இந்த தவறுகளை செய்தால் வீட்டில் செல்வம் தங்காது !!

இந்த தவறுகளை செய்தால் வீட்டில் செல்வம் தங்காது !!

இந்த தவறுகளை செய்தால் வீட்டில் செல்வம் தங்காது !!
X

சமுதாயத்தில் அனைவரிடமும் செல்வம் ஒரே மாதிரியாக சேர்வதில்லை. ஒரு சில இடத்தில் மட்டும் செல்வ வளம் அதிகமாக நிறைந்து இருக்கும்.அவர்களை பார்க்க பார்க்க இல்லாதவர்கள், இயலாதவர்களுக்கும் ஏக்கமும், அனுதாபமும் வந்து சேரும். அப்படி என்றால் அவர்கள் புண்ணியம் செய்தவர்கள்! நாம் மட்டும் பாவம் செய்தவர்களா? என்கிற கேள்வியும் மனதிற்குள் எழலாம். ஒரு மனிதன் செய்யும் புண்ணியம், பாவம் இரண்டுமே கர்மாக்களாக தொடர்கின்றன எனவும், அதன்அடிப்படையில் தான் அவனுடைய பிறப்பும், இறப்பும் அமையும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.


அக்கர்மவினையை நீக்குவதன் மூலமாக மட்டுமே இப்பிறவியிலும் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்கின்றன புராணங்கள்.வாழ்வில் நாம் அறியாமல் செய்யும் தவறுகள் செல்வ வளம் வருவதையும், நிலைத்து நம்மிடம் பெருகுவதையும் தடை செய்கின்றன.ஒருவருடைய வீட்டில் செல்வவளம் தடையில்லாமல் பெருக, கடன் இல்லாமல் வாழ இறைவழிபாடு அவசியம். நல்ல கர்மாக்களை கொண்டுள்ளவர்கள் இறைவனை மனதாலும், மற்ற கர்மாக்களை பெற்றிருப்பவர்கள் பூஜை, புனஸ்காரங்களாலும் இறைவனை பூஜிக்கிறார்கள்.


ஒருவர் பசி என்று வரும் பொழுது அவரை எந்த சூழ்நிலையிலும் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பக் கூடாது என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. அடுத்ததாக செல்வவளம் தடைபடுவதற்கு முக்கிய காரணம் குலதெய்வ வழிபாடு செய்யாமல் இருத்தல். குலதெய்வத்தை மறந்தவர்களுக்கு செல்வவளம் நிலைக்காது. எந்த ஒரு தொழில் செய்தாலும் அதில் நஷ்டம் ஏற்படுகிறது என்றால் குலதெய்வ குறை இருக்கிறது என்று அர்த்தம். குலதெய்வ வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் வீட்டின் கடன் பிரச்சனைகள், கஷ்ட நிலை மாறி நல்ல ஒரு முன்னேற்றமான சூழ்நிலை பிறக்கும்.

பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் சரியாக செய்யப்படாவிட்டாலும் அங்கு செல்வம் தங்காது. அமாவாசை தோறும் எள்ளும், தண்ணீரும் இறைத்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் பனி போல் விலகிவிடும். இந்தத் தவறுகளை திருத்திக் கொண்டால் நிச்சயம் செல்வம் தானாகவே சேரும் என்கின்றன சாஸ்திரங்கள்.

Next Story
Share it