Logo

திருநாவுக்கரசர் நாயனார்-5

என் மீது தங்களுக்கு என்ன கோபமோ தங்களை காணச் செய்யாமல் செய்துவிட்டிரே.,தாள் திறக்க சம்பந்தரைப் பணித்திருக்க வேண்டும் அடியேன் அறியா மல் செய்துவிட்டேன். தங்க ளைக் காண சம்பந்தரும் வந்திருக்கிறார் என்றார் மனமுருகியபடி அதைக் கேட்டு எம்பெருமானும் உருகி...
 | 

திருநாவுக்கரசர் நாயனார்-5

குங்கிலியக் கலயனார் மடத்தில் சில காலம் தங்கியிருந்த சம்பந்தரும், அப்பரடிகளும் அங்கிருந்து விடைபெற்று திருஆக்கூர் வழியாக சிவயாத் திரையைத் தொடங்கினார்கள். பல புண்ணிய தலங்களைத் தரிசித்து திருவீழிமிழலை என்னும் திருத்தலத்துக்கு வந்தார்கள். இரண்டு சிவனேசர் களின் வரவை அறிந்த  சிவத்தொண்டர்கள் கடல் வெள்ளமென திரண்டு நின்று வரவேற்றார்கள். 

தொண்டர்கள் புடைசூழ கோயிலை வலம் வந்த சிவநேசர்கள் அழகிய தமிழ்பதிகத்தால் வீழிஅழகரை வழிபட்டார்கள். அப்பரடிகளும், சம்பந்தரா ரும் தங்குவதற்கு தனித்தனி மடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரும் அங்கு தங்கியிருந்து சிவத்தொண்டு புரிந்து வந்தார்கள். மழை பொய்த் ததால் மக்கள் கடும் பஞ்சத்தில் துயரமடைந்தார்கள். மக்களுக்கு ஏற்பட்ட துயரைத் துடைக்க இரு சிவநேசர்களும் தவித்தார்கள்.

அவர்களது கனவில் எழுந்தருளிய எம்பெருமான் உங்களுக்கு தொண்டு செய்யும் அன்பர்களுக்காக உங்களுக்கு தினமும் படிக்காசு தருவோம் என் றார். அதன்படியே மறுநாள் கிழக்கு பீடத்தில் சம்பந்தருக்கும், மேற்கு பீடத்தில் நாவுக்கரசரான அப்பரடிக்கும் படிக்காசு வழங்கினார்.அதைக் கொண்டு மக்களின் பஞ்சத்தைப் போக்கினார்கள் இருவரும். அதன் பிறகு எம்பெருமானின் அருளால் மாதம் மும்மாரி மழை பொழிந்தது. மக்கள் முன்பை விட செல்வ வளங்கள் பெற்று சிறப்பாக வாழ்ந்தார்கள்.

அங்கிருந்து திருவாஞ்சியம் வழியாக வேதாரணியம் என்னும் திருமறைக்காடு என்னும் தலத்தை வந்தடைந்தார்கள்.அங்குகாப்பிட்டிருந்த அறை யைத் திறக்க நாவுக்கரசர், சம்பந்தரின் கூற்றை ஏற்று பண்ணின் நேர்மொழியாள் என்னும் பதிகத்தைப் பாடினார். திருமறைக்காட்டு மணிகண்டப் பெருமான் அருள் புரிந்து கதவு தாளை நீக்கினார். சூழ இருந்தவர்கள் சிவநாமத்தை உச்சரித்து மகிழ்ந்தார்கள். 

உள்ளே சென்று மணிகண்டப் பெருமானைத் தரிசித்து, பிறகு அப்பரடிகள் அக்கதவை மூட சம்பந்தரைப் பதிகம் பாட கூறினார். சம்பந்தரின் பாட லுக்கு கதவு தானாக மூடி கொண்டது அன்று முதல் கதவு தானாக திறக்கவும் மூடிக்கொள்ளவும் ஏற்றாற் போல் அமைந்தது. இருவரும் தொண் டர்கள் புடை சூழ மடத்துக்கு வந்து தங்கினார்கள். உறக்கம் வராமல் தவித்த அப்பரடிகள் மனதில் ஏதோ ஒரு குழப்பம் சூழ்ந்திருந்தது. கதவை திறக்க முதல் முறை பாடியபோது அருள் தராத எம்பெருமான் இரண்டாவது முறை பாடிய பிறகே தாள் திறக்க அருள்புரிந்தார். ஆனால் சம்பந்த ரின் முதல் பாடலுக்கே கதவை மூடி அருள் புரிந்தாரே. நாம் என்ன குறைவைத்தோம் என்று  மருகினார்.

அன்றிரவு அவர் கனவில் தோன்றிய எம்பெருமான் என்னை தொடர்ந்து திருவாய்மூரில் வந்து தரிசிப்பாய் என்றார். உடனே நித்திரை கலைந்து எழுந்த அப்பரடிகள் அத்தருணமே  திருவாய்மூர் செல்ல ஆயத்தமானார். உறக்கத்திலிருந்த சம்பந்தரை எழுப்ப மனம் இல்லாமல்  மடத்திலிருந்த வர்களிடம் தகவல் சொல்லி கிளம்பினார். அவருக்கு முன்பு எம்பெருமான் அந்தணர் வேடத்தில்செல்ல அவர் பின்னால் அப்பரடி சென்றார். ஆனால் என்ன முயன்றும் அந்தணரை முந்திசெல்ல அப்பரடிகளால் முடியவில்லை.அப்போது  அங்கிருந்த திருக்கோயிலினுள் சென்ற அந்தணர் மறைந்தார். எம்பெருமானைத் தேடி சென்ற அப்பரடிகள் அவரைக் காணாமல் கண்ணீர் விட்டார் . அன்றிரவு அங்கேயே தங்கினார்.

மறுநாள் மடத்தில் அப்பரடியைக் காணாமல் திகைத்த சம்பந்தர் அவர் திருவாய்மூர் சென்றதைக் கேள்வியுற்று அவரும் தொண்டர்களுடன் அங்கு கிளம்பினார். சம்பந்தரைக் கண்டதும் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கியது. பிறகு எம்பெருமானிடம் தன் மனக்குறையைக் கூறினார்.  என் மீது தங்களுக்கு என்ன கோபமோ தங்களை காணச் செய்யாமல் செய்துவிட்டிரே.,தாள் திறக்க சம்பந்தரைப் பணித்திருக்க வேண்டும் அடியேன் அறியா மல் செய்துவிட்டேன். தங்களைக் காண சம்பந்தரும் வந்திருக்கிறார் என்றார் மனமுருகியபடி அதைக் கேட்டு எம்பெருமானும் உருகி இருவருக் கும் காட்சி அளித்தார்.

அப்பரே ஐயனைக் காணுங்கள் என்றார் சம்பந்தர். அப்பரடிகள் இறைவனைக் கண்டு பாதத்தில் பணிந்து, விழுந்து வணங்கினார். பாவ வடியர் பர வக் கண்டேன் என்று தொடங்கும் இனிய தமிழ் பாமாலையால் எம்பெருமானுக்கு  பூமாலை சாற்றினார். அதை ஏற்றுக்கொண்டு மறைந்தார் எம் பெருமான். இரு சிவநேசர்களது அன்பையும் பக்தியையும் கண்டு சுற்றியிருந்த தொண்டர்கள் மகிழ்ந்தனர். சில காலம் திருவாய்மூரில் தங்கியி ருந்து அங்கிருந்து திருமறைக்காட்டுக்கு சென்று தங்களது மடத்துக்கு திரும்பினார்கள்.

இருவரும் திருமறைக்காட்டில் தங்கியிருந்த போது சமணம் ஓங்கியிருந்த மதுரையில் அரசன் கூன் பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசி யார்,  குலச்சிறையாரும் சைவ மதத்தின் மீது பற்றுக்கொண்டு அதை தழைத்தோங்க செய்ய இவர்களை வரவேற்று சேதி அனுப்பியிருந்தார்கள். 
சம்பந்தர் பாண்டிய நாட்டுக்கு செல்ல தீர்மானித்ததை அறிந்து அப்பரடிகள் அவரை தடுக்க சென்றார். ஆனால் சம்பந்தர்…

 

newstm.in
                                                     

 


 
 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP