செல்வம் வீட்டில் நிலைக்க இந்த பூஜை நிச்சயம் பலன் தரும்!

செல்வம் வீட்டில் நிலைக்க இந்த பூஜை நிச்சயம் பலன் தரும்!

செல்வம் வீட்டில் நிலைக்க இந்த பூஜை நிச்சயம் பலன் தரும்!
X

என்ன தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், வீட்டிற்கு வருகிற செல்வங்கள் எல்லாம் ஏதாவது ஒரு செலவு வந்து கரைந்துக் கொண்டே செல்கிறது என்கிற கவலை உங்களை வாட்டி வதைக்கிறதா?

இந்த பூஜையைச் செய்து பாருங்க. கை மேல் நிச்சயம் பலன் தரும் பூஜை. விஷ்ணு பகவானின் கையில் இருக்கும் வலம்புரி சங்கு நம்முடைய வீட்டில் இருந்தாலே, நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கப்பெற்று சுகவாழ்வு வந்து சேரும்.

வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்லாமல், குபேரன், மகாலட்சுமியின் அருளையும் பெற்றுத் தரவல்லது வலம்புரி சங்கு. வலம்புரி சங்கில் தீர்த்தம் நிரப்பி, துளசி வைத்து பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்து வரும் போது சகல தோஷங்களும் நீங்கப் பெறலாம்.

வாஸ்து தோஷம் இருக்கும் வீடுகளில் கூட இந்த வலம்புரி சங்கில் துளசி தீர்த்தத்தை இட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் மாலை நேரங்களில் தொடர்ந்து பூஜை செய்து அதன் பின்னர் வீடுகளில் தெளித்து வரும் போது நம்மை பீடித்திருக்கின்ற தோஷங்கள் அத்தனையும் நீங்கி நிம்மதி நிலவும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்து வர விரைவில் மாங்கல்ய பாக்கியம் பெறலாம். கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வலம்புரி சங்கிற்கு ஒவ்வொரு பவுர்ணமியிலும் குங்கும அர்ச்சனை செய்யலாம். சுத்தமாகவும், சரியாகவும் பூஜிக்கப்படும் வலம்புரி சங்கு உள்ள வீட்டிற்கு பில்லி சூனிய பாதிப்புகள் கிடையாது.

வீட்டுப் பூஜை அறைகளில் பித்தளை அல்லது வெண்கலத் தட்டுகளில் பச்சரிசியிட்டு அதன் மேல் சங்கை வைத்து சந்தனம் சார்த்தி துளசியிட்டு வழிபட்டு வர உணவு தானியங்களுக்கு ஒரு குறையும் வராது.

Tags:
Next Story
Share it