அங்கே நடந்ததை இங்கே சொன்னார்!

அங்கே நடந்ததை இங்கே சொன்னார்!

அங்கே நடந்ததை இங்கே சொன்னார்!
X

பண்டரிபுரத்தைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் ஷீரடிக்கு வந்திருந்தார். துவாரகாமாயிக்குச் சென்று சாய்பாபாவை வணங்கினார். சிறிது தட்சிணையும் வழங்கினார்.

சாய்பாபா அவரை நோக்கி, "மக்கள் வஞ்சம் உடையவர்களாக வாழ்கின்றனர்.பாதங்களில் விழுகிறார்கள். தட்சணையும் தருகிறார்கள். ஆனால், மறைவாக யாரும் காணாத இடத்தில் திட்டுகிறார்கள். ஆனால், மறைவாக யாரும் காணாத இடத்தில் திட்டுகிறார்கள். இது அற்புதம் அல்லவா?" என்று கூறினார்.
வக்கீல் துணுக்குற்றார்.காரணம், சாய்பாபா சொன்னது அனைத்து அவருக்கே கூறியது போல் இருந்தது.

பண்டரிபுரத்தைச் சேர்ந்த சப்-ஜட்ஜ் ஒருவர். நூல்கர் என்பது அவர் பெயர். அவர் உடல் சீர் கெட்டிருந்தது. தன் உடல் நிலை குணமாக வேண்டும் என்பதற்காக அவர் வந்து தங்கியிருந்தார்.இதைப் பற்றி பண்டரிபுரத்தின் பார்-ரூமில் (வக்கீல்களின் அறை) வம்பு பேசப்பட்டது." தன் உடல் நலம் பெற சப்-ஜட்ஜ் ஷீரடிக்குச் சென்றிருக்கிறார்! சாய்பாபாவின் பின்னால் போனால் மருந்துகள் இல்லாமலே நோய் குணமாகுமா? சப்- ஜட்ஜைப் போன்ற படித்தவர்களே இப்படி மூடநம்பிக்கை கொள்வது நல்லதல்ல' என்றெல்லாம் அங்கு பலரும் பலவிதமாகப் பேசினர். சாய்பாபாவைப் பணிந்து, தட்சிணை வழங்கிய வக்கீலும் அப்போது அந்த வக்கீல் களின் கூட்டத்தில் வம்பு பேசியவர்களில் ஒருவர்.

பண்டரிபுரத்திலிருந்து சுமார் ஜந்நூறு கீ.மீ தொலைவில் இருக்கிறது ஷீர்டி, எனினும் அங்குள்ள வக்கீல்களின் அறையில் என்ன நிகழ்ந்தது என்பதை சாய்பாபா தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்திருந்தார். சர்வ வியாபியான சாய்பாபா, வக்கீல்களின் தவறான செயலைச் சுட்டிக்காட்டிதும் பண்டரிபுரத்து வக்கீல் அதிர்ந்து போனார். புறம் பேசிப் பிறரைத் தூற்றுவதும், அவதூறு பேசுவதும் பெரும் குற்றங்கள் என்று அவர் உணர்ந்து கொண்டார். மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவது கூடாது என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.

சாய்பாபாவின் அமுத மொழிகள்.
" உடலால் உலகத்துக் கடமைகளைச் செய்யுங்கள்!
மனதை கடவுளுக்கு அளித்து விடுங்கள்! "
- ஷீரடி சாய்பாபா

ஆன்மீக எழுத்தாளர்
Dr. V. ராமசுந்தரம்

Next Story
Share it