Logo

சகல ஜாதக தோஷங்களும் மாற , இதை செய்யுங்க !!

 | 

தஞ்சை மாவட்டத்தில் இருந்து 10 கிமி தூரத்தில் உள்ளது திட்டை திருத்தலம் இதை தென்குடி திட்டை என்று கூறுகிறார்கள் . இது திருச்செந்தூர் மற்றும் ஆலங்குடிக்கு நிகரான குரு தலமாகும்.

இக்கோயில் இறைவன் வஷிஷ்டேஸ்வரர் என்றும் இனறவி மங்களாம்பிகை என்றும் அழைக்கபடுகிறாள் . இவர்களுக்கு நடுவில் குருபகவான் ராஜ குருவாக நின்று அருள் பாலிக்கிறார்.

மகரிஷி வசிஷ்டர் இங்கு ஆஸ்ரமம் அமைத்து தவம் இயற்றியதால் இத்தலத்திற்கு வஷிஸ்டாஸ்ரமம் என்று பெயர் வந்தது. இந்த தென்குடி திட்டை ஆலயம் பஞ்சலிங்க தளமாக இருக்கிறது. நான்கு மூலைகளில் நான்கு லிங்கங்களும் நடுவில் ஒரு லிங்கமுமாக அமைத்துள்ளார்கள்.

வஷிஷ்ட மகரிஷி இந்த ஈசனை வழிபட்டுள்ளார் . மங்களாம்பிகை என்ற இத்த‍லத்தின் இறைவி மாங்கல்ய பலம் அருள்வதாக கூறுகிறார்கள். இவர் இறைவனுக்கு நிகராக உயர்த்த பீடத்தில் அமர்ந்துள்ளார்.

இவர் சன்னிதிக்கு எதிரே விமானத்தில் 12 ராசிகள் பொறிக்கப்பட்டுள்ளன இதன் கீழ் நின்று வழிபட்டால் சகல ஜாதக தோஷங்கள் மாறுகிறது . தென்குடி திட்டை வஷிஷ்டேஷ்வரர் ஆலயத்தில் சிவ லிங்கத்திற்கு விமானத்திலிருந்து இயற்கையாக நீர் சொட்டுகிறது இதற்கு ஒரு வரலாறு உண்டு.

தன்னுடைய மாமனான தட்சனால் சாபம் பெற்ற சந்திர பகவான் தினமும் தேய்ந்து கொண்டே போனதால் மனம் நொந்து திங்களூர் வந்து கைலை நாதனை வணங்கி விமோசனம் பெற்றார்.

திங்களூரில் சாப விமோசனம் பெற்ற சந்திரன் தென் திட்டையில் ஈசனக்கு கைங்கர்யம் செய்ததாக ஐதீகம் . அதன்படி ஈசனுக்கு மேல் சந்திரகாந்த கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி ஒரு நாளிகைக்கு ஒரு முறை நீர் துளியாக இறைவன் மீது தெளித்து அர்ச்சிக்கிறார்.

இது உலகத்தில் எங்குமே இல்லாத அமைப்பு . குரு பகவானுக்குரிய பரிகாரத் தலங்களில் மிகச் சிறந்த தலம் இது . இங்கு வியாழக்கிழமை விரதமிருந்து குருவிற்கு மஞ்சள் வஸ்த்திரம் அணிவித்து சுண்டல் மற்றும் பருப்பால் செய்த இனிப்பு பொங்கல் தானமாக தர வேண்டும்.

ஜாதகத்தில் குரு பலவீனமாக இருப்பவர்கள் இங்கு வந்து இது போன்ற பரிகாரங்களை செய்து கொள்ளலாம் . தஞ்சையிலிருந்து 10 கி.மி. தூரத்தில் உள்ள திட்டை என்கிற கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ள து. தஞ்சையிலிருந்து நேரடியாக பஸ் வசதியும் உண்டு .

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP