கர்மா வினைகள் அழிய , தினந்தோறும் இதை செய்யுங்க !!

கர்மா வினைகள் அழிய , தினந்தோறும் இதை செய்யுங்க !!

கர்மா வினைகள் அழிய , தினந்தோறும் இதை செய்யுங்க !!
X

காயத்ரி மந்திரத்தை நாம் ஜெபிக்கும் போது கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்ன வழிமுறையை பின்பற்ற வேண்டும். அதாவது நம் புலன்களை அடக்கி பார்வையை புருவ மத்தியில் வைத்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

புருவ மத்தியில் என்றால் மிக லகுவாக நம் கவனத்தை வைக்க வேண்டும். அப்போது தான் தலை பாரம் ஆகாமல் இருக்கும். இந்த நிலையில் காயத்ரி மந்திரத்தை சொல்லுவது அதிக நன்மை அளிக்கும்.

சாய் பாபா அவர்களின் வாக்குப்படி காயத்ரி மந்திரம் அனைவருக்கும் வாழ்வில் இரண்டாம் பாகத்தில் பெரிய பலன் அளிக்கக்கூடியது அதாவது மாணவப்பருவதில் இதன் பலன் அதிகமாக இருக்கும்.

இந்த மந்திரம் புத்தியை கூர்மையாக்கி உடல் மனதை நேர்படுத்தும். பண்டைய காலங்களில் மாணவர்கள் 7 வயதிற்கு முன்பதாகவே காயத்ரி மந்த்ர தீக்ஷைக்கு அழைக்கப்படுவார்கள். காயத்ரி மந்திரம் " சர்வரோகநிவாரணி "  "சர்வத்துக்க பரிவாரணி" என்று அழைக்கப்படுகிறது.

அதாவது எந்த நோயையும் காயத்ரி மந்திரம் போக்கும், எந்த துக்கத்தையும் இந்த மந்திரம் மாற்றும். காயத்ரி ஜெபத்தை தினந்தோறும் செய்து வந்தால் வாழ்வில் பல அற்புதங்கள் நடக்கும். காயத்ரி ஜபம் செய்பவர்கள் வாழ்வில் எந்த தீங்கும் வராது.

காயத்ரி அன்னபூரணியாக கருதப்படுகிறாள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கப்படும் வீட்டில் உணவிற்கு எந்த குறையும் இருக்காது. திருமண தோஷம் இருப்பவர்கள் காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் அந்த தோஷம் நீங்கும்.

காயத்ரி மந்திரத்தை ஒவொவொரு நாளும் மூன்று முறை சொல்லல வேண்டும்,காலை மதியும் மற்றும் சூரியன் அஸ்தமிப்பதற்கு முன், இதை தினந்தோறும் செய்து வந்தால் நம் கர்மா வினைகள் அழியும். மகாபெரியவர் காயத்ரி மந்திரத்தை ஸ்லோகங்கள் தாய் என்று அழைக்கிறார்,

காயத்ரி மந்திரத்தை சொல்வதன் மூலம் நான்கு வேதங்களும் படித்த நன்மை வரும். சகல தேவதைகளும் காயத்ரி மந்திரத்தில் அடங்கும். அமெரிக்காவில் நடத்திய ஆராய்ச்சியில் காயத்ரி மந்திரத்தை சரியான முறையில் உச்சரிப்பதால் , அந்த இடமே ஒளி வெள்ளத்தால் மூழ்குவது தெரிந்திருக்கிறது.

இவ்வளவு பெருமை மிக்க காயத்ரி மந்திரம் இன்றைக்கு வழக்கொழிந்து வருவது வேதனைக்குரியது. இந்த காயத்ரி மந்திரத்தை அதன் பெருமையை உணர்ந்து நாம் பயன்படுத்தினால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம் நிறையும்

Newstm.in

Next Story
Share it