Logo

காக்க காக்க என்றாலே காத்திடுவான் முருகப்பெருமான்...

திருவாசகத்துக்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், ஷஷ்டி கவசத்துக்கு மனதை பறிகொடுக்காதாவர்கள் யாரும் கிடையாது. அத் தனை மகத்துவம் வாய்ந்தது ஷஷ்டி கவசம். இதை எப்படி சொல்ல வேண்டும் என்பதை தேவ ராய சுவாமிகளே அவரது கவசப்பாடலில்...
 | 

காக்க காக்க என்றாலே காத்திடுவான் முருகப்பெருமான்...

அப்பனுக்கே பாடம் தகப்பன் சாமியை வணங்குபவர்களுக்கு தெரியும் அவனது கந்த ஷஷ்டி கவசத்தின் மகிமை. போர்க்களத்தில் வீரர்கள் தங்க ளைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்திருப்பது போன்று வாழ்க்கையில் தாம் படும் இன்னல்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் காத்துக் கொள்ள இந்தக் கவசம் ஒன்றே போதும் என்கிறார்கள் சுப்ரமணிய பக்தர்கள்.

தினமும் காலையும் மாலையும் இந்த மந்திரத்தைச் சொல்லும் போது முருகப்பெருமானே அகமகிழ்ந்து காட்சி அளிப்பான் என்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள். கந்த ஷஷ்டி கவசத்தை இயற்றியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கந்த கவசங்களை பாடியிருக்கிறார். அவற்றில் திருச்செந்தூர் திருக்குமரனை நினைத்து அருளிய ஷஷ்டியை நோக்க சரவண பவனார்.. என்று தொடங்கும் ஷஷ்டி கவசமே பக்தர்களுக்கு அமுதமாக இருக்கிறது.

கவசத்தின் முதல் அடியில் முதல் வார்த்தையே ஷஷ்டியை நோக்க என்றிருக்கிறது. ஷஷ்டி என்பது அமாவாசைக்கும் பெளர்ணமிக்கும் அடுத்து அவரும் ஆறாம் நாள் ஆகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு போன்றவற்றைக் குறிக்கும். செவ்வாய் ரோகக்காரகன். இந்த அனைத்து தோஷங்களையும் போக்கி அருள் தருபவன் சுப்ரமணியன். வாழ்க்கை முழுவதும் அமைதியையும் செல்வத்தை யும்  பிணியில்லா வாழ்வையும் அருளுபவன் ஆறுமுகக் கடவுளே.

தினமும் காலையும் மாலையும் கந்த ஷஷ்டி படிக்கும் இடங்களில் நீடித்திருக்கும் வறுமை அகன்றுவிடும்.நவக்கிரகங்களும், சத்ருக்களும் துணையாக இருந்து வழிநடத்துவார்கள். பொதுவாக மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். ஆனால் ஷஷ்டி கவசம் சொல்லும் போது மட்டும் நமது உடலில் உண்டாகும் மாற்றத்தைக் கண்கூடாக காணலாம். 

திருவாசகத்துக்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், ஷஷ்டி கவசத்துக்கு மனதை பறிகொடுக்காதாவர்கள் யாரும் கிடையாது. அத் தனை மகத்துவம் வாய்ந்தது ஷஷ்டி கவசம். இதை எப்படி சொல்ல வேண்டும் என்பதை தேவராய சுவாமிகளே அவரது கவசப்பாடலில் கூறி யுள்ளார்.

தூய்மையான மனதும், உடலும் கந்தனின் மேல் உண்மையான நம்பிக்கையும் கொண்டு  தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பாடி வருபவர்களுக்கு ஆறுமுகனின் அருள் நிச்சயம் கிடைக்கும். அப்படி தினமும் கவசம் சொல்லி வழிபடமுடியாதவர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் கந்த ஷஷ்டி கவசத்தைச் சொல்லி வழிபடலாம். இன்றைய பணி சுமையில் அதையும் செய்ய இயலாதவர்கள் ஷஷ்டி நாட்களிலாவது நிச்சயமாக படிக்க வேண்டும்.

ஷஷ்டி கவசத்தைப் படிக்கும் போது  வள்ளி தெய்வானை சமேதராக காட்சியளிக்கும் முருகப்பெருமான் முன்பு அமர்ந்து படிக்க வேண்டும். அரை குறையாக படிக்கக் கூடாது. கவசம் படிக்கும் போது இடையில் நிறுத்தி யாருடனும் பேசுதல் கூடாது. பாராயணம் முடித்து கற்பூர தீபம் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும். 

கவசம் படித்தால் என்ன கிடைக்கும் என்றில்லாமல் எல்லா பேறுகளும் நீக்கமற கிடைக்கும். தீரா பிணிகள் தீரும், வழக்குகளில் ஜெயம் தரும், தொழிலில் இருக்கும் இடையூறுகள் ஓடிவிடும், கிரக தோஷங்களை நிவர்த்தி செய்யும், தடைபட்ட திருமணங்கள் நடைபெறும், குழந்தைப்பேறு கிட்டும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் ஓடிவிடும், பில்லி சூனிய ஏவல்களைத் தவிடுபொடியாக்கும் கவசமாய் காக்கும். நம்மை அண்டியிருக் கும் எதிர்வினைகள் எட்டிசெல்லும்.

காக்க காக்க என்று சொல்லும் போதெல்லாம்ஆறுமுகப் பெருமானே நம்மை காத்திடுவார் என்னும்போது இன்று செவ்வாய்க்கிழமை.கந்த ஷஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து திருமுருகன் அருளைப் பெறுவோம்.  

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP