மனிதன் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு தவறுக்கு ஒரு முறை மட்டுமே மன்னிப்பு, ஒரே தவறுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு என்பது தர்மசாஸ்திரத்திலும் கிடையாது.

மனிதன் எப்படி இருக்க வேண்டும்?
X

உலகில் இருக்கும் ஜீவ ராசிகளில் மனிதப் பிறவி மட்டும் தான் உயர்ந்தது. ஆனால் அதை உயர்வாக வைத்திருக்க சில வழிகள் உண்டு. அதை முறையாக கடைப்பிடிப்பவர்கள் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே. இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் சொல்லவில்லை. இறை வன் மனிதனை படைக்கும் போது தவறு செய்வது மனித இயல்பு என்பதையும் சேர்த்துவிட்டான். ஆனால் ஒரு தவறுக்கு ஒரு முறை மட்டுமே மன்னிப்பு, ஒரே தவறுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு என்பது தர்மசாஸ்திரத்திலும் கிடையாது.

மனிதன் நிறைகளோடு இருந்தாலும் குறைகளை மட்டுமே பூதாகரமாக காண்கிறான். அவற்றுள் ஒன்று நிதானம் இழப்பது. நிதானத்தை இழப்பதி னால் வாழ்க்கையில் எல்லாமே இழக்க வேண்டியிருக்கும். கோபத்தில் மனிதன் அறிவை இழந்துவிடுகிறான். அன்பை இழந்து விடுகிறான். பொறுமையை இழந்துவிடுகிறான். பிறகுஅவன் மனிதன் என்னும் தகுதியையும் இழந்துவிடுகிறான்.

வாழ்க்கையின் எத்தகைய சூழலிலும் நிதானத்தை இழக்காமல் உறுதியோடு இருந்தால் அவன் வாழ்வில் மேன்மையடைவான். இந்த நிதானத் தின் தத்துவத்தை முனிவர் ஒரு சீடனுக்கு உபதேசித்த கதையைப் பார்க்கலாம்.

சீடன் தன் குருவிடம் சென்று குருவே எனக்கு எல்லா கலைகளையும் சிறப்பாக கற்றுகொடுத்துவிட்டீர்கள். ஆபத்துகாலத்தில் என்னை தற்காத் துக் கொள்ள தற்காப்புகலையையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். தாங்கள்தான் அருள் புரிய வேண்டும் என்றான். குருவும் ஆகட்டும். நாளை யிலிருந்து பயிற்சி தொடங்கலாம் என்றார்.

இவனுக்கு குருவின் சம்மதமும் மகிழ்ச்சி. அடுத்து குருவை நோக்கி கேட்டான். எவ்வளவு நாட்களில் இந்தப் பயிற்சியை முடிக்கலாம் குருவே என்றான். அதிகமில்லை மகனே ஆறு மாத காலத்துக்குள் நீ கற்று தேர்ந்துவிடுவாய் என்றார்.

உடனே இவன் முகம் பொறுமையிழந்தது. நீங்கள் சொன்ன காலத்துக்குள் முடிக்க முடியாதா என்றான். அது சற்று சிரமம்தான் ஆனால் ஏன் அப் படி கேட்கிறாய். நீ ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாயா என்றார். சீடன் சிறிது நேரம் யோசித்தான் பிறகு முகமலர்ச்சியடைந்தவனாக நான் தின மும் அதிகப்படியான நேரம் பயிற்சி செய்கிறேன் தேவைப்பட்டால் தினமும் பயிற்சிக்காலத்தை அதிகப்படுத்தி கொள்கிறேன். ஓய்வே இன்றி பயிற்சி செய்கிறேன். இப்படியெல்லாம் செய்தால் எவ்வளவு காலங்களில் என்னால் கற்றுக்கொள்ள முடியும் என்றான்.

குரு சிறிது நேரம் அமைதியாக யோசித்தார். அப்படியானால் நீ கற்றுக்கொள்ள 12 மாதங்கள் ஆகும் என்றார். குருவின் பதிலால் அதிர்ந்த சீடன் நீங்கள் தானே முதலில் ஆறு மாதக்காலத்தில் முடித்துவிடலாம் என்றீர்கள் அதோடு நான் அதிகப்படியாக பயிற்சி செய்வேன் என்றதும் நாட் களைக் குறைக்காமல் அதிகமாக்கி சொல்கிறீர்களே என்றான்.

குரு மெதுவாக கூறினார். மனிதன் ஒவ்வொரு நிமிடமும் நிதானம் தவறாமல் பதறாமல் உறுதியுடன் இருக்க வேண்டும். வேகத்தினாலும் பதற் றத்தினாலும் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. எதையும் ஆர்வத்துடனும், உறுதியுடனும் நோக்கினால் தான் வெற்றி இலக்கை எட்ட முடியும். இது கல்விக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் தான். அதனால் தான் பதறிய காரியம் சிதறும் என்று சொல்கிறோம் என்றார்.

பிரச்னையில்லாத மனிதன் என்று யாருமே இல்லை. அதனால் எனக்கு தான் இவ்வளவு சோதனை என்று நினைத்து நிதானத்தை இழக்காதீர்கள்.

newstm.in

newstm.in

Next Story
Share it