Logo

திருநாவுக்கரசர் நாயனார் -4

நடராஜனின் ஆடல் உருவத்தைக் கண்டு உருகி நின்ற நாவுக்கரசருக்கு அம்மையப்பனின் பாத கிண் கிணிகள் பரதமாட அவருடைய மலர்க் கரங்கள் அபிநயம் புரிவதைக் கண்டார். அது பார்க்க எப்போது வந்தாய் என்று கேட்பது போல் இருந்தது கருநட்ட கண்டன...
 | 

திருநாவுக்கரசர் நாயனார் -4

அம்மையப்பனை வேண்டியபடி தோளில் சூல முத்திரையும், இடபமுத்திரையும் பதித்து சென்றதைக் கண்டு மகிழ்ந்தார் திருநாவுக்கரசர். அத் தலத்தில் சில காலம் தங்கியிருந்தார்.பிறகு திருவரத்துறை, திருமுதுகுன்றம் தலங்களில் உள்ள அம்மையப்பனைத் தரிசித்து தில்லையை அடைந்தார். நடராசன் குடிகொண்டிருக்கும் கோபுரத்தைக் கண்டதும் கண்களில் கண்ணீர் பெருக பக்தி பெருக்கோடு வழிபட்டு, நடராஜரைத் தரி சித்தார்.

நடராஜனின் ஆடல் உருவத்தைக் கண்டு உருகி நின்ற நாவுக்கரசருக்கு அம்மையப்பனின் பாத கிண்கிணிகள் பரதமாட அவருடைய மலர்க்கரங் கள் அபிநயம் புரிவதைக் கண்டார். அது பார்க்க எப்போது வந்தாய் என்று கேட்பது போல் இருந்தது கருநட்ட கண்டன என்னும் விருத்தத்தையும், பக்தனாய் பாடமாட்டேன் என்னும் நேரிசையையும் பாடினார் திருநாவுக்கரசர். தினமும் பதிகம் பாடி மகிழ்ந்த நாவுக்கரசர் அங்கிருந்து சீர்காழி வந்து தோணியப்பரிடம் வந்தார்.

தோணியப்பரிடம் பக்தி கொண்டிருந்த திருஞான சம்பந்தமூர்த்தியார் நாவுக்கரசரை எல்லையில் வரவேற்று பக்தர்களோடு சென்று எதிர்கொண்டு வரவேற்றார். நாவுக்கரசர் தமது தந்தையைப் போன்று சிறப்பு மிக்கவர் என்பதை உணர்ந்து அப்பரே என்று அழைத்து மகிழ்ந்தார். இருவரும் தோணியப்பரைத் தரிசிக்க வந்தார்கள். சம்பந்தர் அப்பரிடம் உம்மை ஆட்கொண்ட அம்மையப்பனை இன்பத்தமிழால் பாடி மகிழ்வியுங்கள் என் றார்.உடன் பட்ட நாவுக்கரசர் பார் கொண்டு முடி என்னும் பைந்தமிழ் பாமாலையால்  திருத்தோணியப்பரை மகிழ்வித்தார்.

பிறகு சம்பந்தரும், அப்பர் என்று அழைக்கப்பட்ட நாவுக்கரசரும்  இணைந்து சிவத்தலங்களுக்கு சென்று இன்பத்தமிழால் பாமாலை பாடி மகிழ்ந்த னர். பிறகு சம்பந்தர் அப்பரிடம் விடைபெற்று சீர்காழி திரும்ப அப்பரடிகள் சிவத்தலங்களுக்கு பயணம் மேற்கொண்டார். கருப்பறியலூர், திருப்புன் கூர், நீடூர், திருக்குறுக்கை, வீராட்டம், திருநின்றவூர், திருநனிப்பள்ளி சென்று  திருச்சத்தி முற்றம் வந்தார். அங்கிருந்து சிவனாருக்கு தொண்டுகள் செய்து வந்தார். எம்பெருமானிடம் கூற்றுவன் வந்து எனது உயிரை கவர்ந்து செல்லும் முன் உமது திருவடி அடையாளம் பதியுமாறு அடியேன் சென்னி மீது  வைத்து அருள வேண்டும் என்று வேண்டினார். அவரது வேண்டுதலுக்கு செவி சாய்த்த எம்பெருமான் அவரை  திருநல்லூருக்கு வர வேண்டும் என்று கட்டளையிட்டார்.

