திருநாவுக்கரசு நாயனார்-8

திருப்புகலூர் பெருமானை நினைத்து எண்ணு கேன் என்னும் பதிகத் தைப் பாடி உள்ளம் உருகினார். எம்பெருமானை சேவடியைப் பாமா லையால் பூஜித்து அவரது செவியைக் குளிரச் செய்தார். விண்ணவர் மலர் தூவ தேவதுந்து பிகள் விண்ணில் மூழ்க எம்பெருமானின்

திருநாவுக்கரசு நாயனார்-8
X

திருக்கயிலாய எம்பெருமானின் தரிசனத்தை திருவையாறில் தரிசித்ததால் அத்தலத்திலேயே சில நாட்கள் தங்கி சிவத்தொண்டு புரிந்த அப்பர டிகள் மீண்டும் சிவத்தலங்களைத் தரிசிக்க பயணம் மேற்கொண்டார். திருப்பூந்துருத்தி சென்று அங்கிருந்த பெருமானைத் தரிசித்த போது பாண் டிய நாட்டுக்கு சென்றிருந்த சம்பந்தர் சமணர்களை வென்று திரும்பியதை அறிந்தார். அப்பரடியைக் காண சம்பந்தர் திருப்பூந்துருத்தி வருவ தைக் கண்ட அப்பரடிகள் அவரை எதிர்கொண்டு அழைக்க சென்றார்.

அப்பரடிகள் முத்துசிவிகையில் அமர்ந்துவரும் சம்பந்தரைக் கண்டு தொண்டர்களோடு கலந்து முத்துச்சிவிகையை சுமந்தார். அப்பரடிகளைக் காணாது திகைத்த சம்பந்தர் இறுதியில் அப்பரடிகள் தம்மை சுமப்பதைக்கண்டு பதறி இறங்கியபடி வர அதற்குள் அப்பரடிகள் சம்பந்தரைக் கண்டு வணங்கினார். தாங்கள் இந்தக் காரியம் செய்யலாமா என்று அன்புடன் கடிந்துகொண்டார். அங்கிருந்த தொண்டர்கள் இருசிவநேசர்களின் பக்தியைக் கண்டு மகிழ்ந்துநின்றார்கள்.

இருவரும் திருப்பூந்துருத்தியில் உள்ள எம்பெருமானைத் தரிசித்து பதிகம் பாடி மகிழ்ந்தார்கள். பிறகு தவசியால் தாம் பெற்ற மெய் இன்பத்தை பற்றி அப்பரடிகள் கூற, பாண்டிய மன்னன் சமணத்திலிருந்து சைவ மதத்துக்கு மாறிய வரலாறை சம்பந்தர் கூற தானும் பாண்டிய நாடு செல்ல வேண்டும் என்னும் ஆவலைக் கொண்டார் அப்பரடிகள். பிறகு சம்பந்தராரிடம் நீர் தொண்டை நாட்டிலிருக்கும் சிவத்தலங்களைத் தரிசித்து வாரும் நான் பாண்டிய நாடு செல்கிறேன் என்றார்.

அப்பரடிகள் மதுரை மாநகர் வரும் சேதி அறிந்ததும் பாண்டிய மன்னனும்,மங்கையர்க்கரசியார்,குலச்சிறையார், அன்பர்கள் என்று அனைவரும் அவரை எதிர்கொண்டு அழைக்க ஒன்று கூடினார்கள்.அங்கு சிலகாலம் தங்கி எம்பெருமானைவழிபட்டு இருந்தார் அப்பரடிகள். பிறகு சோழ நாட்டை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். அங்கிருந்து திருப்புகலூர் வந்தார். ஆறாக் காதலுடன் புகலூர் எம்பெருமானின் மீது பக்தி கொண்டு அங்கேயே சிவத்தொண்டு புரிந்து இருக்கலானார். அப்போது அப்பரடிகள் நிறைத் திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம், திருத்தலக்கோவை, குறைந்த திருநேரிசை, தனித்திரு நேரிசை,ஆருயிர் திருவிருத்தம்,தசபுராணம்,பாவநாசப்பதிகம் போன்ற பதிகங்களைப் பாடினார். மனம் மகிழ் ந்த எம்பெருமான்அப்பரடிகளின் குணத்தை உலக்குக்கு எடுத்து காட்டவே இருந்த மடத்தில் பொன்னும், நவரத்தினங்களும் மின்னும்படி செய் தார்.

ஆனால் அப்பரடிகள் அப்படி எழுந்த பொன்னையும், பொருளையும் எடுத்து அருகிலிருந்த தடாகத்தில் வீசி எறிந்தார். அப்பரடிகள் பெண் ஆசை யும் அற்றவர் என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பினார் எம்பெருமான். அப்பரடிகள் தியானத்தில் இருக்கும் போது, தேவகன்னிகைகள் அவரை சுற்றி அவரை தன் பால் திருப்ப முனைந்தார்கள். ஆனால் அப்பரடிகள், அவர்களைக் கண்டு மயங்காமல் மயக்கும் கன்னிகைகளே உல கை மயக்கி வைத்திருப்பது போதாதா என்னை ஏன் மயக்குகிறீர்கள். தியாகேசப் பெருமானின் திருப்பாதத்தை பணிந்து பாடும் என்னை நினை யாமல் எம்பெருமானை வழிபடுங்கள் என்றார். தேவ கன்னிகைகள் அவரை வணங்கி மறைந்தார்கள்.

அப்பரடியின் உள்ள உறுதியையும், பக்தி திறத்தையும், பாமாலை பாடும் ஆற்றலையும் ஏழு உலகங்களும் போற்றி புகழ்ந்தன. அப்பரடிகள் தாம் எம்பெருமானின் பாதத்தில் நிற்கும் காலம் வந்ததை உணர்ந்துகொண்டார். திருப்புகலூர் பெருமானை நினைத்து எண்ணுகேன் என்னும் பதிகத் தைப் பாடி உள்ளம் உருகினார். எம்பெருமானை சேவடியைப் பாமாலையால் பூஜித்து அவரது செவியைக் குளிரச்செய்தார். விண்ணவர் மலர் தூவ தேவதுந்துபிகள் விண்ணில் மூழ்க எம்பெருமானின் திருப்பாத நிழலில் சரணடைந்தார். சிவலோக பதவியைப் பெற்று திருக்கயிலாய மலையில் தவஞானியாக எழும் பேறு பெற்றார்.

சிவாலயங்களில் திருநாவுக்கரசரின் குரு பூஜை சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

newstm.in


newstm.in

Next Story
Share it