மலையேறி போன மலோரியா காய்ச்சல்

பால கண்பத் என்பவர் சீரடியில் உள்ள சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தார். இவருக்கு திடீரென்று மலோரியா நோய் பாதிப்பு ஏற்பட்டது. மலோரியா நோயின் கொடுமை தாங்காமல் பரிதவித்தார்.

மலையேறி போன மலோரியா காய்ச்சல்
X

பால கண்பத் என்பவர் சீரடியில் உள்ள சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தார். இவருக்கு திடீரென்று மலோரியா நோய் பாதிப்பு ஏற்பட்டது. மலோரியா நோயின் கொடுமை தாங்காமல் பரிதவித்தார். எத்தனையோ மருத்துவர்களைச் சென்று பார்த்தார். எவ்வளவோ மருந்துகளை உட்கொண்டார். எதையுமே அந்நோய் சட்டை செய்யவில்லை. காய்ச்சல் சிறிதும் குணமாகவில்லை. எனவே கடைசியாக சாய்பாபாவிடம் ஓடோடி வந்தார்.

அவர் பாதங்களைக் கெட்டியாகப் பற்றி, என்னை மலேரியாக் காய்ச்சலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கதறி அழுதான். அவனிடம் சாய்பாபா, "லட்சுமி கோயிலுக்குப் போ, அங்கே ஒரு கறுப்பு நாய் நிற்கும். அது பசியாறுவதற்காக தயிர் சாதம் கொடு. எல்லாம் சரியாகும்" என்றார் சாய்பாபா.

மலையேறி போன மலோரியா காய்ச்சல்

பால கண்பத்தும் சாய்பாபாவின் கட்டளையை உடனடியாக நிறைவேற்றும் பொருட்டு தனது வீட்டிற்கு ஓடினான். ஒரு பாத்திரத்தில் தயிர் சாதத்தை எடுத்துக் கொண்டு லட்சுமி கோயிலுக்குச் சென்றான். அங்கே, சாய்பாபா கூறியது போல கறுப்பு நாயொன்று அங்கே நின்று கொண்டிருந்தது. அதற்கு வயிறாற தயிர் சாதத்தை கொடுத்தான்.

அப்புறம்?, எந்த மருத்துவருக்கும் அடங்காத, அவனது மலேரியா காய்ச்சல், மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியதை அவன் உணர்ந்தான். அவன், என் காய்ச்சல் என்னை விட்டு வெளியேறி விட்டது என்று மகிழ்ச்சி அடைந்தான்.இது சாய்பாபாவின் லீலைகளில் ஒன்று.
ஓம் ஸ்ரீ சாய்ராம்!!!!

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

newstm.in

Next Story
Share it