இந்த கோவிலில் மட்டும் தான் வித்தியாசமாக காட்சி தரும் சிவ பெருமான் !!

இந்த கோவிலில் மட்டும் தான் வித்தியாசமாக காட்சி தரும் சிவ பெருமான் !!

இந்த கோவிலில் மட்டும் தான் வித்தியாசமாக காட்சி தரும் சிவ பெருமான் !!
X

இந்துகளின் புனித தலமாக , சீர்காழி திருத்தலம் கருதப்படுகிறது. இக்கோவிலின் தனிச்சிறப்பே இங்கே சிவன் 3 வடிவங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது. ஒன்று லிங்க வடிவிலும் மற்றொன்று விஸ்வரூப வடிவில் உமையாள் உமாதேவியுடனும் இறுதியாக சத்தைநாதர் பைரவராகவும் இங்கே காட்சியளிக்கிறார்.

இந்த மூன்று வடிவங்களும் மூன்று வேறுபட்ட தளங்களில் அமைந்திருப்பது இத்திருக்கோவிலின் தனித்துவம். சில படிகள் ஏறிய பின்னரே தோணியப்பரையும் உமாதேவியையும் ஒருவரால் தரிசிக்க முடியும்.

மீண்டும் அங்கிருந்து சில படிகள் ஏறினால் மட்டுமே சத்தையப்பரை தரிசிக்க முடியும். இந்த புண்ணிய ஸ்தலத்தில் தான் திருஞானசம்பந்தருக்கு அன்னை உமாதேவி ஞானப்பால் புகட்டினார்.

உமையாள் பார்வதி இத்திருத்தலத்தில் திருநிலை நாயகி என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள். இன்றும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பால் பிரசாதம் தினசரி வழங்கப்படுகிறது. இந்த கோவில் கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ தள்ளி அமைந்திருக்கிறது.

Newstm.in

Next Story
Share it