Logo

திருநீலகண்ட நாயனார்

திரு நீலகண்டனின் ஆணையாக எம்மை தீண் டாதீர் என்றாள். தம் மனைவி எம்மை என்று பன்மையாக கூறியதால் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்ணையும் தீண்டாமல் இனி பிறி தொரு மாதரை மனதாலும் நினையேன் இது நான் வழிபடும் திருநீலகண்டரின் மீதான ஆணை ...
 | 

திருநீலகண்ட நாயனார்

ஆடல் வல்லான் நின்றாடும் பெருமை மிக்க சிதம்பரத்தில் குயவர் குலத்தில் அவதாரம் செய்தவர் திருநீல கண்டநாயனார். சிறுவயது முதலே சிவபக்தியில் திளைத்து வந்த இவர் தம் குடும்ப தொழிலான குயவர் பணியில் ஈடுபட்டு மண் பாண்டங்கள் செய்து விற்பனை செய்து வந்தார். சிவ பெருமானின் மீது அளவுகடந்த அன்பை கொண்டிருந்தவர் அடியார்களுக்கு திருவோடு வழங்குவதைத் திருத்தொண்டாக செய்து மகிழ்ந்தார்.

ஆலகாலம் விஷம்அருந்திய சிவபெருமான் விஷத்தைக்கழுத்தில் நிறுத்தி உலகத்தைக்காத்தார். அப்போது அவரது கழுத்து நீலநிறமானது. அதை குறிக்கும் வண்ணம் எம்பெருமானை திருநீல கண்டம் என்று அழைக்க தொடங்கினார். கண்டம் என்றால் கழுத்து என்னும் பொருள்படும். அடியார் எம்பெருமானை திருநீலகண்டர் என்று அழைக்க மக்கள் அவர் சிவன் மீது கொண்ட பக்தியை  கண்டு திருநீல கண்டர் என்று அழைத்தனர்.

சிவபக்தியும், அடியார்களிடம் தொண்டு புரிந்தும் இல்லறவாழ்வில் ஈடுபட்ட வந்தவருக்கு வாய்த்த மனைவியும் சிறந்த பதிவிரதையாய் கணவ னுடன் இணைந்து சிறந்த சிவபக்திக்கு உதாரணமாய் வாழ்ந்துவந்தாள். அச்சமயம் திருநீலக்கண்டருக்கு நடன மங்கை ஒருவருடன் பழக்கம் உண்டானது. அதைக் கண்டு வருந்திய மனைவி கணவனிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்தாள்.

சிற்றின்பத்தில் மூழ்கிய திருநீலக்கண்டர் ஒருநாள் மனைவியைக் கூடலுக்கு அழைக்க அருகில் சென்றார். அதைக்கண்டு அவரது மனைவி திரு நீலகண்டனின் ஆணையாக எம்மை தீண்டா தீர் என்றாள். தம் மனைவி எம்மை என்று பன்மையாக கூறியதால் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்ணையும் தீண்டாமல் இனி பிறிதொரு மாதரை மனதாலும் நினையேன் இது நான் வழிபடும் திருநீலகண்டரின் மீதான ஆணை என்றார். இரு வரும் அப்படியே வசித்து வந்தார்கள்.

வருடங்கள் பல கடந்தும் இருவரும் முதுமைப்பருவம் அடைந்தும் எம்பெருமானின் மீது கொண்ட பக்தி மட்டும் குறையாமல் பெருகி கொண்டே வந்தது.எம்பெருமானுக்கு பக்தன் தன் மீது கொண்ட பக்தியால் உடல் இன்பம் தவிர்த்து வாழ்ந்ததை உலகத்தார் அறிய வேண்டும் என்று விரும்பி னார். சிற்றின்பத்தை வெல்ல சிவபக்தியால் முடியும் என்பதை உணர்த்தும் இந்த சிவனடியாரின் இல்லத்தில் தாமும் ஒரு அடியாராக எழுந்தரு ளினார் எம்பெருமான்.

என்னுடைய திருவோடு விலைமதிப்பில்லா பொன்னும்பொருளும் உடையது. நான் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் இந்த ஓட்டை பத்திரமாக தாங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். நான் திரும்பிவரும்போது உங்களிடம் பெற்றுக்கொள்கிறேன் என்றார். திருநீல கண்ட ரும் அந்த ஓட்டை பக்தியோடு வாங்கி பெட்டிக்குள் வைத்தார்.மீண்டும் அடியார் வந்து தம்முடைய ஓட்டை கொடுக்கும்படி கேட்க திருநீல கண் டர் ஓட்டை தேடினார்.

எம்பெருமான் திருவிளையாடல் ஆயிற்றே. பெட்டிக்குள் வைத்த திருவோடைக் காணவில்லை.சுற்றுமுற்றும் பார்த்தார் மனம் பதறியது வைத்தி ருந்த திருவோட்டை காணவில்லை. என் செய்வேன் திருநீலகண்டா. அடியாரது பொருளைக் காணவில்லையே என்று மனம் பதைத்தார். எல்லா இடங்களிலும் தேடி அலைந்தார். மனைவியிடமும் கேட்டார். ஆனால் திருவோடு இருந்த இடத்தில்  காணவில்லை.

அடியார்அமைதியாக நின்றிருந்தார் திருநீலகண்டர் வந்து திருவோட்டைக் காணவில்லை ஐயா. நான் வைத்திருந்த இடத்தைத் தவிர்த்து ஏனைய எல்லா இடங்களிலும் தேடி விட்டேன். ஆனால் எங்கும் கிடைத்தபாடில்லை என்றார். என்னுடைய திருவோட்டை கொடுத்தால் கொடு இல்லை யென்றால் திருவோட்டை உண்மையில் காணவில்லையென்றால் உன் மனைவியாரின் கரம் பிடித்து சத்தியம் செய்து குளத்தில் மூழ்கி எழு என் றார்.

திருவோடு காணவில்லை என்பது உண்மைதான்.திருநீலகண்டரின் மீது சத்தியம் செய்தபிறகு மனையாளை எப்படித் தீண்டுவது.அதனால் செய் வதறியாது திகைத்த திருநீலகண்டரை அந்தணர் சபைக்கு அழைத்துசென்று முறையிட்டார் அடியார் வடிவில் வந்த எம்பெருமான்.நடந்ததை அந்தணர்களிடம் விவரித்த பிறகும் திருநீலகண்டர் மனையாளின் கையைப் பிடித்து சத்தியம் செய்து கொடுக்க மறுக்க பெரியோர்கள் திருவோட் டைக் கொடு அல்லது சத்தியம் செய்து கொடு இதுதான் முடிவு என்றார்கள்.

வேறுவழியின்றி திருநீலகண்டர் மனையாளிடம்ஒருகழியை கொடுத்து ஒருமுனையைப் பிடிக்கசொல்லி மறுமுனையை இவர் பிடித்தபடி மூழ் கி எழுந்தார். ஆனால் அதை ஒப்புக்கொள்ள மறுத்த அடியார் கைகளால் தீண்டியபடி சத்தியம் செய்து கொடுக்கவேண்டும் என்று கூறவும் வேறு வழியின்றி தாம் வேசி மீதுகொண்ட சிற்றின்பமும்.அதனால் மனைவியின் வருத்தமும், திருநீலகண்டர் மீது செய்து கொடுத்த சத்தியத்தால்  மனைவியை தீண்டுவதில்லை என்றும் சொல்லிய திருநீலகண்டர் தாம் சத்தியம் செய்துகொடுத்ததை மீறமுடியாது என்று குளத்தில் மூழ்கி எழுந்தார்.

இருவரும் வயோதிக தோற்றத்திலிருந்து இளமை தோற்றத்துக்கு மாறினார்கள். கூடியிருந்தவர்கள் திகைத்து நிற்க சிவனடியார் மறைந்து உமை யாளோடு சிவபெருமான் காட்சியளித்தார்.ஐம்புலன்களையும் அடக்கி பக்தியால் மேன்மை அடைந்த நீங்கள் இனி என்றும் இளமை மாறாமல் என் னிடம் இருப்பீர்கள் என்று அருள்புரிந்து மறைந்தார். பிறகு இருவரும் இல்லற வாழ்வில் ஈடுபட்டு சிவபக்தியில் திளைத்து எம்பெருமானை சரண டைந்தார்கள்.

சிவாலயங்களில் தைமாதம் விசாகம் நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP