Logo

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

எண்ணங்கள் அழகாய் இருந்தால் வாழ்வும் அழ காக இருக்கும். பிறருக்கு நாம் செய்யும் நன்மை களின் பிரதிபலன் மீண்டும் கிடைக்கும் போது அது இரட்டிப்பாக கிடைக்கும். அது தீமையாக இருக்கும் பட்சத்தில் பன்மடங்கு திரும்பி கிடைக்கும். ஆக நன்மையும் தீமையும் எப்படி வருகிறது...
 | 

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

எண்ணங்கள் அழகாய் இருந்தால் வாழ்வும்அழகாக இருக்கும். பிறருக்கு நாம் செய்யும் நன்மைகளின் பிரதிபலன் மீண்டும் கிடைக்கும் போது அது இரட்டிப்பாக கிடைக்கும். அது தீமையாக இருக்கும் பட்சத்தில் பன்மடங்கு திரும்பி கிடைக்கும். ஆக நன்மையும் தீமையும் எப்படி வருகிறது என்ப தை விளக்கத்தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா? என்று ஒருவரியிலேயே சொல்லிவிடலாம்.

காட்டில் தேவதை ஒன்று இருந்தது.  பக்கத்து கிராமங்களிலிருந்து வரும் மனிதர்கள் அவ்வப்போது காட்டு வழியே பயணம் செய்யும் போது அவர் கள் முன் தோன்றி அவர்களுக்கு நன்மையை செய்யும். அப்போதெல்லாம் மனிதர்களின் குணாதிசயங்கள் அதற்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். மனிதன் எண்ணத்தில் தான் எத்தனை வண்ணம். சமயத்துக்கேத்தாற்போல் மாறிவிடுகிறார்களே என்று ஆச்சர்யம் கொள்ளும் தேவதை.

ஒருமுறை காட்டுவழியே இரு நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். சில மணித் துளிகளில் ஒருவன் மட்டும் ஓவென்று கதறி அழும் ஓசை கேட் டது. பக்கத்தில் நின்றிருந்த ஒருவன் அவனை சமாதானம் செய்து கொண்டிருந்தான். எனினும் அழுகை குரல் நிட்கவே இல்லை. தேவதைக்கு பரி தாபமாக இருந்தது. ஏன் அழுகிறாய் என்று அவன் முன்பு போய் கேட்டது.

வியாபார விஷயமாக என் மனைவியின் நகையை அடகு வைத்து பணம் எடுத்து வந்தேன். ஆனால் வழியில் களவு போய்விட்டது.  இப்போது எப் படி என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன் என்று அழுதான். தேவதை தன் ஞான கண்களால் பொருள் களவாடியவன் உடன் வந்த நண்பனே என் பதை அறிந்தது. இங்கேயே இரு அவசரப்பட்டு தேடினால் கிடைக்காது. நான் வருகிறேன் என்று திரும்பி வரும்போது அவனுடைய பணமுடை போல் ஒன்றை எடுத்து வந்து வழியிலே விட்டுவிட்டாய் பார். என் கண்களுக்கு தெரிந்தது என்று கொடுத்தது. அழுதவன் மகிழ்ந்து தேவதைக்கு நன்றி கூறி பணமுடையை வாங்கிகொண்டான். உடன் வந்தவனுக்கு திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருந்தது.

எப்படி இது நடந்தது. நம் பையில் தான் பணமுடிப்பு பத்திரமாக இருக்கிறதே என்று. அவன் அதை வெளிக்காட்டாமல் நல்ல நேரத்தில் வந்து உதவி செய்தீர்கள் என்றான். பிறகு இருவரும் விடைபெற்று திரும்பினார்கள். தேவதை சிரித்தபடி நகர்ந்தது. இரண்டு நாள் கழித்து பணத்தை களவாடிய வன் தனியாக தேவதை இருக்கும் இடம்பார்த்து வந்து கதறி அழுதான்.அவன் முன் தோன்றிய தேவதை உனக்கு என்னவாயிற்று? என்று கேட் டது. 

அன்று என் நண்பன் வியாபாரத்துக்கு பணமுடை தொலைத்த போது நீங்கள் தானே மீட்டு கொடுத்தீர்கள். இப்போது என்னுடைய பணமுடையும் வழியில் காணாமல் போய்விட்டது. எப்படியாவது கண்டுபிடித்து கொடுங்கள் என்று அழுதான்.  இப்போதும் தேவதை ஞான திருஷ்டியின் முலம் அவன் சொல்வதை பொய் என்று கண்டுபிடித்துவிட்டது. அவனுக்கு  ஒரு பாடம் கற்றுத்தர விரும்பிய தேவதை. அப்படியா எவ்வளவு வைத்திருந் தாய் சொல்லு கண்டுபிடித்து தருகிறேன் என்றது.

இவனுக்கு தலை கால் புரியவில்லை. பெரிய தொகையை சொல்வோம் என்று அதிக அளவு தொகை வைர வைடூரிய ஆபரணங்கள் வைத்திருந்த தாகக் கூறினான். சரி இரு நான் போய் தேடி வருகிறேன் நீ அழாதே என்று கூறி மறைந்தது. சிறிதுநேரத்தில் கையில் ஒரு பணமுடை கொண்டு வந்து இதுவா என்று கேட்டது. அவன் அதைப் பார்த்துவிட்டு பணம் இருக்கிறது, ஆனால் வைர நகை எதுவும் இல்லையே அதையும் கேட்போம் என்று இது இல்லையே நகையும் சேர்த்தல்லவா வைத்திருந்தேன் என்றான். சரி இரு மறுபடியும் போய் தேடி பார்க்கிறேன் என்று சென்றது.

இம்முறை வரும்போது பெரிய பெட்டி ஒன்றை எடுத்துவந்தது. இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கொண்டுவந்து அவன் முன் வைத்தது. அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆம் இதே தான் இது தான் என்னுடையது என்று நன்றி சொல்லி தூக்க முடியாமல் தூக்கி சென்றான். அரண்மனையில் கருவூலத்தில் இருந்த பெட்டி அல்லவா. இனி இவன் கதி என்னவோ என்று தேவதைக்கு சிரிப்பாக இருந்தது.  அவன் ஊருக்குள் நுழைந்ததும் காவலாளிகள் அவனை அடித்து இழுத்துசென்றார்கள். 

கருவூலத்திலிருந்த மொத்த பொருள்களையும் களவாடியதால் அவனை கழுவிலேற்ற வேண்டும் என்று தண்டனை அளித்தார்கள். பேராசையி னால் சிறிய அளவு பணமுடை திருடினோம். இன்று திருடாமலேயே  கள்வன் பட்டத்தைச் சுமந்து உயிரை துறக்க விருக்கிறோமே. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது இதுதான் போலும் என்று நினைத்தான். 

 

newstm.in

  
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP