Logo

திருநாவுக்கரசர் நாயன்மார் -1

சமண பள்ளியில் சேர்ந்து அங்கு சமண நூல்களை கற்றுகொண்டார். அவரது திறமையைப் பாராட்டி அவருக்கு தருமசேனர் என்னும் சிறப்பு பட்டத்தைக் கொடுத்து மகிழ்ந் தார்கள் சமணர்கள். ஒரு முறை பெளத்தர்களி டம் வாதம் செய்து அதில் வெற்றியும் பெற்ற தால் சமண மதத்தின் தலைவரானார் மருள் நீக்கியார்....
 | 

திருநாவுக்கரசர் நாயன்மார் -1

வாகீச முனிவர் பற்றி அறிந்திருப்பீர்கள். இராவணன் குபேரனை வென்று அவனது புஷ்பக விமானத்தால்  கயிலையைக் கடக்க முற்பட்டான். அப் போது எம்பெருமானின் அனுமதி இல்லாமல் இந்த மலையைக் கடக்க கூடாது என்று தடுத்த நந்திதேவரிடம் அகந்தையாக பேசினான் இராவ ணன். உன் இனமே குரங்கால் அழிவது என்று நந்திதேவன் சாபம் இட,கோபத்தில் மலையைப் பெயர்த்தெடுக்க தொடங்கினான்.தேவர்களும், ரிஷி களும் நடுங்க பார்வதி பயத்தில் எம்பெருமானிடம் தஞ்சம் அடைய எம்பெருமான் தனது வலது பெருவிரல் நுனியை ஒரு அழுத்து அழுத்த இராவ ணனது கைகள் சிக்கிக்கொண்டது.

வலியால் கதறி துடித்த இராவணனின் குரல் அங்கு எம்பெருமானை நினைத்து தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரின் காதில் விழுந்தது. இராவணன் அழுகுரல் வாகீச முனிவரின் மனதை இளக்கியது. சிவபெருமானின் கோபத்தைத் தவிர்க்க உனது இசையால் அவரை மகிழ்வி என் றார். இராவணனும் அவ்வாறே செய்ய மகிழ்ந்த எம்பெருமான் இராவணனுக்கு மேலும் 50 இலட்சம் ஆண்டுகள் உயிர் வாழ் என்று ஆயுளை நீட் டித்தார். இராவணன் மகிழ்ந்து செருக்கோடு இலங்கை சென்றான்.

தன்னால் சாபம் இடப்பட்ட அதிலும் எம்பெருமானையே எதிர்த்து நின்ற இராவணன் மீண்டும் அவரிடம் சரணடைய காரணமே வாகீசமுனிவர் தான் என்று கோபம் கொண்ட நந்திபகவான் வாகீச முனிவரை நீர் பூலோகத்தில் பிறக்க கடவுவது என்று சாபம் இட்டார்.அதன்படியே பிறந்தார். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் என்னும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினி தம்பதியருக்கு மகனாக பிறந் தார். பெற்றோர் இவருக்கு மருள் நீக்கியார் என்ற பெயரை வைத்து அன்புடன் அழைத்துவந்தார்கள். இவருக்கு முன் குணவதியான அழகிய திரு மகள் பிறந்திருந்தாள். இவளை திலகவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தார்கள்.

திலகவதி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தளிர் நடை போட்டு வளர்ந்தாள். அவள் பருவ வயதை எட்டியதும் அரசனிடம் சேனா திபதியாக இருந்த கலப்பகையார் என்னும் வீரருக்கு மணம் முடிக்க முடிவு செய்திருந்தார்கள். சில நாட்களில் புகழனார் இறைவன் அடி சேர்ந்தார். பதிவிரதையான மாதினியும் கணவனின் பிரிவை தாங்க இயலாமல் அவர் பின்னே சேர்ந்தாள். மருள் நீக்கியாரும், திலகவதியாரும் மன ஆற்றா மையோடு  வாழ்ந்தார்கள்.

இந்நிலையில் போருக்கு சென்ற கலப்பகையார் வீரமரணம் அடைந்த செய்தி அவர்களை மேலும் வருத்தத்துக்குள்ளாக்கியது. இனி யாருக்காக நான் வாழவேண்டு என்று திலகவதியார் தமது உயிரை துறக்க துணிந்த சமயம் மருள் நீக்கியார் என் அன்னையின் வடிவில் அல்லவா உன்னை காண்கிறேன். நீயும் இல்லாத உலகில் எனக்கென்ன வேலை என்று அன்பு பெருக கேட்டார். சதோதரனின் பாசத்துக்கு கட்டுண்டு திலகவதியார் உடுத்தியிருந்த பட்டாடைகளையும் ஆபரணங்களையும் துறந்து எளிய வாழ்க்கை மேற்கொண்டார். 

இருவரும் அடியார்களுக்கும்,தேடிவரும் புலவர்களுக்கும் இன்முகத்துடன் பொருளை அள்ளி வழங்கினார்கள். திருவாமூர் முழுவதும் அறச்சா லைகளையும் தண்ணீர் பந்தல்களையும் அமைத்தார். சாலைகள் அமைத்தார். நீர் நிலைகளை வெட்டினார். ஐந்தெழுத்து மந்திரத்தின் பெருமை யையும், திருவெண்ணீறின் மகிமையும் உணர்ந்து வாழ்ந்தவருக்கு திடீரென்று சமண மதத்தின் மீது பற்று வந்தது.

பாடலிபுரத்தில் உள்ள சமண பள்ளியில் சேர்ந்து அங்கு சமண நூல்களை கற்றுகொண்டார். அவரது திறமையைப் பாராட்டி அவருக்கு தருமசேனர் என்னும் சிறப்பு பட்டத்தைக் கொடுத்து மகிழ்ந்தார்கள் சமணர்கள். ஒருமுறை பெளத்தர்களிடம் வாதம் செய்து அதில் வெற்றியும் பெற்றதால் சமண மதத்தின் தலைவரானார் மருள் நீக்கியார். சமண மதத்தின் மீது இவர் பற்றுக்கொள்ள இவரது சகோதரி திலகவதி அம்மையாரோ சைவ நெறி தவறாமல் சிவநெறியை சார்ந்து சிவனார்க்கு தொண்டு புரிய திருவதிகை வீராட்டானத்தில் மடம் ஒன்றை தொடங்கி அங்கு வசிக்க தொடங் கினாள்.

அப்போது தனது சகோதரன் மருள்நீக்கியார் உலக பற்றிலிருந்து விடுபட சமண மதமே சிறந்தது என்னும் எண்ணத்தை உறுதியாக கொண்டிருப் பதை அறிந்து மனம் வாடினாள். தினமும் எம்பெருமானிடம் முறையிட்டாள். அவளது வேண்டுதலுக்கு எம்பெருமான் செவி சாய்த்தாரா?

 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP