விநாயகர் தும்பிக்கையை வலது பக்கத்தில் வைத்திருக்கும் காட்சி !! என்ன சிறப்பு தெரியுமா ?

விநாயகர் தும்பிக்கையை வலது பக்கத்தில் வைத்திருக்கும் காட்சி !! என்ன சிறப்பு தெரியுமா ?

விநாயகர் தும்பிக்கையை வலது பக்கத்தில் வைத்திருக்கும் காட்சி !! என்ன சிறப்பு தெரியுமா ?
X

மராட்டிய வரலாற்றில் விநாயகர் முக்கிய இடம் பெற்றிருக்கிறார். இம்மாநில மக்களும் முன்னர் மன்னர்களாக இருந்த பேஷ்வா க்களும் விநாயகரை குல தெய்வமாக வணங்கியவர்கள் . பல விநாயகர் கோயில்கள் இங்கு இருந்தாலும் மும்பை பிரமாதேவி பகுதியில் எஸ் கே போலோ மார்க் எனும் இடத்தில் அமைந்துள்ளது பிரபலமான சித்தி விநாயகர் கோயில் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.

நினைத்த காரியத்தை இந்த சித்தி விநாயகர் நடத்தி வைக்கிறார் . சுமார் 200 ஆண்டுகள் பழமையான இக்கோயில் எழுவதற்கு மும்பை மாதுங்கா பகுதியில் வசித்த டியூபாய் பட்டீல் என்கிற பெண்மணி காரணமாய் இருந்திருக்கிறார்.

குழந்தை இல்லாத இவர் குழந்தை பிறந்தால் விநாயகருக்கு கோயில் கட்டுவதாக வேண்டி கொண்டார் . ஆனால் தீடீரென்று அவர் கணவர் இறந்து விட வே மனமுடைந்தார் ஆனாலும் விநாயகர் கோயில் கட்டும் எண்ணத்தை அவர் கை விடவில்லை.

குழுந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அருள வேண்டும் என்ற வேண்டுதலோடு கோயில் திருப்பணிகளை செய்து முடித்தார் . இன்றும் இந்த விநாயகர் குழந்தை வரம் அருள்கிறார் .

எங்குமே இல்லாதது போல் கோயில் ஐந்து அடுக்குகளுடன் கட்டப்பட்டுள்ளது. கருவறை விமானத்தின் மேல் 12 அடி கலசம் தங்க முலாம் பூசப்பட்டு பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது . இங்குள்ள சித்தி விநாயகர் ஒற்றை கருங்கல்லால் ஆனவர் , பல ஆபரணங்களை அணிந்து வெள்ளி மேடையில் அமர்ந்துள்ளார் .

பொதுவாக விநாயகர் தும்பிக்கையை இடது பக்கம் வைத்திருப்பார் இந்த விநாயகர் வலது பக்கத்தில் வைத்திகுக்கிறார் இது விஷேசமாக கருதபடுகிறது. நாக வடிவிலான முப்புரி நூல் மற்றும் நெற்றிக்கண் கொண்டிருப்பது இவரின் சிறப்பு .

இவரின் காலடியில் வெற்றி மற்றும் செல்வத்தை தரும் பெண் தேவதைகளான சித்தி ரித்தி ஆகியோர் அமர்ந்துள்ளனர் . இந்த கோயில் கருவறை மூன்று முறை மாற்றி கட்டப்பட்டும் மூல விக்ரகத்தை அகற்றாமல் கட்டியுள்ளனர் .

வேண்டுதல் நிறைவேறியவர்கள் விநாயகருக்கு இனிப்புகளை வழங்கி அருகம்புல் மாலை சாற்றி வழிபடுகிறார்கள் . இங்கு சதுர்த்தி பூஜை பஞ்சாமிர்த பூஜை , சத்ய நாராயண பூஜை ருத்ர பூஜை எனது நிறைய பூஜைகள் நடக்கிறது. வருடத்திற்கு இரு முறை மட்டுமே வரும் செவ்வாய் கிழமை சங்கடஹர சதுர்த்தி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள் .

Newstm.in

Next Story
Share it