ஆனந்தம் பொங்கிட அப்பரும் திருநல்லூருக்கு வந்தார். எம்பெருமானை வலம் வந்து வணங்கினார். திருச்சத்தி முற்றத்தில் நீவிர் உள்ளம் உருகி கேட்டதை யாம் அருளுகிறோம் என்று தமது திருப்பாதங்களை அப்பரின் சென்னியின் மீது சூட்டினார். அப்பரடிகள் நினைத்துருகும் அடியாரை எனத் தொடங்கி நல்லூர் பெருமனார் நல்லவரே எனப் பாடினார். அங்கிருந்து திங்களூர் வந்தடைந்த அப்பரடிகள், அப்பூதிஅடிகளார் இல்லத்தில் அருளினார். அப்போது அங்கு அமுது உண்ணும் போது அப்பூதி அடிகளின் மகன் அரவம் தீண்டிஉயிர் நீக்கவே அவனை பதிகம் பாடி உயிர் பெற்று எழச் செய்தார்.

அப்பூதியடிகளுடன் சில காலம்தங்கியிருந்து அங்கிருந்து திருப்பழனம் வழியாக நல்லூர், பழையாறை, வலஞ்சுழி, திருக்குடமுக்கு, திருச்சேறை, திருக்குடவாயில், திருநாரையூர், திருவாஞ்சியம், பெருவேளூர், திருவிளாமர் சிவத்தலங்களை வழிபட்டபடி திருவாரூரை வந்தடைந்தார், சிவத் தொண்டர்களின் வரவேற்பில் தியாகேசப்பெருமானை வணங்கி திருத்தாண்டகம் பாடி அத்தலத்திலேயே தங்கியிருந்து தியா கேசப் பெருமானை வழிபட்டு மகிழ்ந்தார். திருவாதிரை திருநாளைக் கண்டு களித்த அப்பர் அங்கிருந்து திருப்புகலூர் வந்தடைந்தார்.

திருநாவுக்கரசர் நாயனார் -4

சீர்காழியிலிருந்து சிவத்தலங்களைத் தரிசித்து வந்த சம்பந்தர் திருப்புகலூர் முருக நாயனார் மடத்தில் தங்கியிருந்தார். அப்பரடிகளும் அவ்விடம் வருவது கண்டு மகிழ்ந்து அவரை வரவேற்றார்.தொண்டர்கள் படைசூழ இருவரும் முருகநாயனார் மடத்துக்கு வந்தார்கள். அப்பரே திருவாதிரை திருநாள் மகிமையைப் பற்றி எம்பெருமானின் பெருமைகளைப் பற்றி உமது இனிய தமிழில் பாடுங்கள் என்றார் சம்பந்தர். தியாகேசப் பெருமா னின் திருக்கோல திருவிழா வைபவத்தை முத்துவிதான மணிப பொற்கவரி என்னும் பதிகத்தை தமிழால் மனமுருகி பாடினார். அதைக்கண்டு தாமும் தியாகேசப் பெருமானைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசை கொண்டார். சிலநாட்கள் அப்பரடியுடன் தங்கியிருந்து தியாகேசப்பெருமா னைத்  தரிசிக்க திருவாரூர் சென்றார்.

அங்கு தங்கி எம்பெருமானைவழிபட்டுவந்தார் அப்பரடிகள். அங்கிருந்து அருகில்உள்ள திருச்சாத்தமங்கை,திருமருகல்சிவத்தலங்களுக்கு சென்று வந்தார். சம்பந்தர் தியாகேசப்பெருமானைத் தரிசித்து திருப்புகலூரை வந்தடைந்தார். அவரை எதிர்கொண்டு வரவேற்ற அப்பரடி மீண்டு முருக நாயனார் மடத்தில் தங்கி சிவத்தொண்டு புரிந்து வந்தார்கள். பிறகு இருவரும் திருக்கடவூர் சென்று, காலனை உதைத்த விமலநாதரை அமுதத் தமிழால் பாடி குங்கிலியக் கலயனார் மடத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிலநாட்கள் தங்கியிருந்த சம்பந்தரும்,அப்பரடிகளும் அங்கிருந்து விடை பெற்று திருஆக்கூர் வழியாக சிவயாத்திரையைத் தொடங்கினார்கள் இரு சிவநேசரும்.

newstm.in                             

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP