால் தியானம் செய்யவும் முடியாமல், வேறு எந்த பணியிலும் கவ னம் செலுத்த இயலாமல் இருக்கவே தன்னுடைய குருவை சந்தித்து கேட்டுவிடுவோம் என்று குருவை சந்திக்க வந்தார்.

குருவை சந்தித்து இயல்பான நலம் விசாரிப்புக்கு பிறகு  குருவே எனக்குஅடக்கவே முடியாதஅளவுக்கு கோபம் வருகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றார். மனதை அமைதியாக வைத்திருக்கும் உனக்கு ஏன் இந்த பிரச்னை வந்தது. அப்படி என்ன அடக்க முடியாத அள வுக்கு உனக்கு கோபம் வருகிறது என்னிடம் காட்டு என்றார்.

துறவிக்கு ஒன்றும் புரியவில்லை. இப்போது எப்படி குருவே காண்பிப்பது என்றார். சரி அப்படியானால் உன் கோபத்தை எப்போது என்னிடம் காட் டுவாய் என்று கேட்டார். அதுதான் குருவே எனக்கும் தெரியவில்லை. எதிர்பார்க்காத நேரத்தில் வந்து விடுகிறது என்றார் இளம் துறவி.

அப்படியானால் அந்த கோபம் உன்னுடன் பயணிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் நான் கேட்டது அதை வெளிப்படுத்தியிருப்பாய். ஆக அது உன்னுடைய சொந்த இயல்பாக இல்லை. நீ பிறக்கும் போதும் உன்னுடன் இருந்ததில்லை. உன் பெற்றோரும் அதைக் கொடுத்ததில்லை. இப்படி எந்த வகையிலும் சொந்தமில்லாத ஒன்றை ஏன் உன்னுள் வைத்துக்கொண்டிருக்கிறாய். அப்படி வருவதற்கு அனுமதிக்கிறாய் என்றார்.

சீடனுக்கு உண்மை புரிந்தது. ஆம் குருவே தாங்கள் சொல்வது சரிதான் இனி எனக்குள் அவை தலை தூக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்றார். 
நமக்கு சொந்தமில்லாத இந்த தீய பழக்கங்களை நாமும் விட்டுவிடுவோம்..


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP