திருநீல நக்க நாயனார்

சிலந்தி ஒன்று எம்பெருமானின் மீது விழுந்தது. அதைக்கண்டு பதறிய திருநீல நக்க நாயனாரின் மனைவி எம்பெருமானுக்கு வலிக்குமே என்று பதறினார். உடனே சிலந்தியை விரட்டியடிக்க வாயினால் ஊதியவாறு அந்த சிலந்தியை விரட்டி அடித்தார். அதைக் கண்ட திருநீல...

திருநீல நக்க நாயனார்
X

சோழநாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்சாத்தமங்கை என்னும் ஊரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் திருநீலநக்கநாயனார். இவ்வூரில் குடிகொண்டுள்ளஎம்பெருமானுக்கு அயவந்தீஸ்வரர் என்று பெயர்.அயன் என்றால் பிரம்மன் என்று பொருள்.பிரம்மன் வந்து வழிபட்ட தால் அயவந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

எம்பெருமானின் மீது பக்திகொண்ட திருநீலநக்க நாயனார் வேதபாராயணம் செய்துகொண்டே இருப்பார். சிவகாம விதிப்படி சிவபெருமானை வழி படுவதைப் பெரும்பேறாக எண்ணியிருந்தார். எம்பெருமானுக்கு உகந்த திருவாதிரை நன்னாள் வந்தது. திருநீலநக்க நாயனார் வழக்கம்போல் இறைவழிப்பாட்டை முடித்துக்கொண்டு அயந்திவரரை தரிசிக்க இல்லத்தரசியாரோடுசென்றார்.இறைவனுக்குதேவையானபூஜைக்குரிய பொருள் களும், நறுமண மிக்க மலர்மாலைகளும் குறைவின்றி எடுத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்தார்கள்.அயந்திவரதரையும், மலர்க்கண்ணியம் மையாரையும் வழிபட்டு சிவபூஜையைத் தொடங்கினார் திருநீலநக்க நாயனார்.’

அப்போது மேலிருந்து சிலந்தி ஒன்று எம்பெருமானின் மீது விழுந்தது.அதைக்கண்டு பதறிய திருநீல நக்க நாயனாரின் மனைவி எம்பெருமானு க்கு வலிக்குமே என்று பதறினார். உடனே சிலந்தியை விரட்டியடிக்க வாயினால் ஊதியவாறு அந்த சிலந்தியை விரட்டி அடித்தார். அதைக் கண்ட திருநீல நக்கரார் ஆகம நெறிக்கு புறம்பாக அரனாரை எச்சில் செய்த உம்மை இக்கணமே துறந்தோம் என்று இல்லம் திரும்பினார்.

திருநீல நக்க நாயனார்

இதைக் கேட்டு நடுங்கிய அம்மையார் ஆலயத்திலேயே தங்கினார்.அன்றிரவு நாயனார் திருநீலநக்கர் நாயனாரின் கனவில் தோன்றி, அன்பனே உன் மனைவி ஊதிய இடம் தவிரஎஞ்சிய இடங்கள் அனைத்தும் கொப்புளங்கள் தோன்றியிருக்கின்றன பாரீர் என்று காட்டினார். பதறி எழுந்த நாய னார் எம்பெருமானின் குறிப்பை உணர்ந்தார். மறுநாள் காலையில் ஆலயம் சென்று துணைவியாரிடம் இரவில் எம்பெருமான் கூறியதைச் சொல்லி அவரை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார்.

சீர்காழி வேந்தரிடம் நீலநக்கருக்கு அதீத ஈடுபாடும் பக்தியும் உண்டு. நாயனாரின் சீரிய தொண்டின் பலனாக திருஞான சம்பந்தர் அடிகளாருடன் திருசாத்தமங்கை வந்தார் அப்போது அவரை அன்போடு வரவேற்று அவரது பாதத்தில் பணிந்து பேரின்பம் எய்தினார். தமது மடத்தில் அனைவ ரையும் தங்க வைத்து அவர்களுக்கு சிவத்தொண்டாற்றினார். ஞான சம்பந்தர் தம்முடன் வந்த பாணருக்கும், அவர் வாழ்க்கை துணைவியாருக் கும் கூட திருநீலநக்க நாயனாரின் இடத்தில் தங்க அனுமதி கோரினார். குலம் பார்க்காமல் மகிழ்வோடு அடியாரின் விருப்பத்தை நிறைவேற்றிய நீலநக்க நாயனாரின் பெருமையை ஞான சம்பந்தர் அயவந்தீஸ்வரரைப் பணிந்து பாடிய பதிகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

திருஞானசம்பந்தர் தமது அடிகளாருடன் வேறுதலத்துக்கு செல்லும் போது அவரை பிரிய மனமில்லாமல் திருநீலநக்கநாயனாரும் அவருடன் கிளம்ப முயற்சித்த போது எம்முடன் வருவதை விட இங்கேயே இருந்து அயவந்தீஸ்வரருக்கு திருத்தொண்டு புரிந்து இங்கே வரும் அடியார்க ளுக்கு சேவை செய்து நலம்பெறுவீராக என்றார். அவ்வாறே ஆகட்டும் என்று பணிந்த திருநீலநக்க நாயனாரின் மனதில் ஞான சம்பந்தரின் மீதான அன்பு குறையவே இல்லை. அவரது நினைவாகவே இருந்துவந்தார்.

அதன் பிறகு திருநல்லூர் பெருமணத்தில் ஞானசம்பந்தரின் மணநிகழ்வு நடந்த இடத்தில் சிவபெருமானின் திருவருளால் தோன்றிய ஜோதியில் அடியவர் கூட்டத்துடன் திருநீலநக்க நாயனார் மற்றும் அவரது துணைவியாரும் உட்புகுந்து பெருவாழ்வு பெற்றார்கள்.

வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது.

newstm.in

newstm.in

Next Story
Share it