மகாலட்சுமியின் பேரருளை பெற அரசமரத்தை இந்தக் கிழமையில் வலம் வர வேண்டும்.!

மகாலட்சுமியின் பேரருளை பெற அரசமரத்தை இந்தக் கிழமையில் வலம் வர வேண்டும்.!

மகாலட்சுமியின் பேரருளை பெற அரசமரத்தை இந்தக் கிழமையில் வலம் வர வேண்டும்.!
X

அரசமரத்திற்கு தனி சக்தி உண்டு என புராணங்கள் பல காரணங்கள் கூறினாலும் அறிவியல் பூர்வமான காரணம் அரசமரம் மட்டுமே 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுகிறது. அரசமரத்தை வலம் வருவதை பொறுத்து அதன் பலன்கள் கிடைக்கும் என்பது காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. இருக்கின்றன. அதே போல் எந்த கிழமையில் விரதம் இருந்து அரச மரத்தை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதும் உண்டு.

 • தீராத நோய்கள் தீர அரச மரத்தை ஞாயிற்றுக் கிழமையில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.
 • மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெற திங்கட்கிழமையில் விரதம் இருந்து வலம் வரவேண்டும்.
 • அமாவாசையும், திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாட்களில் விரதம் இருந்து அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் கூடுதல் சிறப்பு.
 • செவ்வாய் தோஷம் மற்றும் நவக்கிரக தோஷங்கள் விலக செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து வலம் வரவேண்டும்.
 • வியாபாரம் பெருக புதன்கிழமையில் விரதம் இருந்து அரசமரத்தை வலம் வரவேண்டும்.
 • கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமையில் விரதம் இருந்து வலம் வர வேண்டும்.
 • சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெற வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து அரசமரத்தை வலம் வர வேண்டும்.
 • வறுமை நீங்கி மகாலட்சுமியின் பேரருளைப் பெற சனிக்கிழமையில் விரதம் இருந்து வலம் வர வேண்டும்.

அதே போல் அரச மரத்தை

 • 3 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
 • 5 முறை வலம் வந்தால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
 • 9 முறை வலம் வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். 11முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும் வந்துசேரும்.
 • 18 முறை வலம் வந்தால் கடன் தொல்லையில் இருந்து மீளலாம்.
 • 108முறை வலம் வந்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்.
Next Story
Share it