12,00,000 ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது இந்த லிங்க வழிபாடு!

12,00,000 ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது இந்த லிங்க வழிபாடு!

12,00,000 ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது இந்த லிங்க வழிபாடு!
X

சிவப்பெருமானை லிங்க வடிவில் வணங்கி வழிபடுகிறோம். லிங்கங்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் பாணலிங்கம் என்கிற பெயரைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பாணலிங்கம் எப்படி உருவானது என்பது தெரியுமா?

மனிதர்களின் ஆன்மிக வாழ்விற்கு உதவக்கூடிய வகையில் பல்வேறு பொருட்களை நமக்கு அருளியிருக்கிறார்கள். இயற்கையிலேயே இறையம்சம் பொருந்திய பொருட்களில் பாணலிங்கம் முதன்மையானது. லிங்க வடிவில், வழவழப்பான தன்மையுடன் இருக்கும் ஒரு வகைக் கல் தான் பாணலிங்கம். பாணம் எனப்படும் நீரில் தாமாக உற்பத்தியாகிறது என்ற கருத்தும் இருக்கிறது.

கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது ஒரு பாணலிங்கம் என்கிறார்கள். தானாகவே தோன்றக்கூடிய பாணலிங்கம், மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதை நதியில் பெருமளவுக்கு கிடைக்கின்றன.

பாணாசுரன் என்ற அசுரன், சாஸ்திரங்களின் உள்ளர்த்தங்களை, ஆன்மிக அன்பர்களிடமும், பெரியோர்களிடமும் கேட்கும் பழக்கம் கொண்டவன். அவ்வாறு கேட்டதன் வாயிலாக, சிவலிங்க வழிபாட்டின் மகிமையையும், சிவபூஜை செய்வதன் பலன்களையும் மானசீகமாக உணர்ந்து, அதைச் செய்ய விரும்பினான். அதற்காக சிவபெருமானை நோக்கி கடுமையான தவத்தில் ஈடுபட்டான்.

அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவன் முன்பாக தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார்.

பாணாசுரன், சிவபெருமானிடம் ‘ஆயிரம் தலைகள் கொண்டும், இரண்டாயிரம் கைகளுடனும் சர்வேஸ்வரனான உம்மை வழிபட விரும்புகிறேன். அந்த வழிபாட்டைச் செய்வதற்காக எனக்கு 14 கோடி சிவலிங்கங்கள் வேண்டும்’ என்று கேட்டான்.

அவனது வேண்டுதலின்படியே சிவபெருமான் வரத்தை அளித்தார். தனது பூத கணங்களின் மூலமாக, பாணாசுரனுக்கு 14 கோடி சிவலிங்கங் களைத் தந்தருளினார். அதைக் கொண்டு பாணா சுரன் பல காலமாக வழிபாடு செய்தான். அவன் வழிபட்ட சிவலிங்க திருமேனிகள் ‘பாணலிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

Next Story
Share it